Sunday, 13 December 2020

Engum Pugal Yesu எங்கும் புகழ் இயேசு


 Engum Pugal Yesu

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே உங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் 1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்--- எங்கும் 2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண் திறக்கவே பல்வழி அலையும்பாதை தப்பினோரைப் பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்--- எங்கும் 3. தாழ்மை சற்குணமும் தயைகாருண்யமும் தழைப்பதல்லோ தகுந்த கல்வி பாழுந்துர்க்குணமும்பாவச் செய்கையாவும் பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ --- எங்கும் 4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச்செல்ல தூதர் நீங்களே தூயன் வீரரே கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக் கருணை நிறை வசனம் கற்றிடுவீர் --- எங்கும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.