Sunday, 20 December 2020
Karthar En Menmaiyum கர்த்தர் என் மேன்மையும்
Karthar En Menmaiyumகர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன் கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன் - நான் (2) 1. என் முகத்தை தேடும் என்றீர் இன்னமும் நான் அன்பு கூர்ந்து நோக்குவேன் உன் பொன் முகமே சிலுவை நோக்கி பார்த்த கண்கள் சூழ்நிலைகள் மாறினாலும் வெட்கமடைந்து போவதில்லையே - கர்த்தர் 2. தகப்பனும் தாயும் என்னைக் கைவிடும் வேளை வரினும் அரவணைக்கும் உந்தன் கரமே கழுகு தன் குஞ்சுகளைப் பறந்து காப்பது போல காத்த உந்தன் செட்டை தஞ்சமே - கர்த்தர் 3. எந்தனுக்கு விரோதமான எரிகோவின் மதில்களைத் தகர்த்து சாம்பலாக்கிடுவீர் எதிரிகளின் சேனைகள் என்றும் என்னைத் தொடராமல் பின்தொடர்ந்து வந்திடுவீர் - கர்த்தர் 4. காலமோ கடைசியாகி பாவம் பாரில் படர்ந்து பெருகி உலக வேஷம் கடந்து செல்லுதே வருகைத் தாமதிக்கையில் புறாவைப் போல் சிறகிருந்தால் பறந்து வந்து உம்மைக் காணுவேன் – கர்த்தர்
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.