Sunday 28 February 2021

Maasatra Theiva Namathai மாசற்ற தெய்வ நாமத்தை


 Maasatra Theiva Namathai

1.மாசற்ற தெய்வ நாமத்தை துதி என் நெஞ்சமே இரக்கம் செய்த கர்த்தரை துதி என் உள்ளமே 2.உன் பாதங்கள் யாவையும் நிவிர்த்தி செய்கிறார் உன் ரோகங்கள் அனைத்தையும் பரிகரிக்கிறார். 3.நீ மாண்டுபோகும் பொழுது உன் ஜீவனை மீட்பார் நிறைந்த அன்பால் உனக்கு கிரீடம் சூட்டுவார். 4.நன்மைகளால் உன் மனதை திருப்தியாக்கினார் அன்பாய் உன் ஆயுள் காலத்தை நீடிக்கப்பண்ணினார். 5.எந்நாளும் இந்த நன்மையை என் ஆத்துமாவே நீ மறந்திடாமல் கர்த்தரை வணக்கமாய்த் துதி.

Saturday 27 February 2021

Kartharai Naan Ekkaalamum கர்த்தரை நான் எக்காலமும்


 Kartharai Naan Ekkaalamum

கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் 1.கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமாவும் களித்து மேன்மை பாராட்டிடுதே ஒருமித்தே நாம் உயர்த்திடுவோமே கருத்தாய் அவர் நாமமே 2.தூய பரன் முகம் நோக்கிடுவார் சூரிய சோபையாய் மாறிடுவார் ருசிக்க இன்பமே இயேசுவின் அன்பே சுகிக்க நல்லவரே 3.ஜீவனை யீந்தார் தம் சாவினாலே வேதனை நீக்கினார் நோவினாலே அற்புதமாய் எந்தன் ஜீவியமதையே தற்பரன் மாற்றுகிறார் 4. தேற்றி அப்போஸ்தல தூதுகளால் மாற்றிடுவார் அவர் ரூபமதாய் ஊற்றிடுவார் புது ஜீவன் எந்நாளும் ஏற்றுவார் ஜெயக்கொடியே 5.அக்கினி ஊடே நடந்திடினும் விக்கினமின்றியே நான் துலங்க ஆக்குவார்பொன்னிலும் என்விசுவாசம் மிக்கதோர் மகிமையாய் 6.சீயோனே உன் பெலன் தரித்திடுவாய் வீற்றிடுவாய் எழுந் தெருசலேமே உன் துயர் நீக்கிடும் இன்ப மணாளன் வந்திடும் வேளையிதே

Thursday 25 February 2021

En Nesar Yesuvai என் நேசர் இயேசுவை


 En Nesar Yesuvai

என் நேசர் இயேசுவை நான் என்றும் பாடுவேன் என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர் என் நேசர் லிலியீலும் வென்மையானவர் என் வாழ்வில் நறுமணமீந்தவர். 1. பெலனற்று போகையில் என் பெலனவரே இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே பொற்றள வீதியில் பாடி மகிழ என் நேசரேசு மீட்டுக்கொள்வாரே 2. கடும் புயல் சீறிடும் அலைகள் மோதிடும் கண்ணுக்கெட்டா கரைதனில் உள்ளம் நாடிடும் பொற்கரம் நீட்டி என் கரம் கொடுப்பேன் என் நேசரேசு மீட்டுக்கொள்வாரே 3. எட்டியாய் கசந்திட்ட என் வாழ்வு இனித்திட எத்தனாய் அலைந்திடாது நித்தம் பின் செல்ல ஏந்திட்டார் பொற்கரத்தில் ஆவலாய் என்னை எந்நாளும் இன்ப துதிகள் பாடவே

Wednesday 24 February 2021

Para Kurusil Paraloga Rajan பாரக் குருசில் பரலோகராஜன்


 Para Kurusil Paraloga Rajan

1. பாரக் குருசில் பரலோகராஜன் பாதகனைப் போல் தொங்குகிறாரே பார் அவரின் திரு இரத்தம் பாவங்கள் போக்கிட பாய்ந்திடுதே வந்திடுவாய் இயேசுவண்டை வருந்தியே அழைக்கிறாரே வாஞ்சைகள் தீர்ப்பவரே வாதைகள் நீக்குவாரே 2. இதயத்தின் பாரம் அறிந்து மெய்யான இளைப்பாறுதலை அளித்திடுவாரே இன்னுமென்ன தாமதமோ இன்றே இரட்சிப்படைய வருவாய் 3. சிலுவையின் மீதில் சுமந்தனரே உன் சாபரோகங்கள் தம் சரீரத்தில் சர்வ வல்ல வாக்கை நம்பி சார்ந்து சுகம் பெறவே வருவாய் 4. நித்திய வாழ்வு பெற்றிட நீயும் நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய் நீசனென்று தள்ளாதுன்னை நீதியின் பாதையில் சேர்த்திடுவார் 5. இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலம் இன்பம் அவரின் அதரத்தின் மொழிகள் இல்லையே இந்நேசரைப் போல் இகமதில் வேறோர் அன்பருனக்கே

Monday 22 February 2021

Nangal Pava Parathal நாங்கள் பாவப் பாரத்தால்


 Nangal Pava Parathal

1. நாங்கள் பாவப் பாரத்தால் கஸ்தியுற்றுச் சோருங்கால் தாழ்மையாக உம்மையே நோக்கி கண்ணீருடனே ஊக்கத்தோடு வாஞ்சையாய் கெஞ்சும்போது தயவாய் சிந்தை வைத்து இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 2. மோட்சத்தை நீர் விட்டதும் மாந்தனாய்ப் பிறந்ததும் ஏழையாய் வளர்ந்ததும் உற்ற பசி தாகமும் சாத்தான் வன்மை வென்றதும் லோகம் மீட்ட நேசமும் சிந்தை வைத்து இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 3. லாசருவின் கல்லறை அண்டை பட்ட துக்கத்தை சீயோன் அழிவுக்காய் நீர் விட்ட சஞ்சலக் கண்ணீர் யூதாஸ் துரோகி எனவும் துக்கத்தோடுரைத்ததும் சிந்தை வைத்து இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 4. காவில் பட்ட கஸ்தியும் ரத்த சோரி வேர்வையும் முள்ளின் கிரீடம் நிந்தனை ஆணி ஈட்டி வேதனை மெய்யில் ஐந்து காயமும் சாவின் நோவும் வாதையும் சிந்தை வைத்து இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 5. பிரேத சேமம் கல்லறை காத்த காவல் முத்திரை சாவை வென்ற சத்துவம் பரமேறும் அற்புதம் நம்பினோர்க்கு ரட்சிப்பை ஈயும் அன்பின் வல்லமை சிந்தை வைத்து இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே.

Friday 19 February 2021

Karthar Un Veetai Kattaragil கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில்


 Karthar Un Veetai Kattaragil

1. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டும் உன் பாடு விருதா கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில் உன் கண்விழிப்பும் விருதா ஆதலால் உள்ளமே சதா அவர் சமூகம் நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்கு பயந்து அவர் வழி நடந்தால் நீ பாக்கியம் கண்டடைவாய் 2. உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் 3. இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நீ பயப்படவே மாட்டாய் 4. சிங்கத்தின் மேலும் நடந்து வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் 5. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் 6. கர்த்தருக்குப் பயப்பட்டவன் இவ்வித ஆசீர்வாதம் பெறுவான் கர்த்தர் சீயோனில் இருந்து உன்னை கடைசிமட்டும் ஆசீர்வதிப்பார்

Tuesday 16 February 2021

Nam Deva Sannithanathil நாம் தேவ சந்நிதானத்தில்


 Nam Deva Sannithanathil

1.நாம் தேவ சந்நிதானத்தில் மகா மகிழ்ச்சியாக வந்தாதி கர்த்தரண்டையில் வணக்கஞ் செய்வோமாக யெகோவாவுக்கு நிகர் யார் யாவும் நன்றாகச் செய்கிறார் கர்த்தாவுக்கே புகழ்ச்சி 2. கர்த்தாதி கர்த்தர் ஞானத்தால் யாவற்றையும் நன்றாகப் படைத்துத் திட்டம் செய்ததால் மகா வணக்கமாக விண் மண் கடல் ஆகாயமும் விடாமல் துதி செலுத்தும் கர்த்தாவுக்கே புகழ்ச்சி 3.மேலான அற்புதங்களைச் செய்தென்னைப் பூரிப்பாக்கி என் மேல் விழுந்த பாரத்தை இரக்கமாய் விலக்கி ரட்சித்த மா தயாபரர் துதிக்கு என்றும் பாத்திரர் கர்த்தாவுக்கே புகழ்ச்சி 4.மெய் மார்க்கத்தாரே கர்த்தரைத் துதித்துக் கொண்டிருங்கள் அவர் சிறந்த நாமத்தை எந்நேரமும் தொழுங்கள் அவர் எல்லாம் படைத்தவர் கர்த்தாதி கர்த்தரானவர் கர்த்தாவுக்கே புகழ்ச்சி

Thursday 11 February 2021

Pareer Arunothayam Pol பாரீர் அருணோதயம் போல்


 Pareer Arunothayam Pol

1. பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமுமாம் பதினாயிரங்களில் சிறந்தோர் (2) 2. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே 3. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன் என் மேல் பறந்த கொடி நேசமே – இயேசுவே 4. என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே 5. என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே

Sunday 7 February 2021

Um Arul Pera Yesuve உம் அருள் பெற இயேசுவே


 


Um Arul Pera Yesuve 1. உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன் என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன். 2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. 3. ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகா என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா. 4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன் நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். 5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர் மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர். 6. என் பக்தி ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன் உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன். 7. என் ஆவி தேகம் செல்வமும் நான் தத்தம் செய்கிறேன் ஆ இயேசுவே சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்.

Monday 1 February 2021

Kartharilum Tham Vallamaiyilum கர்த்தரிலும் தம் வல்லமையிலும்


 Kartharilum Tham Vallamaiyilum

1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும் கிருபையால் யாவரும் பலப்படுவோம் தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று திராணியுடன் போர் புரிவோம் சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம் சாத்தானின் சேனையை முறித்திடுவோம் – அவர் சத்துவ வல்லமையால் 2. மாமிசம் இரத்தத்துடனுமல்ல துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின் லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும் போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத 3. சத்தியமாம் கச்சையை கட்டியே நீதியின் மார்க்கவசம் தரித்தே சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் – சர்வாயுத 4. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை வல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம் விசுவாசம் என்னும் கேடகம் மேலே வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத 5. இரட்சண்யமாம் தலைச்சீராவும் எச்சனமும் அணிந்துகொள்வோம் தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம் தேவை அதைப்பிடித்துக்கொள்வோம் – சர்வாயுத 5. எந்தச் சமயத்திலும் சகல வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் பரிசுத்தர்கட்காக ஆவியினால் மனஉறுதியுடன் ஜெபிப்போம் – சர்வாயுத