Kaalam Kalamaga Ummai காலங் காலமாக உம்மை
Kaalam Kalamaga Ummai
காலங் காலமாக உம்மை நான் துதிப்பேன்
காலை மாலை தோறும் உம்மையே துதிப்பேன்
என்றும் மாறாதவர் இயேசு ராஜன் நீரே
மகிமை மகிமை உமக்கென்றுமே
1. சொன்னபடி செய்பவரே
சொல்லால் அகிலத்தைப் படைத்தவரே
சோர்ந்துப் போகும்போது
நீர் சொன்னதை நினைத்தேன் அகமகிழ்ந்தேன்
துதித்தேன் துதிப்பேன் துதித்திடுவேன் --- காலங்
2. கண்மணிபோல் காப்பவரே
காற்றையும் கடலையும் அதட்டினீரே
கலங்கித் தவித்த போது
உம்மைக்கண்டேன் கடல்மேல் கலங்கிடேனே
துதித்தேன் துதிப்பேன் துதித்திடுவேன் --- காலங்
3. சேற்றிலிருந்து தூக்கினீரே
என்னைத்தான் தேடியே வந்தீரே
பாதை தவறும் பொது
என்னைத்திரும்பிப் பார்த்தீர் கரம் பிடித்தீர்
துதித்தேன் துதிப்பேன் துதித்திடுவேன் --- காலங்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.