Saturday 30 May 2020

Neer Thantha Nanmai Yavaiyum நீர் தந்த நன்மை யாவையும்

Neer Thantha Nanmai Yavaiyum 1. நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்வேனே. 2. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. 3. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர் இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தாங்கினீர். 4. அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர் கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே, பொழிந்தீர். 5. இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன். 6. புகழ்ச்சி துதி தோத்திரம் ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும் எழும்பத் தகுமே.

Friday 29 May 2020

Paavikkai Maritha Yesu பாவிக்காய் மரித்த இயேசு




Paavikkai Maritha Yesu 1. பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார் கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா (3) கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார் திகிலோடு (3) மேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே அவர் காயம் (3) தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும் ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும் அல்லேலூயா (3) வல்ல வேந்தே, வந்திடும்.

Thursday 28 May 2020

Immanuvele Vaarum Vaarume இம்மானுவேலே வாரும் வாருமே



Immanuvele Vaarum Vaarume 1. இம்மானுவேலே வாரும் வாருமே மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித்தவிக்கும் மகிழ் மகிழ் சீயோனின் சபையே இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த்துளிரே வாருமே பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே பாதாள ஆழம் நின்று ரட்சியும் வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3. அருணோதயமே, ஆ வாருமே வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே மந்தார ராவின் மேகம் நீக்கிடும் இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும். 4. தாவீதின் திறவுகோலே, வாருமே விண் வாசலைத் திறந்து தாருமே ஒடுக்கமாம் நல் வழி காத்திடும் விசாலமாம் துர்ப்பாதை தூர்த்திடும். 5. மா வல்ல ஆண்டவா, வந்தருளும் முற்காலம் சீனாய் மலைமீதிலும் எக்காளம் மின்னலோடு தேவரீர் பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.

Wednesday 27 May 2020

Geetham Geetham Jaya Jaya Geetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்



Geetham Geetham Jaya Jaya Geetham கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் 1. பார் அதோ கல்லறை மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுதுபார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம் 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ கீதம் 3. அன்னா காய்பா ஆசாரியர் சங்கம் அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா பூத கணங்கள் இடி ஒலி கண்டு பயந்து நடுங்குகின்றார் – ஆ ஆ கீதம் 4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம் வருகிறார் ஜெயவீரன் - நம் மேள வாத்தியம் கை மணி பூரிகை எடுத்து முழங்கிடுவோம் – ஆ ஆ கீதம்

Gnana Naatha vanam Boomi ஞான நாதா வானம் பூமி




Gnana Naatha vanam Boomi 1. ஞான நாதா வானம் பூமி நீர் படைத்தீர் ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர் வான தூதர் காக்க எம்மை ஊனமின்றி நாங்கள் தூங்க ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர் 2. பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும் சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும் காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும் ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும் 3. நாளில் காரும் ராவில் காரும் ஆயுள் எல்லாம் வாழும் காலம் மா கரத்தால் அமைதியாம் சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து ஆகிடவே தூதர் போன்று, ஆண்டிடவே மாட்சியோடு உம்மோடென்றும்

Monday 25 May 2020

Ennodirum Maa Nesa Karthare என்னோடிரும் மா நேச கர்த்தரே



Ennodirum Maa Nesa Karthare 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே மற்றோர் சகாயம் அற்றபோதிலும் நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும் கண் கண்ட யாவும் மாறி வாடிடும் மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல், சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும் நீர் பாவி நேசரே என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும் பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன் நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும் நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். 6. நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும் சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.

Maa Matchi Karthar மா மாட்சி கர்த்தர்



Maa Matchi Karthar 1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம் நம் கேடகம் காவல் அனாதியானோர் மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர் 2. சர்வ வல்லமை தயை போற்றுவோம் ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம் குமுறும் மின்மேகம் கோபரதமே கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே 3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம் என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம் ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமே மீட்பர் நண்பர் காவலர் சிஷ்டிகரே 4. ஆ, சர்வ சக்தி சொல்லொண்ணா அன்பே மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும் மெய் வணக்கமாய் துதி பாடலோடும்

Sunday 24 May 2020

Munnorin Deivamam முன்னோரின் தெய்வமாம்



Munnorin Deivamam 1. முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம் அநாதியானோர் அன்பராம் மா யெகோவா சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும் பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே 2. உன்னத பரனை தூய தூதர் சேனை நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார் நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும் மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார் 3. மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே பிதா சுதன் சுத்தாவிக்கே துதி என்றும் முன்னோர்க்கும் நமக்கும் தெய்வம் ஆனோர்க்கென்றும் வல்லமை மகத்துவமும் உண்டாகவும்

Saturday 23 May 2020

Uyirthelunthare Alleluya உயிர்தெழுந்தாரே அல்லேலூயா



Uyirthelunthare Alleluya உயிர்தெழுந்தாரே அல்லேலூயா ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே 1. கல்லறை திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்ல பிதாவின் செயலிதுவே 2. மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3. எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கினாரே எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4. மரணமுன் கூர் எங்கே பாதாளமுன் ஜெயமெங்கே சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார் சபையோரே துதி சாற்றிடுவோம் 5. ஆவியால் இன்றும் என்றும் ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 6. பரிசுத்தமாகுதலை பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம் எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக எழும்புவோமே மகிமையிலே

Friday 22 May 2020

Boologathaare Yavarum பூலோகத்தாரே யாவரும்



Boologathaare Yavarum 1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்; ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள். 2. பராபரன் மெய்த் தெய்வமே நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்; நாம் ஜனம், அவர் ராஜனே நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். 3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்; சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள். 4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே; அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. 5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

Thursday 21 May 2020

Devanbai Kaankirom Aananthamae தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே

 Devanbai Kaankirom Aananthamae

1. தேவன்பைக் காண்கிறோம் ஆனந்தமே அவர்தாம் கொடுத்த வேதத்திலே வேதத்தின் மாட்சிமை யாவிலுமே இயேசுவின் அன்புதான் பேரின்பமே ஆனந்தம் இயேசு அன்பு வைத்தார் என் மேலுமே அன்பு வைத்தார் ஆனந்தம் இயேசு அன்பு வைத்தார் என் மேலுமே வைத்தார் 2. அவ்வன்பை மறந்து திரிந்தாலும் எங்குமே அதென்னை தொடர்ந்திடும் மீட்பரின் பாசத்தை நினைக்கவே ஓடுவேன் அன்பரின் கரத்துக்கே 3. மகாராஜன் மகிமை காட்சி காண்பேன் நித்தியம் அவர் மேல் பாடிடுவேன் ஒப்பில்லா ஓரின்ப கீதத்தையே ஆனந்தம் என் நாதர் அன்பு என்றே 4. மீட்பரை அன்பு தான் கொண்டு வந்தே மாளவும் செய்ததே குருசிலே என்னையும் நேசித்தார் நிச்சசயமே இவ்வன்பர் நேசிப்பேன் எந்நாளுமே 5. தேறுதல் அடைந்தேன் நிச்சயத்தால் பாக்கியம் பெறுவேன் நம்பிக்கையால் சாத்தானும் ஓடினான் என்னை விட்டே இயேசுவின் அன்பை நான் கூறவுமே

Wednesday 20 May 2020

Sathiya Vedham Baktharin Geetham சத்திய வேதம் பக்தரின் கீதம்

Sathiya Vedham Baktharin Geetham சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்தும் பக்தனை தேற்றிடும் ஒளஷதம் 1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன் இதயம் மகிழும் கண்கள் தெளியும் இருண்ட ஆத்துமா உயிரடையும் 2. பேதைகளிடம் ஞானம் அருளும் வேத புத்தகம் மேன்மை தரும் இரவும் பகலும் இதன் தியானம் இனிமை தங்கும் தனிமையிலும் 3. வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார் இலைகள் உதிரா மரங்கள் போல இவர்கள் நல்ல கனி தருவார் 4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் கள்ளங் கபடெல்லாம் அகற்றும் கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும் கனமடைய வழி நடத்தும் 5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கன்மலையையும் நொறுக்கிடுமே இதய நினைவை வகையாய் அறுக்கும் இரு புறமும் கருக்குள்ளதே 6. வானம் அகலும் பூமி அழியும் வேத வசனம் நிலைத்திருக்கும் பரமன் வேதம் எனது செல்வம் பரவசம் நிதம் அருளும்

Tuesday 19 May 2020

Alangara Vaasalale அலங்கார வாசலாலே

Alangara Vaasalale 1. அலங்கார வாசலாலே கோவிலுக்குள் போகிறேன் தெய்வ வீட்டின் நன்மையாலே ஆத்துமத்தில் பூரிப்பேன் இங்கே தெய்வ சமூகம் மெய் வெளிச்சம், பாக்கியம். 2. கர்த்தரே, உம்மண்டை வந்த என்னண்டைக்கு வாருமேன் நீர் இறங்கும் போதனந்த இன்பத்தால் மகிழுவேன். என்னுட இதயமும் தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர என் ஜெபம் புகழ்ச்சியும் நல்ல பலியாக ஏற உமதாவியைக் கொடும். தேகம் ஆவி யாவையும் சுத்தமாக்கியருளும். 4. நல்ல நிலத்தில் விழுந்த விதை பயிராகுமே நானும் அவ்வாறே மிகுந்த கனிகளைத் தரவே வசனத்தைக் காக்க நீர் ஈவளிக்கக் கடவீர். 5. விசுவாசத்தை விடாமல் அதில் பலப்படவும் ஒருக்காலும் தவறாமல் உம்மை நான் பின்செல்லவும், மெய்வெளிச்சத்தை நீரே என்னில் வீசும் கர்த்தரே. 6. சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன் நீர் இப்பாழ் நிலத்திலே பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன் நல் தியானத்துடனே தாரும் ஜீவ பானத்தை தீரும் பசிதாகத்தை.

Sunday 17 May 2020

Evvannamaaga Karthae எவ்வண்ணமாக கர்த்தரே

Evvannamaaga Karthae 1. எவ்வண்ணமாக கர்த்தரே உம்மை வணங்குவேன் தெய்வீக ஈவைப் பெறவே ஈடென்ன தருவேன் 2. அநேக காணிக்கைகளால் உம் கோபம் மாறுமோ நான் புண்ணிய கிரியை செய்வதால் கடாட்சம் வைப்பீரோ 3. பலியின் ரத்தம் வெள்ளமாய் பாய்ந்தாலும் பாவத்தை நிவிர்த்தி செய்து சுத்தமாய் ரட்சிக்க மாட்டாதே 4. நான் குற்றவாளி ஆகையால் என் பேரில் கோபமே நிலைத்திருந்து சாபத்தால் அழிதல் நியாயமே 5. ஆனால் என் பாவம் சுமந்து ரட்சகர் மரித்தார் சாபத்தால் தலை குனிந்து தம் ஆவியை விட்டார் 6. இப்போதும் பரலோகத்தில் வேண்டுதல் செய்கிறார் உம் திவ்விய சந்நிதானத்தில் என்னை நினைக்கிறார் 7. இவ்வண்ணமாக கர்த்தரே உம்மை வணங்குவேன் என் நீதி இயேசுகிறிஸ்துவே அவரைப் பற்றினேன்.

Saturday 16 May 2020

Yesuve Manalane இயேசுவே மணாளனே

Yesuve Manalane இயேசுவே மணாளனே – என் நம்பிக்கையின் தீபமே என் ஆசை ஒன்று மாத்திரமே விண் வீட்டில் உம்மைக் காண்பதே காணுவேன், காணுவேன் நேசரை நான் காணுவேன் அந்நிய கண்களாலே அல்ல சொந்த கண்ணால் காணுவேன் 1. கண்ணீரின் பள்ளத்தாக்கிதே உம்மில் மறைந்தே வாழுவேன் கண் மூடும் நொடி நேரத்தில் சேர்வேன் நான் பியூலா தீரத்தில் – காணுவேன் 2. மேகம் எழும்பி செல்லுதே கானானின் ஓரம் காணுதே ஆசாபாசம் ஆகும் கட்டையே அறுத்தெறிந்திடுவோமே – காணுவேன் 3. மண்ணில் மறைந்த சுத்தரும் மண் மீது வாழும் சித்தரும் விண்ணில் எக்காளம் கேட்கையில் வேகம் செல்வாரே மேகத்தில் – காணுவேன் 4. உயர்த்தெழும்பும் காலையில் தூதர் சங்கீதம் கேட்கையில் தங்க கிரீட கூட்டத்தில் என்பேர் அழைக்கும் நேரத்தில் – காணுவேன் 5. என் ஓட்டமும் பிரயாசமும் நான் காத்த என் விசுவாசமும் வீணல்ல அது சத்தியம் நேசரைக் காண்பேன் நித்தியம் – காணுவேன்

Friday 15 May 2020

Igathin Thukkam Thunbam இகத்தின் துக்கம் துன்பம்

Igathin Thukkam Thunbam 1. இகத்தின் துக்கம் துன்பம் கண்ணீரும் மாறிப்போம் முடிவில்லாத இன்பம் பரத்தில் பெறுவோம் 2. இதென்ன நல்ல ஈடு துன்பத்துக்கின்பமா பரத்தில் நிற்கும் வீடு மரிக்கும் பாவிக்கா 3. இப்போது விழிப்போடு போராட்டம் செய்குவோம் விண்ணில் மகிழ்ச்சியோடு பொற் கிரீடம் சூடுவோம் 4.இகத்தின் அந்தகார ராக்காலம் நீங்கிப்போம் சிறந்து ஜெயமாக பரத்தில் வாழுவோம் 5. நம் சொந்த ராஜாவான கர்த்தாவை நோக்குவோம் கடாட்ச ஜோதியான அவரில் பூரிப்போம்

Opillatha Divya Anbe ஒப்பில்லாத திவ்ய அன்பே

Opillatha Divya Anbe 1 ஒப்பில்லாத திவ்ய அன்பே மோட்சானந்தா தேவரீர் எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே அருள் பூர்த்தியாக்குவீர் மா தயாள இயேசு நாதா அன்பு மயமான நீர் நைந்த உள்ளத்தில் இறங்கி உம் ரட்சிப்பால் சந்திப்பீர் 2 உமது நல் ஆவி தாரும் எங்கள் நெஞ்சு பூரிப்பாய் உம்மில் சார நீரே வாரும் சுத்த அன்பின் வடிவாய் பாவ ஆசை எல்லாம் நீக்கி அடியாரை ரட்சியும் விசுவாசத்தைத் துவக்கி முடிப்பவராய் இரும் 3 வல்ல நாதா எங்கள்பேரில் மீட்பின் அன்பை ஊற்றுமே விரைவாய் உம் ஆலயத்தில் வந்து என்றும் தங்குமே வானோர்போல நாங்கள் உம்மை நித்தம் வாழ்த்திச் சேவிப்போம் ஓய்வில்லாமல் உமதன்பை பூரிப்பாய்க் கொண்டாடுவோம் 4 உந்தன் புது சிஷ்டிப்பையும் சுத்த தூய்மையாக்குமேன் உந்தன் திவ்விய ரட்சிப்பையும் பூரணப்படுத்துமேன் எங்கள் கிரீடம் உம்முன் வைத்து அன்பில் மூழ்கிப் போற்றியும் மேன்மை மேலே மேன்மை பெற்று விண்ணில் வாழச் செய்திடும்

Thursday 14 May 2020

Vilaintha Palanai Aruppaarillai விளைந்த பலனை அறுப்பாரில்லை

Vilaintha Palanai Aruppaarillai விளைந்த பலனை அறுப்பாரில்லை விளைவின் நற்பலன் வாடிடுதே அறுவடை மிகுதி ஆளோ இல்லை அந்தோ மனிதர் அழிகின்றாரே 1. அவர் போல் பேசிட நாவு இல்லை அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை எண்ணிலடங்கா மாந்தர் சத்தம் உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த 2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர் ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே திறப்பின் வாசலில் நிற்பவர் யார் தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த 3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய் ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய் விரைந்து சென்று சேவை செய்வாய் விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த 4. ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை சபைதனில் விளங்கிட செயல்படுவாய் நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல் நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த 5. ஆவியின் வரங்கள் ஒன்பதனை ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய் சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய் சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த 6. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய் உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய் கர்த்தர் நாட்டின தோட்டத்திலே கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த

Wednesday 13 May 2020

Anpin Andavar Varugai அன்பின் ஆண்டவர் வருகை

Anpin Andavar Varugai அன்பின் ஆண்டவர் வருகை வேகம் நெருங்குதே ஆத்தும ஆதாயம் செய்வோம் வேகம் வேகமே 1. அழிவுக்கு நேராய் விரைந்திங்கு செல்வோர் ஆயிரம் ஆயிரமாய் நம்முன் காணுதே அறியாதவர் போல் அமைதியாய் இருந்தாலோ ஆக்கினை நம்மேல் வருமே வேகம் வேகமே (2) 2. நோவாவின் காலம் போலவே மக்கள் விற்பதும் கொள்வதுமாகவே இன்றே ஆக்கினைக்கு நேராகவே விரைந்து செல்கின்றார் ஆவன செய்வீர் அதற்காய் வேகம் வேகமே (2) 3. கெர்ச்சிக்கும் சிங்கம் போலவே சாத்தான் யார் யாரை விழுங்கலாமோ என்று நிற்கிறான் அவன் தன் வலையில் சேர்க்கும் லோக மாந்தரை அன்பரின் ஆட்சியில் சேர்ப்போம் வேகம் வேகமே (2) 4. அந்தகாரத்தின் நாள் நெருங்கும் முன் அண்டிக்கொள் அன்பரின் இன்ப கரத்தை என்று நாம் கூறியே அவர்க்காய் மக்களை ஆதாயப்படுத்திடுவோம் வேகம் வேகமே (2) 5. எக்காள சத்தம் தொனித்திடும் வேளை ஏகமாய் யாவரும் ஏகிடுவோமே ஏசுவுக்காய் ஜீவிக்காதோர் அந்த நாளிலே ஏற்றுக்கொள்ளப்படார் என்போம் வேகம் வேகமே (2)

Tuesday 12 May 2020

Ulagor Unnai Pagaithalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்

Ulagor Unnai Pagaithalum 1. உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூருவாயோ உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயோ (2) உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2) 2. உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயோ ஊழியம் செய்ய வருவாயா (2) 3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப்புல் வெளியில் மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஒடுவாயோ (2) 4. இயேசு என்றால் என்ன விலை என்றே கேட்டிடும் எத்தனை பேர் பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா (2) 5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே யாரையாவது அனுப்பிடுமே யாரை நான் அனுப்பிடுவேன் யார்தான் போவார் எனக்காக (2)

Monday 11 May 2020

Alleluya Namathandavarai அல்லேலூயா நமதாண்டவரை

Alleluya Namathandavarai அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் அவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து 1. மாட்சியான வல்ல கர மகத்துவத்துக்காகவும் துதிப்போம் மா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் மாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும் மாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம் 2. அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டு துதிப்போம் அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும் அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம்

Sunday 10 May 2020

Unnathathin Thoothargalae உன்னதத்தின் தூதர்களே

Unnathathin Thoothargalae 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள் (2) ராஜாதி ராஜன் யேசு யேசு மகா ராஜன் அவர் ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க அவர் திருநாமமே விளங்க அவர் திருநாமமே விளங்க அல்லேலூயா அல்லேலூயா அல்லேலுயாவே அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே (2) 2. நாலாதேசத் திலுள்ளோரே நடந்து வாருங்கள் மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் (2) 3. நல்மனதோடு சொல்கிறேன் நாட்டார்களே நீங்கள் புன்னகையொடு நிற்பானேன் பூமுடி சூட்டுங்கள் (2) 4. குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள் வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள் (2) 5. யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள் ராஜாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் (2) 6. சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள் மகத்வ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள் (2)

Saturday 9 May 2020

Aandava Prasannamagi ஆண்டவா பிரசன்னமாகி

Aandava Prasannamagi 1. ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் தாசர் மீதில் ஆசிர்வாதம் ஊற்றிடும் அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப் பண்ணுவீர் ஆசையோடு நிற்கிறோமே ஆசீர்வாதம் ஊற்றுவீர் 2. தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடு கூடினோம் உந்தன் திவ்ய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம் 3. ஆண்டவா மெய்பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர் அன்பின் ஜ்வாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர் 4. தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே கடாட்சியும் பெந்தே கோஸ்தின் திவ்ய ஈவை தந்து ஆசிர்வதியும்

Alleluya Devanuke அல்லேலூயா தேவனுக்கே

Alleluya Devanuke 1. அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா ராஜனுக்கே தேவாதி தேவன் ராஜாதி ராஜன் என்றென்றும் நடத்திடுவார் ஆராதனை ஆராதனை (2) அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கே 2. வெண்மேகமே வெண்மேகமே வெளிச்சம் தாரும் இந்நேரமே கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி கனிவோடு நடத்திடுவார் 3. துணையாளரே துணையாளரே துன்பத்தில் தாங்கும் மணவாளரே அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி ஆற்றலைத் தந்திடுவார்

Friday 8 May 2020

Aarathanai Nayagan Neere ஆராதனை நாயகர் நீரே

Aarathanai Nayagan Neere ஆராதனை நாயகர் நீரே ஆராதனை வேந்தனும் நீரே ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு நீரே விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே முழங்கால் யாவும் முடங்கிடவே மகிழ்வுடன் துதித்திடுவேன் 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன்

Thursday 7 May 2020

Irangumae En Yesuvae இரங்குமே என் இயேசுவே

Irangumae En Yesuvae இரங்குமே என் இயேசுவே இரக்கத்தின் ஐசுவரியமே கூவி கதறியே ராவும் பகலுமே கெஞ்சும் ஜெபம் கேளுமே 1. உற்றார் பெற்றோரும் குடும்பங்களும் மற்றும் பலர் மாள்வதைக் கண்டு சகித்திடா தென்றும் ஜெபித்திடும் கண்ணீர் ஜெபங் கேளுமே 2. ஐந்து கண்டத்தின் ஜனத்திற்காக ஐங்காயங்கள் ஏற்றீரே தேவன் இல்லை என்று கூறி மடிவோரைத் தேடும் ஜெபங்கேளுமே 3. தாரும் உயிர் மீட்சி சபைதனில் சோரும் உள்ளம் மீளவே கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற பக்தர் ஜெபங் கேளுமே

Wednesday 6 May 2020

Naan Thoothanaga Vendum நான் தூதனாக வேண்டும்

Naan Thoothanaga Vendum 1. நான் தூதனாக வேண்டும் விண் தூதரோடேயும் பொற் கிரீடம் தலை மேலும் நல் வீணை கையிலும் நான் வைத்துப் பேரானந்தம் அடைந்து வாழுவேன் என் மீட்பரின் சமூகம் நான் கண்டு களிப்பேன். 2. அப்போது சோர்வதில்லை கண்ணீரும் சொரியேன் நோய், துக்கம், பாவம், தொல்லை பயமும் அறியேன் மாசற்ற சுத்தத்தோடும் விண் வீட்டில் தங்குவேன் துதிக்கும் தூதரோடும் நான் என்றும் பாடுவேன். 3. பிரகாசமுள்ள தூதர் நான் சாகும் நேரத்தில் என்னைச் சுமந்து போவார் என் இயேசுவண்டையில் நான் பாவியாயிருந்தும் என் மீட்பர் மன்னித்தார் எண்ணில்லாச் சிறியோரும் என்னோடு வாழுவார். 4. மேலான தூதரோடும் நான் தூதன் ஆகுவேன் பொற் கிரீடம் தலைமேலும் தரித்து வாழுவேன் என் மீட்பர்முன் ஆனந்தம் நான் பெற்று வாழ்வதே வாக்குக் கெட்டாத இன்பம் அனந்த பாக்கியமே.

Unnatha Salame உன்னத சாலேமே




Unnatha Salame 1. உன்னத சாலேமே என் கீதம், நகரம் நான் சாகும் நேரமே மேலான ஆனந்தம் விண் ஸ்தானமே கர்த்தா எந்நாள் உம் திருத் தாள் சேவிப்பேனே 2. பூவில் தகாரென்றே தீர்ப்புற்ற நாதனார் தம் தூதரால் அங்கே சீர் வாழ்த்தல் பெறுவார் 3. அங்கே பிரயாணத்தை பிதாக்கள் முடிப்பார் வாஞ்சித்த பிரபுவை ஞானியர் காணுவார் 4. தூய அப்போஸ்தலர் சந்தோஷமாய்க் காண்பேன் பொன் வீணை வாசிப்பர் இசை பாடக் கேட்பேன் 5. சீர் ரத்தச் சாக்ஷிகள் வெள்ளங்கி பூணுவார் தங்கள் தழும்புகள் கொண்டு மாண்படைவார் 6. கேதேர் கூடாரத்தில் இங்கே வசிக்கிறேன் நல் மோட்ச பாதையில் உம்மைப் பின்பற்றுவேன்

Tuesday 5 May 2020

Pani Pola Peyum பனி போல பெய்யும்

Pani Pola Peyum பனி போல பெய்யும் பரிசுத்தரே மழையாக பொழியும் ஆவியே ஆவியே ஆவியே மழையாக பொழியும் ஆவியே -பனி 1. மென்மையானவரே மேகஸ்தம்பமே ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி (2) ஆனந்த தைலமே (2) – பனி 2. யுத்தங்கள் செய்பவரே யோர்தானை பிளந்தவரே பெருமழையாய் பிரவேசித்த (2) உள்ளங்கை மேகமே (2) – பனி 3. வறண்ட நிலங்களிலே வாய்க்கால்கள் அமைப்பவரே கனிதரும் மரமாக (2) காப்பாற்றி வளர்ப்பவரே (2) – பனி 4. ஆவியானவரே ஆற்றல் தருபவரே தேற்றரவே துணையாளரே (2) விண்ணகத் தூபமே (2) – பனி 5. அக்கினியானவரே அன்பின் ஜுவாலையே ஆசீர்வதியும் அரவணையும் (2) ஆன்மீகத் தீபமே (2) – பனி

Devane Ummai Naan தேவனே உம்மை நான்

Devane Ummai Naan தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் 1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா சுத்தமான தண்ணீர் இரசமானதுவே அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் 2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் ருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர் 3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உண்டு போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா மாறிடும் உலகில் மாறாதவர் நீரே உம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம்

Monday 4 May 2020

Thevan Thantha Valvallavaa தேவன் தந்த வாழ்வல்லவா

Thevan Thantha Valvallavaa தேவன் தந்த வாழ்வல்லவா அதை வேதனை என்று சொல்லலாமா தேவன் தந்த வாழ்வல்லவா அதை சோதனை என்று பேசலாமா சொல்லலாமா நீங்க சொல்லலாமா பேசலாமா நீங்க பேசலாமா --- தேவன் 1. தேவன் தந்த மனைவியல்லவா அவளை அடிமையாக நடத்தலாமா உன்னை நம்பி வந்த மான் அல்லவா அவளை கசந்து கசந்து திட்டலாமா நடத்தலாமா அப்படி ( நீங்க) நடத்தலாமா திட்டலாமா கசந்து திட்டலாமா --- தேவன் 2. தேவன் தந்த கணவரல்லவா அவரை எதிரியாக நினைக்கலாமா பாசம் நிறைந்த புருஷனல்லவா அவரை எதிர்த்து எதிர்த்து பேசலாமா நினைக்கலாமா அப்படி நினைக்கலாமா பேசலாமா எதிர்த்து பேசலாமா--- தேவன் 3. தேவன் தந்த பிள்ளையல்லவா அவனை நாயைப் போல விரட்டலாமா வாரிசாக வந்த செல்வமல்லவா அவனை பாசமின்றி பார்க்கலாமா விரட்டலாமா பிள்ளையை விரட்டலாமா பார்க்கலாமா இப்படி பார்க்கலாமா --- தேவன் 4. தேவன் தந்த தாய் அல்லவா அவரை தனியே ஒதுக்கி தள்ளலாமா கனத்துக்குரிய தந்தையல்லவா அவரை அற்பமாக எண்ணலாமா தள்ளலாமா ஒதுக்கி தள்ளலாமா எண்ணலாமா அற்பமாய் எண்ணலாமா --- தேவன் 5. தேவன் தந்த அத்தையல்லவா அவளை இடைஞ்சல் என்று வெறுக்கலாமா ஆதரவான மருமகள் அல்லவா அவளை குற்றப்படுத்தி தூற்றலாமா வெறுக்கலாமா அத்தையை (மாமியாரை) வெறுக்கலாமா தூற்றலாமா அவளை (மகளை) தூற்றலாமா --- தேவன்

Palare Or Nesar பாலரே ஓர் நேசர்

Palare Or Nesar Undu 1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும் இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும் 2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச வீட்டிலே பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ 3. பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டிலே நல் மீட்பரின் பேரன்பால் பொற்கிரீடம் அணிவீர் இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார் இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார் 4. பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை நீர் அவரிடம் வாரும் ஈவார் அவ்வின்பத்தை

Saturday 2 May 2020

Yaarilum Melaana Anbar யாரிலும் மேலான அன்பர்

Yaarilum Melaana Anbar 1. யாரிலும் மேலான அன்பர் மா நேசரே தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர் மா நேசரே மற்ற நேசர் விட்டுப்போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ என்றென்றும் விடார் மா நேசரே 2. என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார் மா நேசரே பற்றிக் கொண்ட என்னை விடார் மா நேசரே இன்றும் என்றும் பாதுகாப்பார் பற்றினோரை மீட்டுக் கொள்வார் துன்ப நாளில் தேற்றல் செய்வார் மா நேசரே 3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு மா நேசரை என்றுமே விடாமல் எண்ணு மா நேசரை எந்தத் துன்பம் வந்தும், நில்லு நேரே மோட்ச பாதை செல்லு இயேசுவாலே யாவும் வெல்லு மா நேசரே 4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம் மா நேசரே சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் மா நேசரே கொண்ட நோக்கம் சித்தி செய்வார் நம்மை அவர் சேர்த்துக் கொள்வார் மோட்ச நன்மை யாவும் ஈவார் மா நேசரே

Friday 1 May 2020

Entrum Karthavudan என்றும் கர்த்தாவுடன்

Entrum Karthavudan 1. என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன் இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன் பற்றாசையால் உம்மை விட்டே நான் அலைந்தேன் நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் 2. அதோ சமீபமே பிதாவின் வீடு தான் என் ஞானக் கண்கள் காணுமே மின்னும் பொன்னகர் வான் தூயோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே 3. கர்த்தாவுடன் என்றும் பிதாவே, இங்கும் நீர் இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருள்வீர் என் பக்கம் தங்கிடின் தப்பாமலே நிற்பேன் கைதூக்கி என்னைத் தாங்கிடின் போராடி வெல்லுவேன் 4. என் ஜீவன் போகும் நாள் கிழியும் இத்திரை சாவை அழிப்பேன் சாவினால் சாகா உயிர் பெற்றே என் நாதரைக் காண்பேன் நின்று களிப்புடன் சிம்மாசனத்தின் முன் சொல்வேன் என்றும் கர்த்தாவுடன்

Deva Prasannam Tharume தேவா பிரசன்னம் தாருமே

Deva Prasannam Tharume தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்விய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோமே 1. வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே --- தேவா 2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் --- தேவா 3. கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் --- தேவா 4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே --- தேவா 5. நூற்றிருபது பேர் நடுவே தேற்றரவாளனே வந்தீரே உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே --- தேவா 6. எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே --- தேவா