ஆராரோ ஆரிரரோ
தேவ பாலனுக்கு ஆரிரரோ (2)
1. ஆவகம் பூத்த விடிவெள்ளிக் கதிர்கள் ஆரவத் தலை நசுக்கும்
என்று வான் தூதர் மொழிந்தார்
கானாயர் மிளிர்ந்த கன்னியின் பாலனுக்கே --- ஆராரோ
2. ஆலோசனை மிகும் கர்த்தரின் தத்துவம் அதிசயம் அதிசயமே
இவர் அற்புதப் பாலகன்
இம்மானுவேலனாம் தாவீதின் பாலனுக்கே --- ஆராரோ
3. ஏழையின் பாவம் எட்டி உதைக்கவும் எளியோனை ரட்சிக்கவும்
தயை செய்தே இப் பூவகக் காரிருள் நீக்கிடும்
மெய் தேவ பாலனுக்கே --- ஆராரோ
4. தூபமாய் ஜெபமாய் போளமாயிருதயம் உனதடிக்கேப் படைத்தேன்
சொந்தம் ஊற்றியே பொன்னகை சோலையில்
பிறந்திடும் உன்னதன் பாலனுக்கே --- ஆராரோ
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.