Tuesday 31 August 2021

Puthu Kirubai Alithidume புது கிருபை அளித்திடுமே


 

புது கிருபை அளித்திடுமே

புகலிடமும் தந்திடுமே

புது ஜீவன் புது பெலனும்

எந்தன் இயேசுவே தந்திடுமே

 

1.  பரதேசியாகத் திரிந்தேனையா

  பாசமாய்த் தேடினீரே

 இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்

 இயேசுவே இரட்சகனே             

 

2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்

ஆண்டவர் அன்பினையே

வேண்டாதவைகளை விலக்கிடவே

உந்தன் வழிதனை போதியுமே      

 

3.  உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற

வல்லமை தந்திடுமே

இம்மட்டும் காத்த இம்மானுவேலே

இனியும் நடத்திடுமே              

Monday 30 August 2021

Aatharam Neerthanaiya ஆதாரம் நீர்தானையா


 


ஆதாரம் நீர்தானையா

காலங்கள் மாற கவலைகள் தீர

காரணம் நீர்தானையா


1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்

கண்டேன் நான் இந்நாள் வரை

ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை

குழப்பம் தான்  நிறைகின்றது– ஆதாரம்


2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை

பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை

ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை

அமைதிதான் கலைகின்றது – ஆதாரம்


3. உந்தனின் சாட்சியாய் வாழ

உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை

உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்

சாட்சியாய் வாழ்ந்திடுவேன் – ஆதாரம்


Sunday 29 August 2021

Yesu Unnai Alaikirar இயேசு உன்னை அழைக்கிறார்


 

இயேசு உன்னை அழைக்கிறார்

இன்ப தொனி பின் வாராயோ

இன்னல் தீர்க்க வல்லவரை

இன்று நீ நம்பிடுவாய்

 

1. வருந்தி பாரங்கள் சுமந்த நீ

விரும்பி சிலுவை நோக்கியே பார்

அருமை ஆண்டவர் உனக்காக

சிறுமை அடைந்து உயிர் தந்தாரே

 

2. உன் கையில் நீ செய்த பாவத்திற்காய்

தன் கையில் ஆணிகள் பாய்ந்திடவே

முள் முடி சூடினார் உன் வினைக்காய்

மன்னிப்பு இரட்சண்யம் உனக்களிப்பார்

 

3. மனந்திரும்பி நீ மாறினாலோ

மறுபிறப்பை நீ கண்டடைவாய்

இயேசுவை உன் ஆத்ம இரட்சகராய்

ஏற்றுக்கொள் கிடைக்கும் சமாதானமே

 

4. வல்லமை உண்டவர் இரத்தத்திலே

வியாதியின் வேரும் கூரும் முறியும்

கர்த்தரின் காயங்கள் தழும்புகள்

சுத்தமாய் உன்னையும் குணமாக்கிடும்

 

5. சத்திய பரனே அழைக்கிறார்

நித்திய ஜீவனை ஈந்திடுவார்

இயேசுவாலாகாத தொன்றுமில்லை

இப்போதும் உன் தேவை வேண்டிக் கொள்வாய்

Saturday 28 August 2021

Vaana Pitha Thantha vethathilae வான பிதா தந்த வேதத்திலே


 

1. வான பிதா தந்த வேதத்திலே

  நான் மகிழ்வேன் அன்பு சொல்லுகிறார்

 இவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே 

ஆச்சர்யம் யேசென்னை நேசிக்கிறார்

 

ஆனந்தம் யேசு நேசிக்கிறார்

நேசிக்கிறார் நேசிக்கிறார்

ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்

 நேசிக்கிறார் என்னையும்.

 

2.  நான் மறந்தோடினும் நேசித்தென்னைச்

சென்ற இடம் வந்து தேடுகிறார்

மீண்டும் நினைந்தவர் நேசந்தன்னை

ஆண்டவர் அண்டுவேன் நேசிக்கிறார்

 

3. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்

 மீட்கவந் தாத்துமம் நேசிக்கிறார்

 சாவு மரத்தில் அந் நேசங்கண்டேன்

நிச்சயம் யேசென்னை நேசிக்கிறார்

 

4. நிச்சயத்தால் இன்ப ஓய்வு பெற்றேன்

 நம்பும் என் யேசென்னை வாழ்விக்கிறார்

 யேசென்னை நேசிக்கிறார் என்றேன் நான்

சாத்தான் நில்லா தஞ்சி ஓடக் கண்டேன்

Vanthaalum Yesuvae Vaarumithil வந்தாளும் இயேசுவே வாருமிதில்


 

வந்தாளும் இயேசுவே வாருமிதில்தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்

1.பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு வந்திடும்தேவா

2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும்
கல்வாரியின் அன்பையின்று கர்த்தனே நீர் காட்டியே
நற்குணம் அவர்க்கு நல்கிடும்தேவா

3.சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும் தூசியும்
கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திடதேவா

4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்தரம்
பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமேதேவா

5.சதா காலங்களிலும் இருப்பேனுங்கள் கூடவே
சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர்
ஆதலாலனந்த ஸ்தோத்திரம்தேவா

Anbe Kalvari Anbe அன்பே கல்வாரி அன்பே


 

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர்  
பரிகார பலியானீர்

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

Thursday 26 August 2021

Isravelin Thuthikul இஸ்ரவேலின் துதிக்குள்


 

இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
இறங்கி வந்திடுமே

1. உம் வாசல்களில் துதியோடும்
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒருமித்துமே
உயர்த்தியே போற்றுகிறோம்

2. இஸ்ரவேலின் எக்காளம் மகா
ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்
எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்
இப்போ சத்துருவின் கோட்டைகளை
இடித்து தகர்த்திடுவோம்

3. எதைக் குறித்தும் கவலைப்படாமல்
எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள்
என்றீர் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போ எல்லா புத்திக்கும் மேலான
உம் சமாதானம் ஈந்திடுமே

4. ஆசாரியர் லேவியர் ஒருமித்தும்மை
ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே
ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
ஆலயமாய் எம்மை பூவில் காண
உம் மகிமையால் நிரப்பிடுமே

5. உம் கிருபையின் மகிமைக்குமே
எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
எம்மை மீட்கவே முத்தரித்தீரே
எம் ஆவியானவரால்

Karthar Periyavar கர்த்தர் பெரியவர்


 

கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலே
தமது பரிசுத்த பர்வதத்திலே
மிகத் துதிக்கப்படத் தக்கவர்

1. வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
வடிப்பமான ஸ்தானமே
சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
அது மகா ராஜாவின் நகரம்

2. அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்
அடைக்கலமாக அறியப்பட்டார்
இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து
அதை கண்டு விரைந்தோடினர்

3. தேவனே உமது ஆலயம் நடுவே
உம் கிருபையை சிந்திக்கிறோம்
பூமியின் கடையாந்தர பரியந்தமும்
உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே

4. இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
நித்திய மகிமையில் சேர்த்திடுவார்

Tham kirubai Perithallo


 

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே

1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமேதம் கிருபை

2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமேதம் கிருபை

3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமேதம் கிருபை

4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமேதம் கிருபை

5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமேதம் கிருபை

6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமேதம் கிருபை

7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய்க் கிருபை தாருமேதம் கிருபை

Wednesday 25 August 2021

Nam Devanai Thuthithu Paadi நம் தேவனை துதித்துப் பாடி


 

நம் தேவனைத் துதித்துப் பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம்களி கூர்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம்களி கூர்

3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம்களி கூர்

 

Ummai Thuthipaen உம்மை துதிப்பேன்


 

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் அற்புதமானதே
உம்மைத் துதிப்பேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே

1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
என் நினைவுகளையும் தூரத்தில் அறிவீர்
என் நாவினிலே சொல் பிறவா முன்னமே
எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்

2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகலைப் போல் வெளிச்சமாகுதே
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
இந்த அறிவு ஆச்சரியமானதே

3. என்னை சோதித்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்திய வழி என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட

4. வானில் சென்றாலும் அங்கே இருக்கிறீர்
விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்

Monday 23 August 2021

Yesu Entra Thiru Namathirku இயேசு என்ற திரு நாமத்திற்கு


 

இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்

1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமம் அது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது

2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திருநாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே

3. பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது

4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது

5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றும் அகற்றிடும் நாமமது

Senai Athiban Nam சேனை அதிபன் நம்


 

1. சேனை அதிபன் நம் கர்த்தருக்கே

செலுத்துவோம் கனமும் மகிமையுமே

அற்புதமே தம் அன்பெமக்கு  

அதை அறிந்தே அகமகிழ்வோம்


ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்

ஜெயமாக நடத்திடுவார்

ஜெயக்கீதங்கள் நாம் பாடியே

ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்

ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே


2. தாய் மறந்தாலும் நான் மறவேன்

திக்கற்றோராய் விட்டு விடேன்

என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்

என்றும் வாக்கு மாறிடாரே — ஜெய


3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே

நானே நல்ல மேய்ப்பன் என்றார்

இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்

இன்பப் பாதைக் காட்டிடுவார் — ஜெய


4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய

சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க

சாத்தானின் சேனை நடுங்கிடவே 

துதி சாற்றி ஆர்ப்பரிப்போம் — ஜெய


5. கறை திரை முற்றும் நீங்கிடவே

கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்

வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை

வழுவாமல் காத்துக் கொள்வார் — ஜெய

Sunday 22 August 2021

Thiyangum Ullam kandaar தியங்கும் உள்ளம் கண்டார்


 

தியங்கும் உள்ளம் கண்டார்

தயக்கம் என்ன என்றார்

திகைக்கும் என் மனதில்

திரு வார்த்தை அருளித் தந்தார்

 

1. துதிப்பேன் என் கர்த்தரை

துதி சாற்றி மகிழ்ந்திடுவேன்

என்னைக் கண்டு மனதுருகும்

அன்பர் இயேசு என்அருகில் உண்டே

 

2. கதறும் ஆத்துமாவே

கலங்காதே என்றவரே

கலைமான்களும் கதறி அழும்

நீரோடையை  வாஞ்சிப்பதால்

 

3. அவர் என் கன்மலையே

அசையாத நல் பர்வதமே

அரும் பாவ உலகமதில்

அவர் அன்பதில் நிலைத்திருப்பேன்

பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்


 

1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ்  உள்ளம் வந்தார்
பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்
பரிசுத்தவான்களோடு இணைந்தார்
இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே

அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்
ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்
அல்லேலூயா அல்லேலூயா

2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே
பரிசுத்த ஜுவாலை கவர்ந்து கொண்டதே
உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை அடிவாரமே

3. தாழ்மை உள்ளம் கொண்டுபின்செல்வேன் நானே
கந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கவே
வல்ல தேவன் காட்டும் சுத்த கிருபையே

4. நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக்கிடங்கிற்குச் செல்லேன்
என் முன்னே அநேக சுத்தர்செல்கின்றார்
இந்தப் பாதை எந்தன்ஜீவ பாதையே

Friday 20 August 2021

Sthotharipaen Sthotharipaen ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்


 

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே


1.
உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகின்றேன் யான்

2. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்தினால் தோய்த்ததினாலே

3.
என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான்

4.
ஆகாயத்து பட்சிகளை போஷிக்கும் தேவன்
தினமும் என்னை போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான்  

5.
நாளைத் தினம் ஊண் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான்  

6.
சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனே அதி
சீக்கிரமாய் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான்