Saturday, 26 December 2020

En Idhayam Yaarukku Theriyum என் இதயம் யாருக்கு தெரியும்


 En Idhayam Yaarukku Theriyum

என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் (2) 1. நெஞ்சின் நோவுகள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே (2) – என் 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ (2) – என் 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ (2) – என் 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே (2) – என்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.