Thursday, 26 August 2021

Isravelin Thuthikul இஸ்ரவேலின் துதிக்குள்


 

இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
இறங்கி வந்திடுமே

1. உம் வாசல்களில் துதியோடும்
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒருமித்துமே
உயர்த்தியே போற்றுகிறோம்

2. இஸ்ரவேலின் எக்காளம் மகா
ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்
எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்
இப்போ சத்துருவின் கோட்டைகளை
இடித்து தகர்த்திடுவோம்

3. எதைக் குறித்தும் கவலைப்படாமல்
எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள்
என்றீர் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போ எல்லா புத்திக்கும் மேலான
உம் சமாதானம் ஈந்திடுமே

4. ஆசாரியர் லேவியர் ஒருமித்தும்மை
ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே
ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
ஆலயமாய் எம்மை பூவில் காண
உம் மகிமையால் நிரப்பிடுமே

5. உம் கிருபையின் மகிமைக்குமே
எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
எம்மை மீட்கவே முத்தரித்தீரே
எம் ஆவியானவரால்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.