Monday 30 December 2019

Deva Sabaiyile Devan Eluntharulinar தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

Deva Sabaiyile Devan Eluntharulinar தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் 1.பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம் வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் --- தேவ 2.ஆபத்து நாளில் அரணாம் கோட்டை நித்திய கன்மலையே யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே --- தேவ 3.இராப்பகலாய் தன் கண்மணிபோல் தூங்காது காப்பவரே தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் --- தேவ 4.உலகின் முடிவு வரைக்கும் நான் உன்னோடிருப்பேன் என்றாரே அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் --- தேவ 5.சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய ஏகமாய் துதித்திடுவோம் சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே --- தேவ 6.ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம் உன்னத தேவனையே ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம் --- தேவ

Sunday 29 December 2019

En Yesu Raja Saronin Roja என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

En Yesu Raja Saronin Roja என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா உம் கிருபை தந்தாலே போதும் (2) அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல உம் கிருபை முன் செல்ல அருளும் (2) 1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில் சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2) கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு 2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2) பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு 3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2) இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன் என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு

Konja Kalam yesuvukkaga கொஞ்ச காலம் இயேசுவுக்காக

Konja Kalam yesuvukkaga கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப் பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது (2) அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன் ஆனந்தக் கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன் 1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் (2) ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் --- கொஞ்ச 2. இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார் (2) என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன் --- கொஞ்ச 3. வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும் (2) என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார் எனக்கானந்தம் பொங்கிடுமே --- கொஞ்ச 4. பலியாக காணிக்கையாக படைத்தேனே உமக்காக (2) என்னை ஏற்றுக் கொள்ளும் இயேசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை --- கொஞ்ச

Sunday 22 December 2019

Vinnil Oor Natchathiram விண்ணில் ஓர் நட்சத்திரம்

Vinnil Oor Natchathiram விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவே தாவீதின் மரபினில் தோன்றினாரே மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை போற்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம் 1. மந்தையை காக்கும் ஆயர்களும் சாஸ்திரியர் மூவரும் வந்தனரே முன்னணை பாலனை கண்டனரே பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம் 2. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார் இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்

Vinnil Oor Natchathiram Thontridave விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

Vinnil Oor Natchathiram 1.விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவே தாவீதின் மரபினில் தோன்றினாரே மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை போற்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம் 2. மந்தையை காக்கும் ஆயர்களும் சாஸ்திரியர் மூவரும் வந்தனரே முன்னணை பாலனை கண்டனரே பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம் 3. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார் இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்

Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க 1. மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க எந்நாளும் அதிர நம் இயேசு பிறந்தார் தூதர் சேனைகள் எக்காளம் முழங்க எந்நாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 3. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள் இராஜன் இயேசுவை வாழ்த்திப்பாடுங்கள் மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள் இராஜன் இயேசுவை வாழ்த்திப்பாடுங்கள் – பிறந்தார்

Saturday 21 December 2019

Deva Palan Pirantheere தேவபாலன் பிறந்தீரே

Deva Palan Pirantheere தேவபாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவே நீர் வாழ்க வாழ்கவே --- தேவ பாலன் 1.மண் மீதினில் மாண்புடனே மகிமையாய் உதித்த மன்னவனே வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம் தூயா உன் நாமத்தையே --- தேவ பாலன் 2.பாவிகளை ஏற்றிடவே பாரினில் உதித்த பரிசுத்தரே பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் தூயா உன் நாமத்தையே --- தேவ பாலன்

Friday 20 December 2019

Van Velli Pragasikkuthe வான் வெள்ளி பிரகாசிக்குதே

Van Velli Pragasikkuthe வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுமே யேசு பரன் வரும் வேளை மனமே மகிழ்வாகிடுமே (2) 1. பசும் புல்லணை மஞ்சத்திலே திருப்பாலகன் துயில்கின்றான் அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார் நல் ஆசிகள் கூறிடுவார் – வான் 2. இகமீதினில் அன்புடனே இந்த செய்தியை கூறிடுவோம் மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம் அவர் பாதம் பணிந்திடுவோம் – வான் 3. இந்த மாடடை தொழுவத்திலே அவர் மானிடனாய் பிறந்தார் மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் நம் இயேசுவை வணங்கிடுவோம் --- வான்

Eerayiram Aandugal Mun ஈராயிம் ஆண்டுகள் முன்

Eerayiram Aandugal Mun 1.ஈராயிம் ஆண்டுகள் முன் மரியாளின் நன் மகனாய் தெய்வ மைந்தன் தோன்றினார் தேவன் பூவினில் வந்துதித்தார் வானதூதர் சேனைத்திரள் பாடும் தொனி கேளாய் மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதித்ததால் எக்காளம் முழங்க தூதர் சேனை பாடும் தொனி கேளாய் மானிடர் என்றும் வாழ்வாரே தேவன் பூவினில் உதித்ததால் 2.ராக்கால மந்தை மேய்ப்பர்கள் காக்க பேரொளி தோன்றினது தூதர்கள் கூட்டம் முழங்கின பாடல் தூரத்தில் கேட்டது 3.யோசேப்பும் மரியாளும் ஒன்றாய் பெத்தலகேம் ஊர் வந்தனர் பிள்ளையை கிடத்த இடமில்லை தேவ மைந்தனுக்கிடமில்லை 4.பெத்தலகேம் சத்திர முன்னனை மாட்டு தொழுவத்திலே பிறந்தார் மரியாளின் மகனாய் தோன்றினார் தேவன் பூவினில் வந்துதித்தார்

Wednesday 18 December 2019

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார்

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார் எண்ணிலடங்கா தூதரோடு என்னை மீட்ட இயேசு ராஜன் என்னை ஆளவே வருவார் 1.அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி 2.உலகில் நடப்பவை எல்லாம் அவர் வருகைக்கு உண்மையைக் கூறும் அவர் வருகை மிகவும் சமீபம் அவர் வரவை சந்திக்க ஆயத்தமா 3.வானில் ஓர் பேரொளி தோன்றும் விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும் மேற்கும் கிழக்கும் நடுங்க மேகங்கள் மீதே வருவார்

Tuesday 17 December 2019

Aa Ambara Umbara ஆ அம்பர உம்பர

Aa Ambara Umbara ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ 1. அன்பான பரனே அருள் மேவுங் காரணனே – நவ அச்சய சச்சிதா – ரட்சகனாகிய உச்சிதவரனே – ஆ 2. ஆதம் பாவமற, நீதம் நிறைவேற – அன்று அல்லிராவினில் வெல்லையடியினில் புல்லணையிற் பிறந்தார் – ஆ 3. ஞானியர் தேட வானவர் பாட – மிக நன்னய உன்னத – பன்னரு மேசையா இந்நிலம் பிறந்தார் – ஆ 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத கோத்திரன் பிறந்தார் – ஆ 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய்ப் பிறந்தார் – ஆ

Samathanam Oothum சமாதானம் ஓதும் இயேசு

Samathanam Oothum சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம் 1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர் அனுகூலரிவர் மனுவேலரிவர் --- சமாதானம் 2. நேய கிருபையின் ஓரு சேயர் இவர் பரம ராயர் இவர் நம தாயரிவர் --- சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் --- சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே அறிஞோர் தேடவே இடையோர் கூடவே --- சமாதானம் 5. மெய்யாகவே மே சையாவுமே நம்மை நாடினாரே கிருபை கூறினாரே --- சமாதானம் 6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே --- சமாதானம்

Monday 16 December 2019

Vana Thoothar Senaigal வான தூதர் சேனைகள்

Vana Thoothar Senaigal வான தூதர் சேனைகள் கீதங்களைப் பாடியே ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினாரே 1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில் தோன்றினர் தூதர்கள் அட்சணமே அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம் நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர் 2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏந்திடுவோம் சென்றனர் பாலனை தரிசிக்கவே வான் நட்சத்திரத்தின் ஒளியிலே மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர் 3. ஏவையின் சாபத்தை நீக்கிடவே மானிடர் ரூபமாய் ஜென்மித்தார் பாவிகளை மீட்டு ரட்சிக்கவே மனுக்குமாரன் வந்துதித்தார் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர்

Arasanai Kanamalirupomo அரசனைக் காணமலிருப்போமோ

Arasanai Kanamalirupomo அரசனைக் காணமலிருப்போமோ - நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ - யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ - யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே - யூத --- அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் - மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார் பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே - யூத --- அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார் - அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார் இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்- நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் - யூத --- அரசனை 4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம் வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் - யூத --- அரசனை 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை

Aanantha Geethangal Ennalum ஆனந்த கீதங்கள் எந்நாளும்

Aanantha Geethangal Ennalum ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம் 1.புதுமை பாலன் திருமனுவேலன் வறுமை கோலம் எடுத்தவதரித்தார் முன்னுரைப் படியே முன்னணை மீதே மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே --- ஆனந்த 2.மகிமை தேவன் மகத்துவ ராஜன் அடிமை ரூபம் தரித்திக லோகம் தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே --- ஆனந்த 3.மனதின் பாரம் யாவையும் நீக்கி மரண பயமும் புறம்பே தள்ளி மா சமாதானம் மா தேவ அன்பும் மாறா விஸ்வாசமும் அளித்தாரே --- ஆனந்த 4.அருமை இயேசுவின் திரு நாமம் இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும் கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும் வலிமை வாய்ந்திடும் நாமமிதே --- ஆனந்த 5.கருணை பொங்க திருவருள் தங்க கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம் எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் --- ஆனந்த

Sunday 15 December 2019

Chinnanjiru Suthane சின்னஞ்சிறு சுதனே

Chinnanjiru Suthane சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே மன்னர் மன்னவனே உன்னதத் திருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு கூடுண்டு பறவைகட்கு பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே வீடுண்டோ உந்தனுக்கு தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க தாரகம் நீரானீரோ கோரவன் பகைகள் பாரச்சுமைகள் தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு 2. அன்பின் தாய் தந்தை எல்லாம் எனக்கு உன்னதர் நீரல்லவோ துன்பம் துடைக்க பண்பினைக் காக்க என்னருள் நீரல்லவோ பாசமாய் வந்தே காசினை மீட்ட நேசமுள்ள ஏசுவே நீச சிலுவை தொங்கப் பிறந்த தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு

Thursday 12 December 2019

Aathuma Kartharai Thuthikintrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

Aathuma Kartharai Thuthikintrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ 1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை அனைவரும் பாக்கிய மென்பாரே முடிவில்லா மகிமை செய்தாரே – பல முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ – ஆத்துமா 2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர் பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ – ஆத்துமா 3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால் நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன் நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ – ஆத்துமா

Bethalaiyil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரை

Bethalaiyil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில் 4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில் 5. இவ்வளாவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம் எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Wednesday 11 December 2019

Bethalehem Oororam பெத்தலகேம் ஊரோரம்

Bethalehem Oororam 1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி --- பெத்தலகேம் 2.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் நேரம் --- பெத்தலகேம் 3.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூண்டோ ஆன பழங்கந்தை என்ன பாடோ பாடோ --- பெத்தலகேம் 4.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி இன்றிரவில் என்ன இந்த மோடி மோடி --- பெத்தலகேம் 5.ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்மகிமை கண்டு அட்டியின்றிகாபிரியேல் சொன்ன செய்தி கொண்டு நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு --- பெத்தலகேம்

Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ

Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் சரணங்கள் 1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப்பொருள் தானிவரோ சீருடன் புவி, வான் அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த மாவலரோ 2. மேசியா இவர் தானோ – நம்மை – மேய்த்திடும் நரர் கோனோ ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ 3. தித்திக்குந் தீங்கனியோ – நமது தேவனின் கண்மணியோ மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண் ணொளியோ 4. பட்டத்துத் துரை மகனோ – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ 5. ஜீவனின் அப்பமோதான் – தாகம் தீர்த்திடும்பானமோ தான் ஆவலாய் ஏழைகள் அடைந்திடு மடைக்கல மானவரி வர்தானோ

Monday 9 December 2019

Panivilum Ravinil பனிவிழும் ராவினில்

Panivilum Ravinil பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில் கன்னிமரி மடியில் விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட இயேசு பிறந்தாரே ராஜன் பிறந்தார் (2) நேசர் பிறந்தாரே (2) 1.மின்னிடும் வானக தாரகையே தேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவே பாலனைக் கண்டு பணிந்திடவே மகிழ்ந்தார் புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை --- பனி 2.மகிமையில் தோன்றிய தவமணியே மாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே மானிடனாக உதித்தவரே பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை --- பனி

Thuthiyungal Devanai துதியுங்கள் தேவனை

Thuthiyungal Devanai துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை - 2 1. அவரது அதிசயங்களை பாடி (2) அவர் நாமத்தை பாராட்டி அவரை ஆண்டவர் என்றறிந்து அவரையே போற்றுங்கள் ஆப்ரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள் 2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை (2) இடையூற்றினை போக்கினோனே கானானின் தேசத்தை காட்டினோனே கர்த்தரை போற்றுங்கள் ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள்

Thinam Thinam Nam Devanaiye தினம் தினம் நம் தேவனையே

Thinam Thinam Nam Devanaiye தினம் தினம் நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் (2) 1.இரக்கம் உருக்கம் நிறைந்தவரே மறவாமல் நம்மை காப்பவரே (2) சிறந்த நாமம் உடையவரே அரணான துணையாய் இருப்பவரே (2) - தினம் 2.அன்பின் உருவம் உடையவரே ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே (2) ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே அன்னையை போல அணைப்பவரே (2) - தினம் 3.விண்ணில் மகிமை உடையவரே மண்ணில் சமதானம் தருபவரே (2) என்னில் தினமும் வாழ்பவரே உன்னில் அழைத்தால் வருபவரே (2) - தினம்

Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை

Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க தன்னை ஈந்தது 1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுத் தொழுவில் பிறந்த திருவே உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின் அன்பின் உருவே — பொங்கி 2. கருவில் உதித்த தூய கனியே கவலை தீர்க்கும் கண்ணின் மணியே உள்ளமெல்லாம் பூரிக்கும் தூய்மையே உந்தன் வரவே — பொங்கி 3. விழிகள் திறந்த விந்தை தெய்வம் பழிகள் சுமந்த விந்தை தெய்வம் உலகெல்லாம் தொழுதிடும் உன்னதம் உந்தன் நாமம் — பொங்கி

Saturday 7 December 2019

Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி

Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம் தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் 1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார் அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம் 2. உண்மையின் ஊழியம் செய்திடவே வானவர் இயேசு பூவில் வந்தார் வல்லவர் வருகிறார் நம் மேய்ப்பர் வருகிறார் அல்லேலுயா பாடுவோம் மேய்ப்பரை வாழ்த்துவோம் 3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து வேதத்தின் ஓளியை பரப்பினாரே இருளை அகற்றுவார் நம்மை இரட்சித்து நடத்துவார் அல்லேலுயா பாடுவோம் தேவ மைந்தரை வாழ்த்துவோம்

Wednesday 4 December 2019

Santhosha Vinnoliye சந்தோஷ விண்ணொளியே

Santhosha Vinnoliye சந்தோஷ விண்ணொளியே இயேசு சாந்த சொரூபியவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா பாரில் மலர்ந்துதித்தார் 1.இன்ப பரலோகம் துறந்தவர் துன்பம் சகித்திட வந்தவர் பாவ மனிதரை மீட்டவர் பலியாகவே பிறந்தார் 2.பூலோக மேன்மைகள் தேடாதவர் பேரும் புகழும் நாடாதவர் ஒன்றான மெய் தேவன் இயேசுவே என் ஆத்ம இரட்சகரே 3.ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர் தேவாதி தேவன் சுதன் இவர் இயேசுவல்லால் வேறு யாருமில்லை இரட்சண்யம் ஈந்திடவே 4.ஆடம்பர வாழ்வை வெறுத்தவர் அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர் எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும் இயேசுவைப் பின்பற்றுவோம் 5.எங்கள் சமாதானப் பிரபு இவர் இயேசு அதிசயமானவர் வேதம் நிறைவேறும் காலமே வேகம் வருகின்றாரே

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார் இந்த லோகத்தை மீட்டிடவே இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார் இந்த நற்செய்தி சாற்றிடுவோம் 1.மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள் மந்தையைக் காத்திருக்க தூதர்கள் வானத்திலே தோன்றி தேவனைத் துதித்தனரே--- இயேசு 2.ஆலோசனை கர்த்தரே இவர் அற்புதமானவரே விண் சமாதான பிரபு சர்வ வல்லவர் பிறந்தனரே --- இயேசு 3.மாட்டுத் தொழுவத்திலே பரன் முன்னணையில் பிறந்தார் தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர் ஏழ்மையின் பாதையிலே --- இயேசு 4.பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப் போளமும் காணிக்கையே சாட்சியாய் கொண்டு சென்றே – வான சாஸ்திரிகள் பணிந்தனரே --- இயேசு 5.அன்னாளும் ஆலயத்தில் அன்று ஆண்டவரை அறிந்தே தீர்க்கதரிசனமே கூறி தூயனைப் புகழ்ந்தனரே --- இயேசு 6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர் வாக்கு மாறாதவரே கண்ணிமை நேரத்திலே நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் --- இயேசு

Tuesday 3 December 2019

Rajan Thaveethurillulla ராஜன் தாவீதூரிலுள்ள


Rajan Thaveethurillulla 1. ராஜன் தாவீதூரிலுள்ள மாட்டுக் கொட்டில் ஒன்றிலே கன்னி மாதா பாலன் தன்னை முன்னணையில் வைத்தாரே மாதா, மரியம்மாள்தான் பாலன் இயேசு கிறிஸ்துதான் 2. வானம் விட்டுப் பூமி வந்தார் மா கர்த்தாதி கர்த்தரே அவர் வீடோ மாட்டுக் கொட்டில் தொட்டிலோ முன்னணையே ஏழையோடு ஏழையாய் வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் 3. ஏழையான மாதாவுக்கு பாலனாய்க் கீழ்ப்படிந்தார் பால்ய பர்வம் எல்லாம் அன்பாய் பெற்றோர்க்கு அடங்கினார் அவர்போல் கீழ்ப்படிவோம் சாந்தத்தோடு நடப்போம் 4. பாலர்க்கேற்ற பாதை காட்ட பாலனாக வளர்ந்தார் பலவீன மாந்தன் போல துன்பம் துக்கம் சகித்தார் இன்ப துன்ப நாளிலும் துணை செய்வார் நமக்கும் 5. நம்மை மீட்ட நேசர் தம்மை கண்ணால் கண்டு களிப்போம் அவர் தாமே மோட்ச லோக நாதர் என்று அறிவோம் பாலரை அன்பாகவே தம்மிடத்தில் சேர்ப்பாரே 6. மாட்டுத் தொழுவத்திலல்ல தெய்வ ஆசனத்திலும் ஏழைக் கோலமாக அல்ல ராஜ கிரீடம் சூடியும் மீட்பர் வீற்றிருக்கின்றார் பாலர் சூழ்ந்து போற்றுவார்

Monday 2 December 2019

Maanida Uruvil Avatharitha மானிட உருவில் அவதரித்த

Maanida Uruvil Avatharitha மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1.ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய் அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் --- மானிட 2.கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய ரத்தம் பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி --- மானிட 3.இயேசுவின் நாமத்தில் வல்லமையே இதை நாடுவோர்க்கு விடுதலையே துன்ப கட்டுகள் காவல் சிறைகள் இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா --- மானிட 4.அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார் அதிசயங்கள் அவர் காட்டிடுவார் உண்மை நிறைந்த உள்ளம் திறந்து உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் --- மானிட 5.கர்த்தர் உன்னை இனி கைவிடாரே கடைசி வரை தளராதே நம்பு என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர் இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார் --- மானிட

Sunday 1 December 2019

Bakthare Vaarum – பக்தரே வாரும்

Bakthare Vaarum 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை. 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர் தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன் விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர் 4. இயேசுவே, வாழ்க இன்று ஜென்மித்தீரே புகழும் ஸ்துதியும் உண்டாகவும் தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.

Kel Jenmitha Rayarkkae கேள் ஜென்மித்த ராயர்க்கே

Kel Jenmitha Rayarkkae 1. கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே அவர் பாவ நாசகர் சமாதான காரணர் மண்ணோர் யாரும் எழுந்து விண்ணோர் போல் கெம்பீரித்து பெத்லேகேமில் கூடுங்கள் ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவே லோகம் ஆளும் நாதரே ஏற்ற காலம் தோன்றினீர் கன்னியிடம் பிறந்தீர் வாழ்க நர தெய்வமே அருள் அவதாரமே நீர் இம்மானுவேல் அன்பாய் பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவே வாழ்க நீதி சூரியனே மீட்பராக வந்தவர் ஒளி ஜீவன் தந்தவர் மகிமையை வெறுத்து ஏழைக்கோலம் எடுத்து சாவை வெல்லப் பிறந்தீர் மறு ஜென்மம் அளித்தீர்