Wednesday 29 April 2020

Vallamai Thevai Deva வல்லமை தேவை தேவா

Vallamai Thevai Deva வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை 1. மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே 2. பெந்தெகொஸ்தே நாளைப் போல பெரிதான முழக்கத்தோடே வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் 3. மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக ஆவியைத் தாரும் பிதாவே என்று அழைக்க புத்திர சுவிகாரம் ஈந்திடும்

Saturday 25 April 2020

Varuthapattu Paaram Sumapavare வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே

Varuthapattu Paaram Sumapavare வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே வருவீர் இயேசுவண்டை இளைப்பாற 1. தாகமுள்ளவரே வாரும் என்றார் தாகத்தோடு வரும் சமாரியாளைக் கண்டார் தண்ணீர் கேட்டார் அவர் தாகம் தீர்த்தார் பாவ மன்னிப்பை கொடுத்து மகிழச் செய்தார் 2. பெரும்பாடுள்ள ஓர் ஸ்திரீ இருந்தாள் கடும் நோய் நீங்க பலரிடம் சென்றாள் நம்பிக்கை இழந்தாள் நாதன் இயேசுவைக் கண்டாள் நடுங்கி வஸ்திரம் தொட்டு சுகமடைந்தாள் 3. நாலு நாளாயிற்றே நாறுமென்றாள் நம்பிக்கை விடாதே அவன் பிழைப்பான் என்றார் கவலைப்பட்டார் இயேசு கண்ணீர் விட்டார் மரித்தவன் உயிர்த்தே வரச் சொன்னார் 4. நாடு நகரமெல்லாம் சுற்றி அலைந்தார் நானே வழி வேறில்லை என பகர்ந்தார் களைப்படைந்தார் அத்தி மரத்தைக் கண்டார் கனியற்றிருப்பதை கண்டு சபித்தார்

Friday 24 April 2020

Magimai Matchimai மகிமை மாட்சிமை

Magimai Matchimai மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் 1. உன்னத தேவன் நீரே ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே என்றும் தொழுதிடுவோம் – மகிமை 2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே ஒளியினை தந்துமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே என்றும் தொழுதிடுவோம் – மகிமை 3. பரிசுத்த தேவன் நீரே பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே கனம் மகிமை செலுத்தியே நாம் என்றும் தொழுதிடுவோம் – மகிமை 4. நித்திய தேவன் நீரே நீதி நிறைந்தவரே அடைக்கலமானவரே அன்பு நிறைந்தவரே நல்லவரே வல்லவரே என்றும் தொழுதிடுவோம் – மகிமை 5. அற்புத தேவன் நீரே ஆசீர் அளிப்பவரே அகமதில் மகிழ்ந்துமே துதியினில் புகழ்ந்துமே ஆவியோடும் உண்மையோடும் என்றும் தொழுதிடுவோம் – மகிமை

Thursday 23 April 2020

Deva Saranam தேவா சரணம்

Deva Saranam தேவா சரணம் கர்த்தா சரணம் ராஜா சரணம் இயேசைய்யா சரணம் 1. தேவாதி தேவனுக்கு சரணம் இராஜாதி இராஜனுக்கு சரணம் தூய ஆவி சரணம் அபிஷேக நாதா சரணம் சரணம் சரணம் சரணம் (2) 2. கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம் காருண்ய கேடகமே சரணம் பரிசுத்த ஆவி சரணம் ஜீவநதியே சரணம் சரணம் சரணம் சரணம் (2) 3. மகிமையின் மன்னனுக்கு சரணம் மாசற்ற மகுடமே சரணம் சத்திய ஆவி சரணம் சர்வ வியாபியே சரணம் சரணம் சரணம் சரணம் (2)

Wednesday 22 April 2020

Enthan Kanmalaiyanavare எந்தன் கன்மலையானவரே

Enthan Kanmalaiyanavare எந்தன் கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே (4) 1. உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர் தூயவரே என் துணையாளரே துதிக்குப் பாத்திரரே — ஆராதனை 2. எந்தன் பெலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீரைய்யா இயேசு ராஜா என் பெலனானீர் எதற்கும் பயமில்லையே — ஆராதனை 3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன் ராஜா நீர் செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை

Tuesday 21 April 2020

Uyirodu Elunthavare உயிரோடு எழுந்தவரே

Uyirodu Elunthavare 1. உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஓசன்னா -4 2. மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 3. அகிலத்தை ஆள்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆனந்த பாக்கியமே உம்மை ஆராதனை செய்கிறோம்

Sunday 19 April 2020

Kalai Velaiyile Nam Nathanai காலை வேளையிலே நம் நாதனை

Kalai Velaiyile Nam Nathanai காலை வேளையிலே நம் நாதனை போற்றிடுவோம் (2) துதி மாலையுடன் புகழ் பாடியே (2) அவர் பாதம் வீழ்ந்து பணிவோம் மகிழ்வோம் 1. காலை தோறும் புது கிருபையினால் நிறைத்திடும் தேவனை வாழ்த்திடுவோம் குறைகள் யாவும் குருசினில் ஏற்ற (2) திருமைந்தன் இயேசுவை வணங்கிடுவோம் (2) சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே 2. பாவத்தை உணர்த்தும் தினம் வழி நடத்தும் ஆவியாம் தேவனை துதித்திடுவோம் மூன்றில் ஒன்றாய் அருள் ஒளி சுடராய் (2) திகழ்ந்திடும் திரியேகரை நமஸ்கரிப்போம் (2) சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே

Saturday 18 April 2020

Athikalai Neram Aandavar Samoogam அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்

Athikalai Neram Aandavar Samoogam அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன் என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன் 1. வடதிசை வாழும் என் குடும்பம் என் நினைவில் என்றும் கலந்துவிடும் தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட வல்லமை தேவன் வெளிப்படுவார் (2) 2. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர் அனைவரின் உள்ளமும் சங்கமமாகும் ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் (2) 3. தனக்கென வாழ நினைவிலும் மறந்து மற்றவர் மீது நாட்டம் கொண்டால் சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம் சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும் (2)

Athikaalai Thinam Thedi அதிகாலை தினம் தேடி

Athikaalai Thinam Thedi அதிகாலை தினம் தேடி உம் முகத்தினில் விழித்திடுவேன் புதுக் கிருபை அதைத் தேடி உம் பாதத்தில் அமர்ந்திடுவேன் ஆனந்தம் பேரின்பம் என் அன்பரின் பாதத்திலே ராஜா அல்லேலூயா-என் தேவா அல்லேலூயா 1. கரங்களை விரித்து கர்த்தரைப் பார்த்து காலையில் பணிந்திடுவேன் கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து மகிமையை செலுத்திடுவேன் பாதத்திலே முகம் பதித்து முத்தங்கள் செய்திடுவேன் --- ராஜா 2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட கண்களும் விழித்திடுதே உம் மனம் குளிர என் மனம் பாட ஆயத்தமாகிடுதே உம் வசனம் தியானித்திட என் உள்ளம் காத்திடுதே --- ராஜா 3. கண்ணிமை நேரம் உம்மை மறவாமல் கருத்தாய் நினைத்திடவே கனிவாய் இரங்கி கருனை ஈந்து கரத்தால் அணைத்திடுமே நாள் முழுதும் வல்லமையால் நிதமும் நனைத்திடுமே --- ராஜா

Friday 17 April 2020

Kalai Neram Inba Jeba Thiyaname காலை நேரம் இன்ப ஜெப தியானமே

Kalai Neram Inba Jeba Thiyaname காலை நேரம் இன்ப ஜெப தியானமே கருணை பொற்பாதம் காத்திருப்பேன் அதிகாலையில் அறிவை உணர்த்தி அன்போடு இயேசு தினம் பேசுவார் 1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன் என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும் என்னை அழைத்தார் அவர் சேவைக்கே 2. பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல் பொய்யாய் சொன்னாலும் களிகூருவாய் இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார் இந்த மெய் வாக்கு நிறைவேறுதே 3. சிலுவை சுமந்தே அனுதினமே சோராமல் என் பின் வா என்றாரே அவரோடு பாடு சகித்தாளுவேனே ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே 4. பறந்து புறா போல் சிறகடித்தே பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன் பரலோக வாசல் பரம சீயோனே பூரித்து என்னை வரவேற்குமே

Thursday 16 April 2020

Kaalam Kalamaga Ummai காலங் காலமாக உம்மை

Kaalam Kalamaga Ummai காலங் காலமாக உம்மை நான் துதிப்பேன் காலை மாலை தோறும் உம்மையே துதிப்பேன் என்றும் மாறாதவர் இயேசு ராஜன் நீரே மகிமை மகிமை உமக்கென்றுமே 1. சொன்னபடி செய்பவரே சொல்லால் அகிலத்தைப் படைத்தவரே சோர்ந்துப் போகும்போது நீர் சொன்னதை நினைத்தேன் அகமகிழ்ந்தேன் துதித்தேன் துதிப்பேன் துதித்திடுவேன் --- காலங் 2. கண்மணிபோல் காப்பவரே காற்றையும் கடலையும் அதட்டினீரே கலங்கித் தவித்த போது உம்மைக்கண்டேன் கடல்மேல் கலங்கிடேனே துதித்தேன் துதிப்பேன் துதித்திடுவேன் --- காலங் 3. சேற்றிலிருந்து தூக்கினீரே என்னைத்தான் தேடியே வந்தீரே பாதை தவறும் பொது என்னைத்திரும்பிப் பார்த்தீர் கரம் பிடித்தீர் துதித்தேன் துதிப்பேன் துதித்திடுவேன் --- காலங்

Wednesday 15 April 2020

Naan Unakku Thunai Nirkiren நான் உனக்கு துணை நிற்கிறேன்

Naan Unakku Thunai Nirkiren நான் உனக்கு துணை நிற்கிறேன் என்றவரே ஸ்தோத்திரம் வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே வல்ல தேவனே ஸ்தோத்திரம் 1. பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி அரவணைத்தவரே ஸ்தோத்திரம் - நான் 2. பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் - நான் 3. சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பி ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் - நான்

Vanathi Vanavar Nam Yesuvai வானாதி வானவர் நம் இயேசுவை

Vanathi Vanavar Nam Yesuvai வானாதி வானவர் நம் இயேசுவை வாத்தியங்கள் முழங்கிட பாடுவோம் தேவாதி தேவன் நம் இயேசுவை நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் ஹாலேலூயா ஹா ஹாலேலூயா ஹாலேலூயா ஹா ஹாலேலூயா 1. வானங்களை விரித்தவரை பாடுவோம் வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம் 2. வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம் வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் 3. பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே பாசக்கரம் நீட்டி அவர் தூக்கினார் 4. பாரில் வந்த பரலோக நாயகன் பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே

Sunday 12 April 2020

O Enthan Ullam ஓ எந்தன் உள்ளம்

O Enthan Ullam 1. ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால் என் வாழ்க்கையில் எல்லாம் நிறைந்திருப்பதால் உம்மைத் துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் இன்றும் என்றும் உம்மை போற்றி பாடித் துதிப்பேன் 2.கண்மணி போல காத்துக் கொள்வதால் உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால் 3. பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால் உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால் 4. ஆவியில் என்னை நிறைத்திருப்பதால் ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்

Saturday 11 April 2020

Yutha Raja Singam யூத ராஜ சிங்கம்

Yutha Raja Singam யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார் அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத 6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத 7. கிறிஸ்தோரே நாம் அவர் பாதம் பணிவோம் பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம் – யூத

Yutha Raja Singam யூத ராஜ சிங்கம்


Thursday 9 April 2020

Oppu Nigar illatha Kalvariye ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே

Oppu Nigar illatha Kalvariye 1. ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே ஒப்புரவை தந்திடும் கல்வாரியே ஒற்றுமையாய் பூவுலகம் ஒரு மிக்க பகை தீர்க்க ஓங்கியே நிற்கின்ற கல்வாரியே கல்வாரியே கல்வாரியே ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே 2. இறையன்பை பகர்ந்தூட்டும் கல்வாரியே இறைவனின் தியாகம் பார் கல்வாரியே இல்லார்க்கும் பொல்லார்க்கும் இயலாத பாவிக்கும் இறையருள் தந்திடும் கல்வாரியே 3. எல்லாரையும் ஏற்கும் கல்வாரியே பொல்லாரை மீட்டிடும் கல்வாரியே என் சாபம் நீக்கிட என் பாவம் போக்கிட நிலை வாழ்வை தந்திடும் கல்வாரியே

Wednesday 8 April 2020

Kalvari Snegam கல்வாரி சிநேகம்

Kalvari Snegam கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும் குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் (2) கும்பிடுவோரை குணமாக்கும் வேதம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் (2) என்னை காணுவோர் உம்மை காணட்டும் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா நான் சிறுகவும் நீர் பெருகவும் (2) தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்

Thursday 2 April 2020

Kalvari Katchiyai Kandum கல்வாரி காட்சியை கண்டும்

Kalvari Katchiyai Kandum கல்வாரி காட்சியை கண்டும் கல்நெஞ்சம் கரைந்திடாதோ பாவம் அற்ற பரிசுத்தர் பட்ட பாடுகள் எண்ணி உருகிடாதோ 1. கொடுங் கொல்கதா மலை மேட்டில் கோரப் பாடுகள் சகித்தார் பாரச் சிலுவை தோளில் சுமந்து தள்ளாடியே ஏறுகின்றார் திவ்ய நேசர் எடுத்திட்ட கோலம் எண்ணியே மனம் உருகிடாதோ 2. கை கால்கள் ஆணிகள் பாய திரு ரத்தம் வழிந்தோடுதே முட்கிரீடம் தலையில் குத்த வேதனையால் வாடுகின்றார் திவ்ய நேசர் படும் வேதனையை எண்ணியே மனம் கரைந்திடாதோ 3. ஐங்காயம் ஏற்றிட்ட நாதர் சிலுவையில் தொங்குகின்றார் தீய நிந்தனைகள் ஏற்றார் பரிகாசங்கள் சகித்தார் பாவம் போக்கும் பரிசுத்தர் பாதம் பணிந்தே மனம் கதறிடாதோ

Wednesday 1 April 2020

Siluvai Oar Punitha Sinnam சிலுவை ஓர் புனிதச் சின்னம்

Siluvai Oar Punitha Sinnam சிலுவை ஓர் புனிதச் சின்னம் ஜெகத்து ரட்சகன் இயேசு மரித்துயிர்த்தெழுந்தார் – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம் வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்து இகபரத்தை இணைத்து இல்லாரைச் செல்வராக்கும் பொல்லாரை நல்லோராக்கும் நல்லாயன் இயேசு சுவாமி தோளில் சுமந்து சென்ற --- சிலுவை 2.அலகை சிரமுடைக்க அகந்தை நினைவழிக்க பலமயல்களகற்றப் பவக் கடலைக் கடக்க உலகில் உயிர்களோங்க உன்னத வாழ்வு பெற பலகுல மனிதரும் பகைத்துப்பின் போற்றுகின்ற --- சிலுவை 3.யூதர்க்கிடறலான இயேசு நாதர் சிலுவை கிரேக்க ஞானியருக்கு பைத்தியமச் சிலுவை அன்பர்க் கடைக்கலமும் தேவ பெலனும் சிலுவை தன்னை உணர்ந்தவர் தனிப்பெருமை சிலுவை - சிலுவை