இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே
ஏகமாய் எழும்பிடுவீர் சபையே
நாசமின் னானிலத்தில் வருதே
1. தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி
தளராமல் பாடுகள் சகித்தவரை
நோக்கியே நாம் ஓடிடுவோம்
தாங்கியே காப்பாரே கடைசி வரை --- இயேசு
2. பாவத்தில் மா ஜனம் அழிகிறது
லோகத்தின் ரட்சிப்பைக் கருதியே நாம்
நள்ளிரவோ நடுப்பகலோ
நருங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவோம் --- இயேசு
3. மேகத்தில் இயேசு தான் தோன்றிடும் நாள்
வேகத்தில் நெருங்கிடும் காலமிதில்
பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டே
பரமனுக்காய் கடும் சேவை செய்வோம் --- இயேசு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.