Thursday 31 December 2020

Senaigalin Karthar Nallavare சேனைகளின் கர்த்தர் நல்லவரே


 Senaigalin Karthar Nallavare

சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மை காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம் பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம் 1. வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும் ஏசு நம்மோடங்கு நடக்கின்றார் 2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம் ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும் கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன் 3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம் கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம் ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின் அன்பில் நிலைத்திருப்போம் 4. ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார் ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்

Wednesday 30 December 2020

En Meiparai Yesu என் மேய்ப்பராய் இயேசு


 En Meiparai Yesu

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா என்றென்றும் இன்பமல்லவா 2. தம் பாதையில் என்னை நடத்திடவே என் கரத்தை பிடித்தே முன் நடப்பார் அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே 3. என்னோடவர் நடந்திடும் போதினிலே எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா 4. என்னையவர் அன்பால் நிரப்பியதால் எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால் என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே 5. என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள என்னை என்றும் போதித்து நடத்துகின்றார் என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் 6. விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய் என்னையவர் ஆயத்தமாக்கினார் என்னானந்தம் ஆஹா என்னானந்தம் எனக்கென்றும் பேரானந்தமே

Tuesday 29 December 2020

Athi Maram Pol Ethanai அத்திமரம் போல் எத்தனை


 Athi Maram Pol Ethanai

அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள் தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள் 1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம் இயேசு ஆசையோடு க‌னியைத் தேடினார் ஏமாற்ற‌ம் இப்ப‌டித்தானே ம‌னித‌ர்க‌ள் வாழும் வாழ்க்கை ப‌ல‌ வேஷ‌ம் 2. ஊருக்குள்ளே உத்த‌ம‌ர் போல ந‌டிப்பார்க‌ள் ஆனால் உண்மையிலே அத்தி ம‌ர‌ம் போல் இருப்பார்க‌ள் பேசுவ‌தெல்லாம் வேத‌ங்க‌ள் போடுவ‌தெல்லாம் வேஷ‌ங்க‌ள் 3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும் வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும் அன்பு அதிலே இல்லையென்றால் வாழ்ந்து என்ன லாபம் தான் 4. ம‌னித‌னை ம‌ட்டும் ந‌ம்புவ‌தாலே ப‌ய‌னில்லை ஆனால் இறைவ‌னை ம‌ட்டும் ந‌ம்பிடுவாய் துன்ப‌மில்லை க‌வ‌லைக‌ள் எல்லாம் போக்கிடுவார் க‌ண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்

Sunday 27 December 2020

Yesuvai Pol Alagullore இயேசுவைப் போல் அழகுள்ளோர்


 Yesuvai Pol Alagullore

1. இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாருமில்லை பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் வெறும் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் --- பூரண 3. எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய் உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் --- பூரண 4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் --- பூரண 5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால் --- பூரண 6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே --- பூரண

As With Gladness Men Of Old


 1. As with gladness men of old

did the guiding star behold as with joy they hailed its light leading onward beaming bright so most gracious God may we evermore be led to thee 2. As with joyful steps they sped Saviour to thy lowly bed there to bend the knee before thee whom heaven and earth adore so may we with willing feet ever seek thy mercy seat 3. As they offered gifts most rare at thy cradle rude and bare so may we with holy joy pure and free from sin’s alloy all our costliest treasures bring Christ to thee our heavenly king 4. Holy Jesus every day keep us in the narrow way and when earthly things are past bring our ransomed souls at last where they need no star to guide where no clouds thy glory hide 5. In the heavenly city bright none shall need created light Thou its light its joy its crown Thou its sun which goes not down There for ever may we sing alleluias to our king.

Saturday 26 December 2020

En Idhayam Yaarukku Theriyum என் இதயம் யாருக்கு தெரியும்


 En Idhayam Yaarukku Theriyum

என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் (2) 1. நெஞ்சின் நோவுகள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே (2) – என் 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ (2) – என் 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ (2) – என் 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே (2) – என்

Thursday 24 December 2020

Perinba Nathiye பேரின்ப நதியே


 Perinba Nathiye

பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட பின் மாரியாக பொழிந்திடுமே (2) 1. எலியாவின் தேவன் எங்கே என்றானே சலியாமல் ஓடி சால்வை பெற்றானே பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள் பலவந்தமாக்கும் காலம் இதுவே (2) - பேரின்ப 2. மங்கும் திரிகள் நெரிந்த நாணல் தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர் அனலுமில்லாத குளிருமில்லாத அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே (2) - பேரின்ப 3. சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா உலரும் எலும்பும் உயிரை அடையும் உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா (2) - பேரின்ப 4. பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர் பரிசுத்த தேவ அழைப்பை பாரீர் தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன் தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே (2) - பேரின்ப 5. ஊனர் குருடர் தீரா நோயாளர் ஊமை செவிடர் பேயால் பாடுவோர் அற்புத செயலால் வேண்டிடுவோமே ஆண்டவரிடமே வேண்டிடுவோமே (2) - பேரின்ப 6. சத்திய பரனை பக்தியுடனே நித்திய யுகமாய்ப் பாடிடுவேனே ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே ஏழை என் தாகம் தீர்த்திடுவேனே (2) - பேரின்ப

Monday 21 December 2020

Deva Aseervatham Perugiduthe தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே


 Deva Aseervatham Perugiduthe

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே துதிகள் நடுவே கர்த்தர் தங்க தூதர் சேனை தம் மகிமையோடிறங்க 1. எழும்பு சீயோனே ஒளி வந்ததே எரிந்திடும் விளக்கே திருச்சபையே காரிருளே கடந்திடுதே கர்த்தரின் பேரோளி வீசிடுதே --- தேவ 2. நலமுடன் நம்மை இதுவரையும் நிலைநிறுத்திடுதே அவர் கிருபை கண்மணிபோல் கடைசிவரை காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் --- தேவ 3. குறித்திடும் வேளை உயர்த்திடுவார் கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம் தாழ்வில் நம்மை நினைத்தவரை வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம் --- தேவ 4. தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம் இரட்சிப்பினால் அலங்கரித்தார் இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் --- தேவ 5. பொருந்தொனி கேட்க ஏறிடுவோம் பரலோகந் திறந்தே அவர் வருவார் உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில் என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் --- தேவ

Sunday 20 December 2020

Nam Devan Anbullavar நம் தேவன் அன்புள்ளவர்


 Nam Devan Anbullavar

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர் நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே (2) 1. நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே என்ற போதும் நம்மை நேசித்தாரே ஆ அந்த அன்பில் மகிழ்வோம் அன்பரின் பாதம் பணிவோம் (2) --- நம் 2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும் திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும் ஆ அவர் காயம் நோக்குவோம் அதுவே என்றும் போதுமே (2) --- நம் 3. வான மீதில் இயேசு இறங்கி வருவார் தேவ தூதர் போல மகிமை அடைவோம் ஆ எங்கள் தேவா வாருமே அழைத்து வானில் செல்லுமே (2) --- நம் 4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம் ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம் ஆ அந்த நாள் நெருங்குதே நினைத்தால் நெஞ்சம் பொங்குதே (2) --- நம்

Karthar En Menmaiyum கர்த்தர் என் மேன்மையும்


 Karthar En Menmaiyum

கர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன் கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன் - நான் (2) 1. என் முகத்தை தேடும் என்றீர் இன்னமும் நான் அன்பு கூர்ந்து நோக்குவேன் உன் பொன் முகமே சிலுவை நோக்கி பார்த்த கண்கள் சூழ்நிலைகள் மாறினாலும் வெட்கமடைந்து போவதில்லையே - கர்த்தர் 2. தகப்பனும் தாயும் என்னைக் கைவிடும் வேளை வரினும் அரவணைக்கும் உந்தன் கரமே கழுகு தன் குஞ்சுகளைப் பறந்து காப்பது போல காத்த உந்தன் செட்டை தஞ்சமே - கர்த்தர் 3. எந்தனுக்கு விரோதமான எரிகோவின் மதில்களைத் தகர்த்து சாம்பலாக்கிடுவீர் எதிரிகளின் சேனைகள் என்றும் என்னைத் தொடராமல் பின்தொடர்ந்து வந்திடுவீர் - கர்த்தர் 4. காலமோ கடைசியாகி பாவம் பாரில் படர்ந்து பெருகி உலக வேஷம் கடந்து செல்லுதே வருகைத் தாமதிக்கையில் புறாவைப் போல் சிறகிருந்தால் பறந்து வந்து உம்மைக் காணுவேன் – கர்த்தர்

Wednesday 16 December 2020

Intru Kanda Egypthiyanai இன்று கண்ட எகிப்தியனை


 Intru Kanda Egypthiyanai

இன்று கண்ட எகிப்தியனை என்றுமே இனி காண்பதில்லை (2) இஸ்ரவேலைக் காக்கும் தேவன் உறங்கவில்லை தூங்கவில்லை (2) 1. கசந்த மாரா மதுரமாகும் வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2) கண்ணீரோடு நீ விதைத்தால் கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) 2. தண்ணீரை நீ கடக்கும்போது கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2) வெள்ளம் போல சத்துரு வந்தால் ஆவியில் கொடியேற்றிடுவார் (2) 3. வாதை உந்தன் கூடாரத்தை அணுகாமல் காத்திடுவார் (2) பாதையிலே காக்கும்படிக்கு தூதர்களை அனுப்பிடுவார் (2) 4. சோர்ந்து போன உனக்கு அவர் சத்துவத்தை அளித்திடுவார் (2) கோரமான புயல் வந்தாலும் போதகத்தால் தேற்றிடுவார் (2)

Tuesday 15 December 2020

Yesuvaiye Thuthi Sei ஏசுவையே துதி செய்


 Yesuvaiye Thuthi Sei

ஏசுவையே துதி செய் நீ மனமே ஏசுவையே துதி செய் – கிறிஸ் தேசுவையே 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முடிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே

Monday 14 December 2020

Meetparin Satham மீட்பரின் சத்தம்


 Meetparin Satham

மீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம் மேகத்தின் மீது வருவேன் என்றார் எக்காளம் முழங்கிடும் வேளையில் தான் தூதர்கள் சூழ்ந்திட வந்திடுவார் 1. அவர் வரும் வேளையை அறிந்திடாமல் அழிந்திடும் பாதையில் செல்கின்றாரே ஆவியின் அச்சாரம் பெற்றிடாமல் அழுது புலம்பி திரிகின்றாரே --- மீட்பரின் 2. உலக கவலை மதியீனத்தால் உள்ளங்கள் உடைந்து வாழ்கின்றாரே உன்னதர் இயேசுவை நேசியாமல் உல்லாச வாழ்வினில் மடிகின்றாரே --- மீட்பரின் 3. உன்னை நேசிக்கும் அன்பருண்டு இயேசு என்னும் நேசருண்டு உள்ளத்தை அவரண்டை தந்திடு இன்று உண்மையாய் நித்திய ஜீவனுண்டு --- மீட்பரின்

Sunday 13 December 2020

Engum Pugal Yesu எங்கும் புகழ் இயேசு


 Engum Pugal Yesu

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே உங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் 1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்--- எங்கும் 2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண் திறக்கவே பல்வழி அலையும்பாதை தப்பினோரைப் பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்--- எங்கும் 3. தாழ்மை சற்குணமும் தயைகாருண்யமும் தழைப்பதல்லோ தகுந்த கல்வி பாழுந்துர்க்குணமும்பாவச் செய்கையாவும் பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ --- எங்கும் 4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச்செல்ல தூதர் நீங்களே தூயன் வீரரே கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக் கருணை நிறை வசனம் கற்றிடுவீர் --- எங்கும்

Wednesday 9 December 2020

Kaanaga Paathai கானகப் பாதை


 Kaanaga Paathai

1. கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும் மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன்செல்லுவாய் பயப்படாதே கலங்கிடாதே பாரில் ஏசு காத்திடுவார் பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் 2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே ஏசுவின் பின்னே நடந்தே தூய பஸ்கா நீ புசித்தே தேவ பெலனால் முன்செல்லுவாய் 3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும் கூட்டமாய் சென்றே கடப்பாய் சத்ரு சேனை மூழ்கி மாளும் ஜெயம் சிறந்தே முன்செல்லுவாய் 4.கசந்த மாரா உன்னைக் கலக்கும் கஷ்டத்தால் உன் கண் சொரியும் பின் திரும்பிச் சோர்ந்திடாதே நன்மை அருள்வார் முன்செல்லுவாய் 5.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும் கோர யோர்தான் வந்தெதிர்க்கும் தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால் தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய் 6.புதுக்கனிகள் கானான் சிறப்பே பாலும் தேனும் ஓடிடுமே இந்தக் கானான் கால் மிதித்து சொந்தம் அடைய முன்செல்லுவாய்

Tuesday 8 December 2020

Unnathamaana Karthare உன்னதமான கர்த்தரே


 Unnathamaana Karthare

1. உன்னதமான கர்த்தரே இவ்வோய்வு நாளைத் தந்தீரே இதற்காய் உம்மைப் போற்றுவோம் சந்தோஷமாய் ஆராதிப்போம். 2. விஸ்தாரமான லோகத்தை படைத்த கர்த்தா எங்களை இந்நாள்வரைக்கும் தேவரீர் அன்பாய் விசாரித்து வந்தீர் 3. எல்லாரும் உமதாளுகை பேரன்பு ஞானம் வல்லமை மற்றெந்த மாட்சிமையையும் அறிந்து உணரச் செய்யும். 4. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே நீர் எங்கள் ஆத்துமாவிலே தரித்து எந்த நன்மைக்கும் நீர் எங்களை உயிர்ப்பியும். 5. தெய்வாவியே நல் அறிவும் மெய் நம்பிக்கையும் நேசமும் சபையிலே மென்மேலுமே வளர்ந்து வரச் செய்யுமே.

Saturday 5 December 2020

Enthan Ullathil Puthu Unarvu எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு


 Enthan Ullathil Puthu Unarvu

1.எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு எந்தன் வாழ்வினில் புதுமலர்ச்சி எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும் எந்தன் இயேசுவால் புதிதாயின புதுவாழ்வு புது ஜீவன் புதுபாடல் என்னை சந்தித்த இயேசு தந்தார் ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன் ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பேன் 2.கதரேனரின் கடற்கரையில் கல்லறையிடை வாசம் செய்த பொல்லா ஆவி நாதர் பாதம் பணிய நல்ல அற்புத மாற்றம் பெற்றான் --- புதுவாழ்வு 3.ஓடையில் உருண்டோடி வரும் சின்னக் கற்களும் வடிவம் பெறும் சின்னத் தாவீதுக்கும் கோலியாத்தை வீழ்த்த கவண்கல் ஆயுதமாகிடும் --- புதுவாழ்வு 4. காட்டத்தி மரம் ஏறி ஒளிந்த குள்ளன் சகேயுவும் மாற்றம் பெற்றான் உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான் வெள்ளம் போல் மகிழ்வு பெற்றான் --- புதுவாழ்வு 5. சிலுவையண்டை வந்திட்டேனே இயேசுவின் கரம் பற்றிட்டேனே எந்தன் இயேசுவுடன் கொண்ட உறவு என்னை புது வடிவமாய் திகழச் செய்யும்--- புதுவாழ்வு

Wednesday 2 December 2020

Paduven Paravasam Aguven பாடுவேன் பரவசமாகுவேன்


 Paduven Paravasam Aguven

பாடுவேன் பரவசமாகுவேன் பறந்தோடும் இன்னலே 1.அலையலையாய் துன்பம் சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில் அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை 2.என்று மாறும் எந்தன் துயரம் என்றே மனமும் ஏங்கையில் மாராவின் கசப்பை மதுரமுமாக்கி மகிழ்வித்த மகிபனையே 3.ஒன்றுமில்லாத வெறுமை நிலையில் உதவுவாரற்றுப் போகையில் கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து தாகம் தீர்த்த தயவை 4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி பட்டினி சஞ்சலம் நேர்கையில் வானமன்னாவால் ஞானமாய் போஷித்த காணாத மன்னா இயேசுவை

Tuesday 1 December 2020

Karthar Kirubai Entrumullathu கர்த்தர் கிருபை என்றுமுள்ளது


 Karthar Kirubai Entrumullathu

கர்த்தர் கிருபை என்றுமுள்ளது என்றென்றும் மாறாதது ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை ஆண்டு நடத்திடுதே (2) கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர் பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மையுள்ளவர் 1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை கரத்தைப் பிடித்து நடத்தினாரே தகப்பன் பிள்ளையை சுமப்பது போல தோளில் சுமந்து நடத்தினாரே 2. வியாதி படுக்கை மரண நேரம் பெலனற்ற வேளையில் தாங்கினாரே விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே 3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி தைரியப்படுத்தி நடத்தினாரே 4.கண்ணீர் கவலை யாவையும் போக்க கர்த்தர் இயேசு வருகின்றாரே கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம் அவரோடு நாமும் பறந்து செல்வோம்

Yesuve Enthan Nesare இயேசுவே எந்தன் நேசரே


 Yesuve Enthan Nesare

இயேசுவே எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றிப் பாடுவேன் 1. பாவத்தை போக்கிடும் பரமன் நீரல்லவா பாதையை காட்டிடும் மேய்ப்பன் நீரல்லவா அரணும் என் கோட்டையும் இறைவா நீரல்லவா (2) எந்தன் அடைக்கலம் தஞ்சம் கோட்டை என்றும் நீரே அல்லவா (2) 2. வாழ்க்கையாம் படகிலே தலைவன் நீரல்லவா வாழ்விலும் தாழ்விலும் துணைவர் நீரல்லவா ஒரு நாள் வான் மீதிலே வருவீர் என் மன்னவா (2) எந்தன் ஜீவ காலம் வரை உம்மையே எண்ணி வாழ்வேன் நாயகா (2)

Sunday 29 November 2020

Kartharin Kirubaigalai கர்த்தரின் கிருபைகளை

 

Kartharin Kirubaigalai கர்த்தரின் கிருபைகளை என்றென்றும் பாடிடுவோம் அவர் உயர்ந்த நாமமதை ஒருமித்து உயர்த்திடுவோம் 1. சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவே சபையாய் நம்மை அழைத்தாரே சாற்றிடுவோம் நம் துதியினையே சர்வ வல்லவராம் இயேசுவுக்கே 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து சேதமின்றி நம்மை காத்தாரே பூரிப்புடனே நாம் பாடிடுவோம் புதிய பெலத்தால் நிறைந்திடுவோம் 3. மரண இருளில் நடந்திடினும் மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே சோர்ந்து போகாமல் ஜெயம் பெறவே கர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும் 4. ஜெயத்தின் கீதங்கள் பாடிடுவோம் ஜெயமும் முழங்க துதித்திடுவோம் அல்லேலூயா நாம் ஆர்ப்பரித்தே அல்லும் பகலிலும் பாடிடுவோம் 5. பொன்னிலும் விலையேறப் பெற்றதான நல் விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம் மாற்றுவார் சாயலை அந்நாளிலே மாண்புடனே அவர் மகிமையிலே

Friday 27 November 2020

Idhuvarai Seidha Seyalgalukkaaga இதுவரை செய்த செயல்களுக்காக


 Idhuvarai Seidha Seyalgalukkaaga

இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2) 1. உவர் நிலமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றிய உம்மை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் (2) நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2) 2. தனி மரமாக இருந்த என்னை கனி மரமாக மாற்றிய உம்மை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் (2) இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2) 3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும் (2) தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

Thursday 26 November 2020

Aayiram Sthothiramae ஆயிரம் ஸ்தோத்திரமே


 Aayiram Sthothiramae

ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே பள்ளத்தாக்கிலே அவர் லீலி சாரோனிலே ஓர் ரோஜா 1. வாலிப நாட்களிலே என்னைப் படைத்தவரை நினைத்தேன் ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது இயேசுவின் அன்பினாலே 2. உலக மேன்மை யாவும் நஷ்டமாய் எண்ணிடுவேன் சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே சாத்தானை முறியடிப்பேன் 3. சிற்றின்ப கவர்ச்சிகளை வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர் துன்பத்தின் மிகுதியால் தோல்விகள் வந்தாலும் ஆவியில் மகிழ்ந்திடுவேன் 4. பலவித சோதனையை சந்தோஷமாய் நினைப்பேன் எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்கு கீழ்ப்படுத்தி விசுவாசத்தில் வளர்வேன் 5. இயேசுவின் நாமத்திலே ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும் என்றென்றும் உம்மில் வாழ

Wednesday 25 November 2020

Sthotharipen Sthotharipen ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்


 Sthotharipen Sthotharipen

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே 1. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகின்றேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 2. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன் 3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 5. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் 6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச் சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

Nandriyaal Nenjam Nirainthiduthe நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே


 Nandriyaal Nenjam Nirainthiduthe

நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே நன்மைகள் நாளும் நினைந்திடுதே என்னருள் நாதர் அருட்கொடைகள் எத்தனை ஆயிரம் என்றிடுதே 1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள் ஆறுகள் காடுகள் நீர்நிலைகள் சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள் தூயநல் தேன் மலர் தீங்கனிகள். 2.இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள் எழிலுடன் குழந்தைச் செல்வங்கள் துன்புறும் வேளையில் துணைக்கரங்கள் துதித்திட சொல்லுடன் ராகங்கள் 3. உறவுகள் மகிழ்ந்திட நல் நண்பர் உதவிகள் செய்திட பல்பணியர் அறவழி காட்டிட அருள் பணியர் அன்புடன் ஏற்றிட ஆண்டவர் 4.உருவுடன் விளங்கிட ஓருடலம் உடலதில் இறைவனுக்கோர் இதயம் பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய திருமறை பேசிடும் வானுலகம்

Monday 23 November 2020

Nandriyal Padiduvom நன்றியால் பாடிடுவோம்


 Nandriyal Padiduvom

நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே 1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே தாங்கியே இந்நாள் வரையும் தயவாய் மா தயவாய் 2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெருங் கிருபை மாநிலத்தோர்க் கீந்தாரேசு சுவிசேஷ ஒளியாய் 3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும் சேவையில் மரித்தார் சேர்ந்து வந்து சேவை புரிந்து சோர்ந்திடாது நிற்போம் 4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே சத்ருக்களாயினாரே சத்தியத்தை சார்ந்து தேவ சித்தம் செய்திடுவோம் 5. அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லா திரு ஆக்கமிதனை அவனியோர்க்களிப்பீர் 6. உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை உடன் சுதந்திரராய் இருக்க கிருபையின் மகா தானமது வருங் காலங்களில் விளங்க 7. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய் சீக்கிரம் வருவார் சிந்தை வைப்போம் சந்திக்கவே சீயோனின் இராஜனையே

Friday 20 November 2020

Kartharai Naan Ekkalathilumey கர்த்தரை நான் எக்காலத்திலுமே


 Kartharai Naan Ekkalathilumey

கர்த்தரை நான் எக்காலத்திலுமே கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் அவர் கண்ணின் மணிபோல் காத்ததினாலே கருத்துடனே துதிப்பேன் 1.ஆண்டவருக்குள் என் ஆத்மா மகிழும் ஆதலால் கலக்கமில்லை அவர் ஆபத்துக் காலத்தில் விடுவித்துக் காத்து ஆயுளை நீட்டுகிறார் என்னோடு கூட கர்த்தர் மகிமையை எல்லோரும் உயர்த்திடுங்கள் அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார் என் விண்ணப்பம் கேட்டார் - கர்த்தரை 2.இவ்வேளை கூப்பிட்டான் கர்த்தர் அதற்கு இரக்கமாய் செவிசாய்த்தார் அவர் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கினார் இரட்சிப்பை அருளிச் செய்தார் சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருக்கும் ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுபவருக்கோ சிறு நன்மையும் குறையாதே - கர்த்தரை

Tuesday 17 November 2020

Konja Kaalam Yesuvukkaaga கொஞ்ச காலம் இயேசுவிற்காக


 Konja Kaalam Yesuvukkaaga

கொஞ்ச காலம் இயேசுவிற்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நாம் காணும் போது அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன் ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்தநாடு சுதந்தரிப்பேன் 1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன் ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் – கொஞ்ச 2. இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார் என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன் – கொஞ்ச 3. வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும் என்னைப் பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்

Udaintha Ullamathai உடைந்த உள்ளமதை


 Udaintha Ullamathai

உடைந்த உள்ளமதை தேற்றிடும் யேசுநாதா (2) காரிருள் சூழ்கையிலே காத்திடும் கரத்தினால் (2) ஆ ... ஆ ... ஆ ... 1. நேசித்தவர்கள் கைவிட்டபோது நெஞ்சம் உருகியே நின்றேன் (2) என் நேசர் எங்கே என் நேசர் எங்கே என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ... 2. கண்ணீரின் பாதையைக் கடக்கும்போது துணையாய் யாருமே இல்லை (2) யாரிடம் செல்வேன் யாரிடம் செல்வேன் என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ... 3. ஆறுதலற்ற வாழ்வினைக் கண்டு துக்கத்தால் வாடியே போனேன் (2) ஆறுதல் எங்கே ஆறுதல் எங்கே என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ...

Sunday 15 November 2020

Thollai Kashtangal Soolnthidum தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்


 Thollai Kashtangal Soolnthidum

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என் உள்ளம் மாறிற்றே இயேசென்னைக் காக்கவல்லோர் 3.என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை யார் கைவிட்டாலும் பின்செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிட மாட்டார்

Saturday 14 November 2020

Lo He Comes With Clouds


 


1. Lo he comes with clouds descending once for favoured sinners slain thousand thousand saints attending swell the triumph of his train. Hallelujah God appears on earth to reign. 2. Every eye shall now behold him robed in dreadful majesty those who set at naught and sold him pierced and nailed him to the tree deeply wailing shall the true Messiah see. 3. Now Redemption long expected see in solemn pomp appear all his saints by man rejected now shall meet him in the air Hallelujah See the day of God appear 4. Yea amen let all adore thee high on Thine eternal throne Saviour take the power and glory claim the kingdom for thine own Hallelujah Everlasting God come down.


Paavikaai Maritha Yesu பாவிக்காய் மரித்த இயேசு


 Paavikaai Maritha Yesu

1.பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார் கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார் திகிலோடு மேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே அவர் காயம் தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும் ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும் அல்லேலூயா வல்ல வேந்தே வந்திடும்.

Wednesday 11 November 2020

Yaar Vendum Natha யார் வேண்டும் நாதா


 Yaar Vendum Natha

யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணாண வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை பதில் என்ன சொல்வேன் நீரே போதும் 2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம் பேரின்ப நாதா நீர் போதாதா யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ எங்கே நான் போவேன் உம்மையல்லால் 3. உற்றாரின் பாசம் உடன் வருமோ மற்றோரின் நேசம் மாறாததோ உம்மன்பின் நேசத்திற் கிணையாகுமோ ஏனையா கேட்டீர் இக்கேள்வியை 4. என்னைத் தள்ளினால் எங்கே போவேன் அடைக்கலம் ஏது உம்மையல்லால் கல்வாரி இன்றி கதியில்லையே கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன் 5. உம்மோடல்லாது வாழ்வது ஏன் உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன் மனம் போன வாழ்கை வாழ்க்கையல்ல வாழ்வேனே என்றும் உமக்காக நான்

Ooivunaalathanai yaasarithiduveer ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர்


 Ooivunaalathanai yaasarithiduveer

1. ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர் உலகிலுள்ளோரே நீர் ஓது மெய்த்தேவன்றன் ஆதி விதியிதை உள்ளத்திற் கொள்வீரே 2. ஆறுதினங்களும் லௌகீகவேலையை ஆதரவாய்ப் புரிவீர் ஆன வேழாந்தினம் வைதீகலலுவலை அவசியம் பார்த்திடுவீர் 3. ஆசோதை யாவர்க்கும் அவசியம் வேண்டுமென்றாதியி லெம்பரனார் அடுத்த வேழா நாளைப் பரிசுத்தமாக்கினார் அப்பரிசறியீரோ 4. அருமையாமந்நாளை அவமாக்கித் திருடீர் அதைத் திருநாளாக்கி ஆரியர் போதகங் கேட்டிடவாலயம் அதற்கு நடந்திடுவீர் 5. மக்களுந் தாயரும் வீட்டுடைத் தலைவரும் மற்றுள மித்திரரும் வாருங்களாலாயம் சேருங்கள் தேவனை வாழ்த்தி வணங்குவீரே

Monday 9 November 2020

En Yesuve Naan Entrum என் இயேசுவே நான் என்றும்


 En Yesuve Naan Entrum

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழி நடத்தும் 1. உளையான சேற்றினின்று தூக்கியே நிறுத்தினீரே உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் --- என் 2. அலைந்தோடும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்யும் --- என் 3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின் செல்லுவேன் --- என் 4. அக்கினி சூளையிலே நின்ற எம் மெய் தேவனே விசுவாசம் திடமனதும் என்றென்றும் தந்தருளும் --- என் 5. ஆகாரின் அழுகுரலை அன்று நீர் கேட்டீரல்லோ கருத்துடன் ஜெபித்துமே நான் உந்தனைத் தேடுகிறேன் --- என்

Thursday 15 October 2020

viduthalai viduthalai விடுதலை விடுதலை


 viduthalai viduthalai

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தில் தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை (2) 1. தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை கெடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை என்ன சந்தோஷம் இந்த விடுதலை (2) எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் (2) – விடு 2. எரிக்கும் கோபப் பிடியினில் விடுதலை விதைக்கும் தீய பொறாமையில் விடுதலை அன்பர் இயேசுவே தந்த விடுதலை (2) இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே விடுதலை (2) – விடு 3. அடுக்காய் பேசும் பொய்யினில் விடுதலை மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே (2) தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் விடுதலை (2) – விடு 4. மாறிட்ட எந்தன் உள்ளத்தில் விடுதலை மாறிடா அன்பர் அடிமையாய் மாற்றிடுதே என்ன சந்தோஷம் இந்த அடிமைக்கு (2) மீட்கும் அன்பை ருசித்திடவே ஆவலில்லையே (2) – விடு

Sunday 4 October 2020

Unthan Sitham Pola Ennai உந்தன் சித்தம் போல என்னை


 Unthan Sitham Pola Ennai

உந்தன் சித்தம் போல என்னை ஒவ்வொரு நாளும் நடத்தும் எந்தன் சித்தம் போல அல்ல என் பிதாவே என் தேவனே 1. இன்பமுள்ள ஜீவியமோ அதிக செல்வம் மேன்மைகளோ துன்பமற்ற வாழ்வுகளோ தேடவில்லையே அடியான் 2. நேர் வழியோ நிரப்பானதோ நீண்டதுவோ குறுகியதோ பாரம் சுமந்தோடுவதோ பாரில் பாக்கியமானதுவே 3. அந்தகாரமோ பயமோ அப்பனே பிரகாசமோ எந்த நிலை நீரளிப்பீர் எல்லாம் எனக் காசீர்வாதம் 4. ஏது நலமென்றறிய இல்லை ஞானம் என்னில் நாதா தீதிலா நாமம் நிமித்தம் நீதி வழியில் திருப்பி 5. அக்கினி மேக ஸ்தம்பங்களில் அடியேனை என்றும் நடத்தி அனுதினமும் கூட இருந்து அப்பனே ஆசீர்வதிப்பீர்

Saturday 3 October 2020

Anbil Ennai Parisuthanaaka அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க


 Anbil Ennai Parisuthanaaka

1. அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன் 2. மரித்தோரில் முதல் எழுந்ததினால் புது சிருஷ்டியின் தலையானீரே சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை --- என் 3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே முதற்பேராய் நீர் இருக்க ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே உம் சாயலில் நான் வளர --- என் 4. வருங்காலங்களில் முதற்பேராய் நீர் இருக்க நாம் சோதரராய் உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி ஆளுவோம் புது சிருஷ்டியிலே --- என் 5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே நான் இதற்கென்ன பதில் செய்குவேன் உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட என்னை தந்தேன் நடத்திடுமே --- என்

Monday 21 September 2020

Desame Payapadathe தேசமே பயப்படாதே


 Desame Payapadathe

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர் இயேசு உந்தனுக்கே மாபெரும் காரியம் செய்திடுவார் 1. செழிப்பான புதுவாழ்வு தேவனே அருளிடுவார் சுகவாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார் - தேசமே 2. மலைபோல வருவதெல்லாம் பனிப் போல் மறைந்திடுமே உன்னதரின் கிருபைகளும் உந்தனைச் சூழ்ந்திடுமே - தேசமே 3. தேவனுடன் உறவு கொண்டு தினம் தினம் வாழ்ந்திடுவாய் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய் - தேசமே

Tuesday 15 September 2020

Mahilnthiduven Naan Kartharukul மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்

Mahilnthiduven Naan Kartharukul மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள் களிகூருவேன் என் தேவனுக்குள் இரட்சிப்பின் தேவனுக்குள் ஆமேன் அல்லேலூயா (4) 1. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் திராட்சை செடி பழம் இல்லாமற் போனாலும் 2. ஒலிவ மரத்தின் பலனற்று போனாலும் வயல்களில் தானியம் விளையாமற் போனாலும் 3. கிடையில் ஆடுகள் முதலற்று போனாலும் தொழுவத்தில் மாடுகள் இல்லாமற் போனாலும்

Sunday 13 September 2020

Iratchippai Uyarthi Solvom இரட்சிப்பை உயர்த்தி சொல்வோம்

Iratchippai Uyarthi Solvom 1. இரட்சிப்பை உயர்த்தி சொல்வோம் லோகம் நடுங்க நரகாக்கினையை சொல்வோம் பாவம் அடங்க பூர்வ காலத் தேவ தாசர் விஸ்தரித்தாப்போல், மோட்ச லோகம் போகுமுன்னே, செல்வோம், செல்வோம் ஆர்ப்பரிப்புடனே செய்வோம், செய்வோம், போர் பலத்துடனே நானா ஜாதி பாஷைக்காரர் இரட்சிப்படைய மோட்சலோகம் போகு முன்னே. 2. இயேசு வீரர் யுத்த சத்தம் பூமியெங்கும் கேள் மீட்படைந்த பேதைகளின் சாட்சிகளுங் கேள் முழு லோகத்தையும் வெல்ல இன்னும் கொஞ்ச நாள் மோட்ச லோகம் போகு முன்னே. 3. தீதாய்ச் சத்துருக்கள் என்ன சொன்ன போதிலும் சுத்த ஆவியின் பலத்தைப் பெற்று யாவிலும் உண்மையாகப் போர் புரிந்தால் வெல்வோம் சாவிலும் மோட்ச லோகம் போகு முன்னே.

Wednesday 9 September 2020

Sarvathaiyum Anbai சர்வத்தையும் அன்பாய்

Sarvathaiyum Anbai 1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம் மா நன்றி கூறியே சாஷ்டாங்கம் பண்ணுவோம். 2. தயாபரா என்றும் எம்மோடிருப்பீராக கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ஈவீராக மயங்கும் வேளையில் நேர் பாதை காட்டுவீர் இம்மை மறுமையில் எத்தீங்கும் நீக்குவீர். 3. வானாதி வானத்தில் என்றென்றும் அரசாளும் திரியேக தெய்வத்தை விண்ணோர் மண்ணோர் எல்லாரும் இப்போதும் எப்போதும் ஆதியிற் போலவே புகழ்ந்து ஸ்தோத்திரம் செலுத்துவார்களே.

Tuesday 8 September 2020

Now Thank We All Our God

1. Now thank we all our God, with hearts and hands and voices who wondrous things has done in whom God's world rejoices who from our mother's arms has blessed us on our way with countless gifts of love and still is ours today. 2. Oh may this bounteous God through all our life be near us with ever-joyful hearts and blessed peace to cheer us and keep us all with grace and guide us when perplexed and free us from all ills in this world and the next. 3. All praise and thanks to God The father now be given the Son, and Him who reigns with them in highest heaven the one eternal God whom heaven and earth adore for thus it was, is now and shall be evermore.

Sunday 6 September 2020

Unnai Kaakiravar Urangaar உன்னைக் காக்கிறவர் உறங்கார்

Unnai Kaakiravar Urangaar உன்னைக் காக்கிறவர் உறங்கார் உந்தன் காலைத் தள்ளாட வொட்டார் கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் - 2 1. மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும் ஆழிபோல் சோதனை பெருகினாலும் கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை 2. பாவமும் சாபமும் சூழ்ந்த போது பாவத்துக்காய் மனம் திரும்பும்போது பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை 3. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாகவும் இருக்கும் போது கர்த்தரை தேடுவோர்க்குக் குறைவில்லை என்றதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை 4. வழுவாது உன்னைக் காத்திடவும் மகிமையின் சந்நிதியில் மகிழ்ந்திடவும் மாசற்று நிறுத்த வல்லவர் இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே - உன்னை

Friday 4 September 2020

Safely Through Another Week

1. Safely through another week God has brought us on our way let us now a blessing seek waiting in his courts today day of all the week the best emblem of eternal rest. 2. While we pray for pardoning grace through the dear Redeemer's name show thy reconciled face take away our sin and shame from our earthly cares set free may we rest this day in thee 3. Here we come thy name to praise let us feel thy presence near May thy glory meet our eyes while we in thy house appear here afford us, Lord, a taste of our everlasting feast. 4. May thy gospel's joyful sound conquer sinners, comfort saints may the fruits of grace abound bring relief for all complaints thus may all our Sabbaths prove Till we join the church above

Monday 31 August 2020

Koodathathu Ontrumillaiyae கூடாதது ஒன்றுமில்லையே

Koodathathu Ontrumillaiyae கூடாதது ஒன்றுமில்லையே (4) நம் தேவனால் கூடாதது கூடாதது ஒன்றுமில்லையே 1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே வேலைக்காரன் சொஸ்தமானானே சுத்தமாகு என்று சொன்னாரே குஷ்டரோகி சொஸ்தமானானே 2. கடலின் மேல் நடந்தாரே கடும்புயல் அதட்டினாரே பாடையைத் தொட்டாரே வாலிபன் பிழைத்தானே 3. நீ விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பாயே பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே பெரிய காரியம் செய்வாயே 4. பாவங்கள் போக்குவாரே சாபங்கள் நீக்குவாரே தீராத நோய்களையும் தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே 5. லாசருவே வா என்றாரே மரித்தவன் பிழைத்தானே எழுந்திரு என்று சொன்னாரே யவீரு மகள் பிழைத்தாளே 6. வஸ்திரத்தை தொட்டாளே வல்லமை புறப்பட்டதே எப்பத்தா என்று சொன்னாரே செவிட்டு ஊமையன் பேசினானே

Vaaram Mutrum Shemamaai வாரம் முற்றும் ஷேமமாய்

Vaaram Mutrum Shemamaai 1. வாரம் முற்றும் ஷேமமாய் தேவன் காத்தார் தயவாய் ஆலயத்தில் கூடுவோம் வேதங் கேட்டு வாழ்த்துவோம் வாரத்தில் மேலானதே மோட்சம் காட்டும் நாள் இதே 2. யேசுநாதர் ரத்தத்தால் நீதியை நாம் பெற்றதால் நேசர் அவர் நாமத்தில் கூடி வேதங் கேட்கையில் லோக வேலை விட்டோய்வோம் வாஞ்சையோடாராதிப்போம் 3. தேவ ஆவி அருளால் தேவ அன்பைக் காண்பதால் ஆவலாகப் போற்றுவோம் தேவ சாயல் ஆகுவோம் மோட்ச வீட்டின் வாழ்விலே வாழ்வோமாக பாலரே 4. மாசிலா யெருசலேம் நாம் வசிக்கும் ஆலயம் நீதி அங்கி பெற்றதால் ஜோதியுள்ளோர் யேசுவால் வாரம் தோறும் பாடுவோம் வேதம் ஓதிப் போற்றுவோம்

Sunday 30 August 2020

Oru Varthai Sollum ஒரு வார்த்தை சொல்லும்

Oru Varthai Sollum ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு 2.இருளான வாழ்க்கை எல்லாம் ஒளியாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு 3.எரிகோவின் தடைகள் எல்லாம் துதிகளாலே மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு 4.வியாதிகள் வறுமையெல்லாம் விசுவாசத்தால் மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - ஒரு

Anathi Devan Un Adaikalame அனாதி தேவன் உன் அடைக்கலமே

Anathi Devan Un Adaikalame அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் – மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த 2. கானக பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை அரும் நீருற்றாய் மாற்றினாரே --- இந்த 3. கிருபை கூர்ந்து மனதுருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் --- இந்த 4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த 5. ஆனந்தம் பாடி திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த

En Thevan En Velicham என் தேவன் என் வெளிச்சம்

En Thevan En Velicham என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் 1. தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும் அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார் என்னை அவர் நிழலில் வைத்து காத்திடுவார் கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என் 2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு தீமை செய்ய விரும்புகையில் என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார் என்னை பகைத்தவர்கள் தேவனை அறிந்தாரே – என்

Vananthira Yatherayil வனாந்திர யாத்திரையில்

Vananthira Yatherayil வனாந்திர யாத்திரையில் களைத்து நான் சோர்ந்து போகும் நேரங்களில் நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் (2) என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும் பங்கம் வந்திடாமல் அங்கு பாதை ஒன்று கண்ணில் தெரியுமே விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன் தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும் வேதனை நிறைந்த வாழ்வை சத்துரு விதைத்திடும் போது மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும் காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான் தனிமை என்று எண்ணும் போது மகிமை தேவன் தாங்கிடுவாரே இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார் இனி எனக்கொன்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர

Unnathamanavarin உன்னதமானவரின்

Unnathamanavarin 1.உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் 2. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே 3. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் – இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் 4. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன்பக்கம் விழுந்தாலும் – அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே 5. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் 6. உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவர் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவர் 7. சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் 8. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்

Wednesday 12 August 2020

Igathin Thukkam Thunbam இகத்தின் துக்கம் துன்பம்

Igathin Thukkam Thunbam 1. இகத்தின் துக்கம் துன்பம் கண்ணீரும் மாறிப்போம் முடிவில்லாத இன்பம் பரத்தில் பெறுவோம் 2. இதென்ன நல்ல ஈடு துன்பத்துக்கின்பமா பரத்தில் நிற்கும் வீடு மரிக்கும் பாவிக்கா 3. இப்போது விழிப்போடு போராட்டம் செய்குவோம் விண்ணில் மகிழ்ச்சியோடு பொற் கிரீடம் சூடுவோம் 4. இகத்தின் அந்தகார ராக்காலம் நீங்கிப்போம் சிறந்து ஜெயமாக பரத்தில் வாழுவோம் 5. நம் சொந்த ராஜாவான கர்த்தாவை நோக்குவோம் கடாட்ச ஜோதியான அவரில் பூரிப்போம்.

Tuesday 11 August 2020

Neerintri Vaalvethu Iraiva நீரின்றி வாழ்வேது இறைவா

Neerintri Vaalvethu Iraiva நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் (2) உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் 1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே (2) உம் வார்த்தையில் உண்டு அற்புதமே (2) — நீரின்றி 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர் உம்மையன்றி அணுவேதும் அசையாதையா (2) உம் துணையின்றி உயிர் வாழ முடியாதையா (2) — நீரின்றி 3. எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் (2) ஆயிரம் ஆண்டுகள் போதாதையா (2) — நீரின்றி

Sunday 9 August 2020

Aasirvathiyum Karthare ஆசீர்வதியும் கர்த்தரே

Aasirvathiyum Karthare ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 1. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே – வீசீரோ 2. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே – வீசீரோ 3. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவன் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ 4. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் – வீசீரோ 5. ஞான விவாகம் எப்போதும் ஞாபகமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாக தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ

Saturday 8 August 2020

Senaigalin Devan சேனைகளின் தேவன்

Senaigalin Devan சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர் 1. எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார் --- சேனை 2. சேனையின் கர்த்தரை நம்பிடுவாய் பாக்கியம் அடைந்திடுவாய் உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார் --- சேனை 3. எதிர்ப்பு ஏளனம் பெருகினாலும் ஜெய கர்த்தர் நமக்குண்டு ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம் ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம் --- சேனை 4. ஆவியின் வரத்தை தந்திடுவார் ஆவியை பொழிந்திடுவார் விரைந்திடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய் --- சேனை

Friday 7 August 2020

Arasanai Kanamal அரசனைக் காணாமல்

Arasanai Kanamal அரசனைக் காணாமலிருப்போமோ – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ அனுபல்லவி பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ – யூத சரணங்கள் 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத — அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் – மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார் பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே - அவர் பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே – யூத — அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார் – அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார் இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் – நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் – யூத — அரசனை 4. அரமனையில் அவரைக் காணோமே – அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே மறைந்த உடு அதோ பார் திரும்பினதே – பெத்லேம் வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் – யூத — அரசனை 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே – ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே வன்கண்ணன் ஏரோதைப் பாராமல் – தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல் – யூத — அரசனை

Wednesday 5 August 2020

Karthar Unnai கர்த்தர் உன்னை

Karthar Unnai கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் நீ கலங்காதே மனமே 1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும் களங்களில் நிரம்பிடும் தானியமும் நிறைவான நன்மை உண்டாக கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார் வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார் தன் பெயரை உனக்கு வழங்கினாரே சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும் உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் பிறருக்கு நீயும் கடன் கொடுக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

Tuesday 4 August 2020

Anantha Thuthi Oli ஆனந்த துதி ஒலி

Anantha Thuthi Oli ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ ஆ 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு — ஆ ஆ 2. ஆதி நிலை ஏகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோமே பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் — ஆ ஆ 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் — ஆ ஆ 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் — ஆ ஆ 5. ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல்நாதர் போற்றியே பாதம் தரிப்போம் அனாதி தேவன் அடைக்கலம் பாரில் அனாதையாவதே இல்லை – ஆ ஆ 6. பார் போற்றும் தேவன் நம் தேவன் பாரினில் வேறில்லை பாக்கியம் நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே வேறென்ன வாழ்வினில் வேண்டும் பிள்ளைகளும் சபையும் பிதாமுன்னே நிலைக்கும் பரிசுத்தர் மாளிகை எழும்பும் – ஆ ஆ

Sunday 2 August 2020

En Inba Thunba Neram என் இன்ப துன்ப நேரம்

En Inba Thunba Neram என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே ராஜனே தேற்றி என்னை தாங்கிடுவார் – என் 2. இவரே நல்ல நேசர் – என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் – என் 3. பார்போற்றும் ராஜன் – புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன் – என்

Friday 31 July 2020

Enakkai Jeevan Vittavare எனக்காய் ஜீவன் விட்டவரே

Enakkai Jeevan Vittavare 1. எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே — இயேசு 3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் — இயேசு 4. மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் — இயேசு

Unnai Sirushtithavar உன்னை சிருஷ்டித்தவர்

Unnai Sirushtithavar உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ கலங்கிடும் மாந்தரே உன் கண்ணீரை துடைத்திடு கவலையை விட்டு விட்டு வா இயேசுவைப் பின்பற்றி வா 1. காற்றும் கடலும் எதற்காக கனிமரமெல்லாம் எதற்காக சூரிய சந்திரனும் எதற்காக அத்தனையும் அது உனக்காக 2. மலையும் மலர்களும் எதற்காக நிலமும் நீரும் எதற்காக பாடும் பறவைகள் எதற்காக அத்தனையும் அது உனக்காக 3. சிலுவை சுமந்தது எதற்காக சிந்தின இரத்தம் எதற்காக ஜீவனை கொடுத்தது எதற்காக அத்தனையும் அது உனக்காக

Itho Manusharin Mathiyil இதோ மனுஷரின் மத்தியில்

Itho Manusharin Mathiyil இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே 2. தேவ ஆலயமும் அவரே தூய ஒளிவிளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவநதியும் அவரே 3. மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தலமதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே 4. சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உம்மையே 5. முன்னோடியாய் இயேசு பரன் மூலைக்கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

Wednesday 29 July 2020

Enthan Yesu Vallavar எந்தன் இயேசு வல்லவர்

Enthan Yesu Vallavar எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார் ஆ பேரின்பம் அவர் என் தஞ்சமே அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன் 1.அற்புதமாம் அவர் அன்பு அண்டினோர் காக்கும் தூய அன்பு இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு மாறாதவர் எந்தன் இயேசு என்றும் சார்ந்திடுவேன் 2.சர்வ வல்ல தேவனிவர் சாந்தமும் தாழ்மை உள்ளவராம் எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம் நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை 3.குற்றங்களை மன்னித்தவர் தம்மண்டை என்னைச் சேர்த்துக் கொண்டார் எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர் சார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர் 4.கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் சீரான பாதை நடத்திடுவார் எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார் எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன் 5.ஜெயங் கொண்ட வேந்தனிவர் பாதாளம் யாவும் வென்றவராம் வெற்றியுடன் முன்சென்றிட கிருபை நல்கிடுவார் முன்செல்லுவேன் இயேசுவுடன் என்றும் ஆனந்தமே

Yesu En Parigari இயேசு என் பரிகாரி

Yesu En Parigari இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப இராஜா என் பரிகாரி 1. என்ன துன்பங்கள் வந்தாலும் என்ன வாதைகள் நேர்ந்தாலும் என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப இராஜா என் பரிகாரி 2. சாத்தான் என்னை எதிர்த்தாலும் சத்துரு என்னை தொடர்ந்தாலும் சஞ்சலங்கள் வந்தபோது – இன்ப இராஜா என் பரிகாரி 3. பணக் கஷ்டங்கள் வந்தாலும் மனக்கஷ்டங்கள் நேர்ந்தாலும் ஜனம் என்னை வெறுத்தாலும் – இன்ப இராஜா என் பரிகாரி 4. பெரும் வியாதிகள் வந்தாலும் கடும் தோல்விகள் நேர்ந்தாலும் பல சோதனை சூழ்ந்தாலும் – இன்ப இராஜா என் பரிகாரி 5. எனக்கென்ன குறை உலகில் என் இராஜா துனை எனக்கு என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப இராஜா என் பரிகாரி

Monday 27 July 2020

Nandriyal Ponguthey நன்றியால் பொங்குதே



Nandriyal Ponguthey நன்றியால் பொங்குதே எமதுள்ளம் நாதன் செய்பல நன்மைகட்காய் நாள்தோறும் நலமுடன் காத்தனரே நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா நன்றியால் ஸ்தோத்தரிப்போம் 1. கடந்த வாழ்நாளெல்லாம் கருத்துடனே கண்மணிபோல் நம்மைக் காத்தனரே கண்ணீர் கவலையினை மாற்றினாரே கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால் 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து ஜீவிய பாதை நடத்தினாரே ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம் ஜீவனின் அதிபதியை அல்லேலூயா ஜீவனின் அதிபதியை – நன்றியால் 3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே அதிசயங்கள் பல புரிந்தனரே ஆயிரம் நாவுகள் தான் போதுமா ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா ஆண்டவரைத் துதிக்க – நன்றியால் 4. பாவ சேற்றில் அமிழ்ந்த நம்மை பாசக் கரம் கொண்டு தூக்கினாரே கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர் கருத்துடன் காத்தனரே அல்லேலூயா கருத்துடன் காத்தனரே – நன்றியால் 5. பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி பொற்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம் ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்

O Perfect Love


O Perfect Love all human thought transcending Lowly we kneel in prayer before Thy throne That theirs may be the love which knows no ending Whom Thou forever more dost join in one. O Perfect Life, be Thou their full assurance of tender charity and steadfast love of patient hope and quiet brave endurance with childlike trust that fears no pain or death. Grant them that joy that brightens earthly sorrow Grant them the peace which calms all earthly strife and to life's day the glorious unknown morrow that dawns upon eternal love and life.

Sunday 26 July 2020

Aandava Prasannamagi ஆண்டவா பிரசன்னமாகி

Aandava Prasannamagi 1. ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் தாசர் மீதில் ஆசிர்வாதம் ஊற்றிடும் அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப் பண்ணுவீர் ஆசையோடு நிற்கிறோமே ஆசீர்வாதம் ஊற்றுவீர் 2. தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடு கூடினோம் உந்தன் திவ்ய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம் 3. ஆண்டவா மெய்பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர் அன்பின் ஜுவாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர் 4. தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே கடாட்சியும் பெந்தேகோஸ்தின் திவ்ய ஈவை தந்து ஆசிர்வதியும்

God Is Here


1. God is here and that to bless us With the Spirit’s quickening power See the cloud already bending, Waits to drop the grateful shower. Let it come O Lord we pray Thee Let the shower of blessing fall We are waiting we are waiting Oh revive the hearts of all. 2. God is here we feel His presence in this consecrated place But we need the soul refreshing Of His free unbounded grace 3. God is here oh then believing Bring to Him our one desire that His love may now be kindled till its flame each heart inspire 4. Saviour grant the prayer we offer While in simple faith we bow from the windows of Thy mercy Pour us out a blessing now.

Tuesday 21 July 2020

Thoothargal Pan Isaikka தூதர்கள் பண் இசைக்க

Thoothargal Pan Isaikka தூதர்கள் பண் இசைக்க ஆயர்கள் வாழ்த்துப்பாட வானில் வெள்ளி ஜொலித்திட ஞானியர் தேடி மகிழ்ந்திட துங்கவன் இயேசு பாரில் ஜெனித்தாரே. 1.தீர்க்கன் வேதவாக்கு நிறைவேற திருப்பாலன் மண்ணில் மனுவானார் மார்கழி பனியில் மாடிடை குடிலில் மரியின் மடியில் மனுவாக மானிடர் பாவம் போக்கிடவே மனுவாய் மலர்ந்தாரே. 2.இளங்காலை தென்றல் வீசிடவே இம்மானுவேலனாய் பிறந்தாரே பாரின் பாவங்கள் போக்கிடவே சாபங்கள் யாவும் நீக்கிடவே பெத்தலை தன்னில் புல்லணை மீதில் புனிதர் பிறந்தாரே. 3.என்னையும் உன்னையும் இரட்சிக்கவே தன்னையே நமக்காய் தந்திட்டாரே சீரேசு பாலன் ஜெயமனுவேலன் சீயோனின் ராஜா சாரோனின் ரோஜா சமாதான தேவன் சாந்த சொரூபி நித்தியர் பிறந்தாரே.

Monday 20 July 2020

Dheivathin Sannithaanam தெய்வத்தின் சந்நிதானம்


Dheivathin Sannithaanam தெய்வத்தின் சந்நிதானம் என் உள்ளத்தின் ஆனந்தமே காருண்யமாம் அவர் சப்தம் என் காதுகளுக்கின்பமே 1. தளர்ந்த மனம் புதிதாக்கும் நல்லன்பு தகர்ந்த ஆன்மாவிற்கு சாந்திதரும் அவர் தரும் வாக்குத்தத்தங்கள் உன்னை அனுதினம் வழி நடத்தும் 2. உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமே நோக்கிடு கல்வாரி நாயகனை இயேசுவின் பாதத்தில் வீழ்ந்திடுவாய் ஆறுதல் கண்டடைவாய்

Sunday 19 July 2020

O Paavangal Ethanaiyo ஓ பாவங்கள் எத்தனையோ



O Paavangal Ethanaiyo 1. ஓ பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் கைகளைக் கழுவிடாதோ 2. ஓ பாவங்கள் எத்தனையோ என் கால்கள் புரிந்தனவோ நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் கால்களைக் கழுவிடாதோ 3. ஓ பாவங்கள் எத்தனையோ என் இதயம் இழைத்ததுவோ நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என் இதயத்தை கழுவிடாதோ 4. ஓ பாவங்கள் எத்தனையோ என் சிரசதும் எண்ணியதோ நின் சிரசதில் வழிந்தோடும் செங்குருதி என் சிரசதை கழுவிடாதோ

Saturday 18 July 2020

Engae Oduvai எங்கே ஓடுவாய்



Engae Oduvai எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் இயேசுவின் அன்பை மறந்து எங்கே ஓடுவாய் பாவ மன்னிப்பால் பரலோகமே பாவத்தின் பலன் நரகம் தானே இயேசுவே உன் இரட்சிப்பு அவரால் உன் மன்னிப்பு எண்ணிப்பார் எண்ணிப்பார் உன் வாழ்நாளை எண்ணிப்பார் 1. பாவ இன்பத்தை பால் போல் பருகி தேவ் கோபத்தை தேடி ஓடுறாய் அருமையான ஆத்தும மீட்பு அதையறியாமல் அலைந்தோடுறாய் 2. உந்தன் பணத்தை நம்பி ஓடாதே சிறு துரும்பும் கூட வராதே உன் வாலிபத்தின் பாவங்கள் தானே உன்னுடன் மரித்த பின்பு உயிர்த்திடுமே 3. மரண தூதன் அருகிலிருக்கிறான் நரகத்தை விரிவாய் திறந்திருக்கிறான் கிருபையை நீ கருத்தில் எண்ணி குருசை நோக்கி கொல்கத்தாவாண்டை வா 4. விருதாவாகப் பொருள் சேர்க்கிறாய் வேகமாகவே திரிந்தலைகிறாய் ஆஸ்தி சேர்க்கிறாய் அழிவைக் காண்கிறாய் அடுத்தவனுக்கு அதை விட்டுப் போகிறாய் 5. உன் இருதயம் மேட்டிமை கொண்டு உன் அகந்தையால் அழிந்து போகிறாய் உலக இன்பம் ஒரு நிமிஷமே உன்னத இன்பம் நித்திய காலமே

Wednesday 15 July 2020

Anbin Uruvam Aandavar அன்பின் உருவம் ஆண்டவர்


Anbin Uruvam Aandavar 1. அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் நீ அருகில் வா தொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நீ அருகில் வா ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீயே வா தூரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார் நீ அருகில் வா 2. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய் உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே – ஓடிவா 3. நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பைப் பெற்றாயோ செல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நீராமே – ஓடிவா 4. ஒருமுறை அன்பை ருசித்துமே விழுந்துபோன நீ எழும்பிவா பலமுறை துரோகம் செய்ததால் இயேசுவின் கண்ணீர் துடைக்கவா – ஓடிவா 5. இன்னும் நொந்து போவானேன் இன்றே அருகில் ஓடிவா உள்ளம் குமுறும் உன்னையே தள்ளேன் என்றார் ஓடிவா – ஓடிவா

Monday 13 July 2020

O Manithane Nee Engae ஓ மனிதனே நீ எங்கே


O Manithane Nee Engae ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய் காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் 1. மண்ணில் பிறந்த மானிடனே மண்ணுக்கே நீ திரும்புவாய் மரணம் உன்னை நெருங்கும் போது எங்கே நீ ஓடுவாய் மரணத்தின் பின்னே நடப்பது என்ன என்பதை நீ அறிவாயோ --- ஓ 2. பாவியாய் பிறந்த மானிடனே பாவியாய் நீ மரிக்கின்றாய் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ இன்றே மரணத்தை வென்றிடுவாய் நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில் நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் --- ஓ

Ennandai Vanthidayo என்னண்டை வந்திடாயோ



Ennandai Vanthidayo 1. என்னண்டை வந்திடாயோ பின்பற்றி வந்திடாயோ உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து பின்பற்றி வந்திடாயோ (2) - என் 2. உலகை ஆதாயம் செய்தும் ஜீவனோ நஷ்டப்பட்டால் மரணம் வரும் வேளை மறுமைக்குள் செல்கையில் என்ன லாபம் உனக்கு (2) - என் 3. கல்வாரி காட்சி கண்டும் கல் மனம் உருகலையோ ஐங்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட அழைப்போரை பாராயோ (2) - என்

Sunday 12 July 2020

Balamum Alla Barakiramum Alla பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல



Balamum Alla Barakiramum Alla பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. சுத்திகரியும் சுத்திகரியும் பாவங்களை சுத்திகரியும் குணமாக்கும் குணமாக்கும் வியாதிகளை குணமாக்கும் --- அல்லேலூயா 2. பெலன் தாரும் பெலன் தாரும் பெலவீன பகுதிகளில் ஜெயம் தாரும் ஜெயம் தாரும் தோல்வி வேளைகளில் --- அல்லேலூயா 3. ஜெபம் கேளும் ஜெபம் கேளும் எங்களின் ஜெபம் கேளும் பதில் தாரும் பதில் தாரும் கண்ணீருக்குப் பதில் தாரும் --- அல்லேலூயா 4. மாற்றிவிடும் மாற்றிவிடும் உம்மை போல மாற்றிவிடும் ஆற்றி விடும் ஆற்றி விடும் என் காயங்களை ஆற்றி விடும் --- அல்லேலூயா

Kaalamo Selluthe காலமோ செல்லுதே

Kaalamo Selluthe 1. காலமோ செல்லுதே வாலிபமும் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் 2. துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னலெல்லாம் மாறிப்போம் வியாதி எல்லாம் நீங்கி போம் நாயகன் நம் இயேசுவால் --- மகிமையில் 3. கருணையின் அழைப்பினால் மரணநேரம் வருகையில் சுற்றத்தார் சூழ்ந்திட பற்றுள்ளோர் கதறிட --- மகிமையில் 4. உலகத்தின் மாந்தரே கலங்காதீர் வாருமே இயேசுவை அண்டினால் கிலேசங்கள் மாறிப்போம் --- மகிமையில்

Saturday 4 July 2020

Nenjathile Thooimai Undo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ


Nenjathile Thooimai Undo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகிறார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார் 1. வருந்தி சுமக்கும் பாவம் உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் (2) — நெஞ்சத்திலே 2. குருதி சிந்தும் நெஞ்சம் உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள் அங்கு பாயும் செந்நீர் வெள்ளம் அவர் பாதம் வந்து சேரும் (2) — நெஞ்சத்திலே

Tuesday 30 June 2020

Rock Of Ages



1. Rock of Ages cleft for me
Let me hide myself in Thee Let the water and the blood From Thy wounded side which flowed Be of sin the double cure Save from wrath and make me pure. 2. Not the labour of my hands Can fulfill Thy law’s demands Could my zeal no respite know Could my tears forever flow All for sin could not atone Thou must save and Thou alone. 3. Nothing in my hand I bring Simply to Thy cross I cling naked come to Thee for dress Helpless look to Thee for grace Foul I to the fountain fly Wash me Saviour or I die. 4. While I draw this fleeting breath When my eyes shall close in death When I rise to worlds unknown And behold Thee on Thy throne Rock of Ages cleft for me Let me hide myself in Thee.

Monday 29 June 2020

Ootrapada Vendume ஊற்றப்பட வேண்டுமே



Ootrapada Vendume
ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை பின்மாரியாக இன்று பொழிந்திடுமே எண்ணெய் அபிஷேகமே என் தலையை நனைக்க ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும் நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்ந்திடும் 1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம் போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே 2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம் ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் 3. ஒரு மனதோடே கூடி வந்துள்ளோம் தேவ புத்திரர் என முத்திரை போடும் 4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கின்றோம் சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும்

Friday 26 June 2020

Unnatha Devan Unnai Alaikkiraar உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்



Unnatha Devan Unnai Alaikkiraar
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் (2) சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே 1. பாவத்தில் அழியாதே தேவனை மறவாதே இருதயத்தை தட்டுகிறார் இன்றதை திறந்தளிப்பாய் 2. இன்று உன் ஜீவன் போனால் எங்கு நீ சென்றிடுவாய் இந்த வேளை சிந்தனை செய் இயேசு உன்னை அழைக்கிறாரே 3. நரகத்தின் பாதையிலும் மரணத்தின் வழிகளிலும் உல்லாசமாய் நடப்பது ஏன் உண்மையாய் அழிந்திடுவாய் 4. தம்மிடம் வருபவரை தள்ளிடவே மாட்டார் அன்புக்கரம் விரித்தவராய் ஆண்டவர் அழைக்கிறாரே

Wednesday 24 June 2020

Vaalkai Kurugiyathe வாழ்க்கை குறுகியதே




Vaalkai Kurugiyathe
1. வாழ்க்கை குறுகியதே காய்ந்த சருகைப் போன்றதே மடியும் விதையைப் போன்றதே உணர்வாயே நாட்கள் கடந்து போகுதே முடிவு வேகம் வருகுதே கடைசி காலம் இதுவே இதுவே இப்போதே இப்போதே கர்த்தர் உன்னை அழைக்கும் நேரம் இப்போதே பாவத்தில் நீ நிலைத்தால் இரட்சிப்பை நீ இழப்பாய் பின்பு அழுதும் பயனில்லை திருந்திடு 2. அழகு பூக்கள் அழிந்துபோம் இளமை அழகும் மறைந்துபோம் வாழ தருணம் கிடைக்காதே திருந்திடு கர்த்தர் உன்னை அழைக்கையில் மீண்டும் காலங் கடத்தாதே அழிவை நோக்கி ஓடாதே ஓடாதே 3. பாவி எச்சரிப்பைக் கேள் இயேசுவைத் தெரிந்தெடு பரலோகம் மகிழும் அப்போது பாவ வாழ்க்கை வேண்டாம் வா இயேசு உன்னை மாற்றுவார் வாழ்வு புதியதாகுமே இப்போதே

Varum Deva Vana Senaigaludane வாரும் தேவா வான சேனைகளுடனே



Varum Deva Vana Senaigaludane வாரும் தேவா வான சேனைகளுடனே வந்து வரமருள் அளித்திடுமே 1. பாவம் அகற்றினீரே உந்தன் பாதம் பணிந்திடுவேன் எந்தன் பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா தரிசிக்கத் திருமுகமே 2. ஆதி அன்பிழந்தே மிக வாடித் தவித்திடுதே ஜனம் மாமிசமானவர் யாவரிலும் மாரியைப் பொழிந்திடுமே 3. அற்புத அடையாளங்கள் இப்போ அணைந்தே குறைந்திடுதே வல்ல ஆதி அப்போஸ்தலர் காலங்களின் அதிசயம் நடத்திடுமே 4. கறைகள் நீக்கிடுமே திருச் சபையும் வளர்ந்திடவே எம்மில் விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை விரைந்தெங்கும் எழுப்பிடுமே 5. கிருபை பெருகிடுதே உம் வருகை நெருங்கிடுதே மிக ஆத்ம மணாளனைச் சந்திக்கவே ஆயத்தம் அளித்திடுமே