Naan Unakku Thunai Nirkiren நான் உனக்கு துணை நிற்கிறேன்
Naan Unakku Thunai Nirkiren
நான் உனக்கு துணை நிற்கிறேன்
என்றவரே ஸ்தோத்திரம்
வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே
வல்ல தேவனே ஸ்தோத்திரம்
1. பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி
அரவணைத்தவரே ஸ்தோத்திரம் - நான்
2. பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி
நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் - நான்
3. சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பி
ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் - நான்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.