Monday 21 September 2020

Desame Payapadathe தேசமே பயப்படாதே


 Desame Payapadathe

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர் இயேசு உந்தனுக்கே மாபெரும் காரியம் செய்திடுவார் 1. செழிப்பான புதுவாழ்வு தேவனே அருளிடுவார் சுகவாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார் - தேசமே 2. மலைபோல வருவதெல்லாம் பனிப் போல் மறைந்திடுமே உன்னதரின் கிருபைகளும் உந்தனைச் சூழ்ந்திடுமே - தேசமே 3. தேவனுடன் உறவு கொண்டு தினம் தினம் வாழ்ந்திடுவாய் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய் - தேசமே

Tuesday 15 September 2020

Mahilnthiduven Naan Kartharukul மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்

Mahilnthiduven Naan Kartharukul மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள் களிகூருவேன் என் தேவனுக்குள் இரட்சிப்பின் தேவனுக்குள் ஆமேன் அல்லேலூயா (4) 1. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் திராட்சை செடி பழம் இல்லாமற் போனாலும் 2. ஒலிவ மரத்தின் பலனற்று போனாலும் வயல்களில் தானியம் விளையாமற் போனாலும் 3. கிடையில் ஆடுகள் முதலற்று போனாலும் தொழுவத்தில் மாடுகள் இல்லாமற் போனாலும்

Sunday 13 September 2020

Iratchippai Uyarthi Solvom இரட்சிப்பை உயர்த்தி சொல்வோம்

Iratchippai Uyarthi Solvom 1. இரட்சிப்பை உயர்த்தி சொல்வோம் லோகம் நடுங்க நரகாக்கினையை சொல்வோம் பாவம் அடங்க பூர்வ காலத் தேவ தாசர் விஸ்தரித்தாப்போல், மோட்ச லோகம் போகுமுன்னே, செல்வோம், செல்வோம் ஆர்ப்பரிப்புடனே செய்வோம், செய்வோம், போர் பலத்துடனே நானா ஜாதி பாஷைக்காரர் இரட்சிப்படைய மோட்சலோகம் போகு முன்னே. 2. இயேசு வீரர் யுத்த சத்தம் பூமியெங்கும் கேள் மீட்படைந்த பேதைகளின் சாட்சிகளுங் கேள் முழு லோகத்தையும் வெல்ல இன்னும் கொஞ்ச நாள் மோட்ச லோகம் போகு முன்னே. 3. தீதாய்ச் சத்துருக்கள் என்ன சொன்ன போதிலும் சுத்த ஆவியின் பலத்தைப் பெற்று யாவிலும் உண்மையாகப் போர் புரிந்தால் வெல்வோம் சாவிலும் மோட்ச லோகம் போகு முன்னே.

Wednesday 9 September 2020

Sarvathaiyum Anbai சர்வத்தையும் அன்பாய்

Sarvathaiyum Anbai 1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம் மா நன்றி கூறியே சாஷ்டாங்கம் பண்ணுவோம். 2. தயாபரா என்றும் எம்மோடிருப்பீராக கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ஈவீராக மயங்கும் வேளையில் நேர் பாதை காட்டுவீர் இம்மை மறுமையில் எத்தீங்கும் நீக்குவீர். 3. வானாதி வானத்தில் என்றென்றும் அரசாளும் திரியேக தெய்வத்தை விண்ணோர் மண்ணோர் எல்லாரும் இப்போதும் எப்போதும் ஆதியிற் போலவே புகழ்ந்து ஸ்தோத்திரம் செலுத்துவார்களே.

Tuesday 8 September 2020

Now Thank We All Our God

1. Now thank we all our God, with hearts and hands and voices who wondrous things has done in whom God's world rejoices who from our mother's arms has blessed us on our way with countless gifts of love and still is ours today. 2. Oh may this bounteous God through all our life be near us with ever-joyful hearts and blessed peace to cheer us and keep us all with grace and guide us when perplexed and free us from all ills in this world and the next. 3. All praise and thanks to God The father now be given the Son, and Him who reigns with them in highest heaven the one eternal God whom heaven and earth adore for thus it was, is now and shall be evermore.

Sunday 6 September 2020

Unnai Kaakiravar Urangaar உன்னைக் காக்கிறவர் உறங்கார்

Unnai Kaakiravar Urangaar உன்னைக் காக்கிறவர் உறங்கார் உந்தன் காலைத் தள்ளாட வொட்டார் கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் - 2 1. மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும் ஆழிபோல் சோதனை பெருகினாலும் கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை 2. பாவமும் சாபமும் சூழ்ந்த போது பாவத்துக்காய் மனம் திரும்பும்போது பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை 3. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாகவும் இருக்கும் போது கர்த்தரை தேடுவோர்க்குக் குறைவில்லை என்றதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை 4. வழுவாது உன்னைக் காத்திடவும் மகிமையின் சந்நிதியில் மகிழ்ந்திடவும் மாசற்று நிறுத்த வல்லவர் இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை

Friday 4 September 2020

Safely Through Another Week

1. Safely through another week God has brought us on our way let us now a blessing seek waiting in his courts today day of all the week the best emblem of eternal rest. 2. While we pray for pardoning grace through the dear Redeemer's name show thy reconciled face take away our sin and shame from our earthly cares set free may we rest this day in thee 3. Here we come thy name to praise let us feel thy presence near May thy glory meet our eyes while we in thy house appear here afford us, Lord, a taste of our everlasting feast. 4. May thy gospel's joyful sound conquer sinners, comfort saints may the fruits of grace abound bring relief for all complaints thus may all our Sabbaths prove Till we join the church above