Thursday, 24 December 2020
Perinba Nathiye பேரின்ப நதியே
Perinba Nathiyeபேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட பின் மாரியாக பொழிந்திடுமே (2) 1. எலியாவின் தேவன் எங்கே என்றானே சலியாமல் ஓடி சால்வை பெற்றானே பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள் பலவந்தமாக்கும் காலம் இதுவே (2) - பேரின்ப 2. மங்கும் திரிகள் நெரிந்த நாணல் தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர் அனலுமில்லாத குளிருமில்லாத அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே (2) - பேரின்ப 3. சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா உலரும் எலும்பும் உயிரை அடையும் உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா (2) - பேரின்ப 4. பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர் பரிசுத்த தேவ அழைப்பை பாரீர் தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன் தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே (2) - பேரின்ப 5. ஊனர் குருடர் தீரா நோயாளர் ஊமை செவிடர் பேயால் பாடுவோர் அற்புத செயலால் வேண்டிடுவோமே ஆண்டவரிடமே வேண்டிடுவோமே (2) - பேரின்ப 6. சத்திய பரனை பக்தியுடனே நித்திய யுகமாய்ப் பாடிடுவேனே ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே ஏழை என் தாகம் தீர்த்திடுவேனே (2) - பேரின்ப
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.