Sunday, 27 December 2020
Yesuvai Pol Alagullore இயேசுவைப் போல் அழகுள்ளோர்
Yesuvai Pol Alagullore1. இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாருமில்லை பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் வெறும் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் --- பூரண 3. எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய் உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் --- பூரண 4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் --- பூரண 5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால் --- பூரண 6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே --- பூரண
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.