Tuesday, 16 February 2021
Nam Deva Sannithanathil நாம் தேவ சந்நிதானத்தில்
Nam Deva Sannithanathil 1.நாம் தேவ சந்நிதானத்தில் மகா மகிழ்ச்சியாக வந்தாதி கர்த்தரண்டையில் வணக்கஞ் செய்வோமாக யெகோவாவுக்கு நிகர் யார் யாவும் நன்றாகச் செய்கிறார் கர்த்தாவுக்கே புகழ்ச்சி 2. கர்த்தாதி கர்த்தர் ஞானத்தால் யாவற்றையும் நன்றாகப் படைத்துத் திட்டம் செய்ததால் மகா வணக்கமாக விண் மண் கடல் ஆகாயமும் விடாமல் துதி செலுத்தும் கர்த்தாவுக்கே புகழ்ச்சி 3.மேலான அற்புதங்களைச் செய்தென்னைப் பூரிப்பாக்கி என் மேல் விழுந்த பாரத்தை இரக்கமாய் விலக்கி ரட்சித்த மா தயாபரர் துதிக்கு என்றும் பாத்திரர் கர்த்தாவுக்கே புகழ்ச்சி 4.மெய் மார்க்கத்தாரே கர்த்தரைத் துதித்துக் கொண்டிருங்கள் அவர் சிறந்த நாமத்தை எந்நேரமும் தொழுங்கள் அவர் எல்லாம் படைத்தவர் கர்த்தாதி கர்த்தரானவர் கர்த்தாவுக்கே புகழ்ச்சி
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.