Thursday 27 February 2020

Aathumave Sthothiri ஆத்துமாவே ஸ்தோத்திரி

Aathumave Sthothiri ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி ஜீவனுள்ள தேவனைத் துதி அல்லேலூயா 1. ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள் கோடா கோடா கோடியாகுமே ஒன்று இரண்டு என்றல்ல நீ செலுத்தும் நன்றிகள் கோடா கோடா கோடியாகட்டும் 2. நாட்டிலுள்ள மக்களே பூமியின் குடிகளே என்னுடன் தேவனைத் துதியுங்கள் கூட்டிலுள்ள பறவைப் போல் சிக்கிக் கொண்ட நம்மையே விடுவித்த தேவனைத் துதியுங்கள் 3. பெத்தலேகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய் நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ 4. நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம் இயேசுவை என்றுமே சேவிப்போம் எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார் வருகை வரை நடத்திச் செல்லுவார்

Wednesday 26 February 2020

Pitha Anbu Selvan பிதா அன்புச் செல்வன்

Pitha Anbu Selvan பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான் பிறை ஒளி முன்னணை புரண்டதே தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன் தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் --- பிதா 1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள் ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள் ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் --- தாழ்மை 2. கனி கடலாக ஆவியினால் தருவான் பகை கலைந்தோட அமுதமொழி அருள்வான் பிறர் கனிந்துயர உடலாவி கொடுப்பான் மனம் கசிந்துருக கோடி துயர் சுமப்பான் --- தாழ்மை 3. கடல் உப்பாக வாழ்ந்துவிடில் இன்பம் பிறர் கண்டு வர ஒளிப்பாதை எழும்பும் விழி தூண்டும் பணி அமைதியுன் சிரிப்பு அதில் துலங்க வரும் தூயோனின் ரட்சிப்பு --- தாழ்மை 4. புவி புல்லரெல்லாம் மாற்றி விடும் புனிதன் வளர் புது மலராய் பூத்த தெய்வ மனிதன் உளம் பூம்பொழிலாய் மாற்ற வந்த கோமான் தேன் பூங்குயிலாய் அறம் பாடும் பூமான் --- தாழ்மை

Kanni Marithaayin Karuvoolane கன்னி மரித்தாயின் கருவூலனே

Kanni Marithaayin Karuvoolane கன்னி மரித்தாயின் கருவூலனே கந்தை உருக்கோலனே மண்ணில் மலர்ந்திட்ட மனுவேலனே மாந்தர்க் கனுகூலனே 1. மார்கழிப் பனியுந்தன் மலர் மஞ்சமோ மயக்கும் இருள் சொந்தமோ மாட்டுத் தொழு உன்னை மகிழ்விக்கும் பந்தலோ மாற்றுத் துணி கந்தலோ மாற்றுக் குறையாத மணித் தங்கமோ மாசு இல் நெஞ்சமோ 2. வாலொடு ஒரு வெள்ளி உதிக்கின்றதே வையம் திகைக் கின்றதே வானத்திரள் கூடி கானங்கள் பாடி வாழ்த்திப் பணி கின்றதே வஞ்சன் ஏரோதின் நெஞ்சத்திலே வன்மம் எழுகின்றதே

Tuesday 25 February 2020

Paduvom Paduvom Intru பாடுவோம் பாடுவோம் இன்று

Paduvom Paduvom Intru 1. பாடுவோம் பாடுவோம் இன்று பாடி மகிழ்வோம் பாலனாம் இயேசு இன்று பிறந்தார் இந்தப் பாருலகில் இன்று அவதரித்தார் என்று பாடியே மகிழ்ந்திடுவோம் ஆ மகிழ்ந்திடுவோம் இன்று பாடிடுவோம் இயேசு பாலகன் இன்று பிறந்தார் இந்த ஆயர்களின் வாழ்த்து உரைத்திடவே இந்தப் பூவுலகில் உதித்தார் 2. பொன் வெள்ளைப் போளம் தூப வர்க்கத்தோடு மூவர் வந்து பணிந்தனரே இயேசு பாதமதில் தம் சிரசை வைத்து தம்மைத் தாழ்த்தி வணங்கினரே --- ஆ 3. இயேசு நமக்காகவே இவ்வுலகில் வந்தார் இந்தப் பூமியை மீட்டிடவே இன்று உள்ளமதில் அவர் பிறந்து விட்டார் என்று பாடியே மகிழ்ந்திடுவோம் --- ஆ

Itho Vana Rajan இதோ வான ராஜன்

Itho Vana Rajan இதோ வான ராஜன் பூவினில் உதித்தார் மனுவை மீட்டிட்டவே 1. வானம் பூமியும் படைத்தவர் வந்தார் மனு அவதாரமாய் ஜோதிப் பிரகாசனார் பாவி நமக்காக பெத்தலைப் பதியில் பிறந்தார் --- இதோ 2. உயர் தேவனுக்கே மகிமை இன்று பூமியில் சமாதானமே இன்ப கீதங்களும் தூதர் பாடிட ஆயர்கள் அறை கூவி சகிக்க --- இதோ

Friday 21 February 2020

Alleluya Alleluya அல்லேலூயா அல்லேலூயா

Alleluya Alleluya அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி 1.நான் உயிரோடு இருக்கும் மட்டும் என் தேவனைத் துதிப்பேனே நான் உள்ளளவும் என் இயேசுவையே கீர்த்தனம் பண்ணிடுவேன் - அல்லேலூயா 2.நான் மனிதனை என்றும் நம்பிடேன் அவன் யோசனை அழிந்திடுமே யாக்கோபின் தேவன் என் துணையே என்றென்றும் பாக்கியவான் - அல்லேலூயா 3.என் ஆத்தும தாகம் பெருக என் கட்டுகள் அறுந்திடுமே கர்த்தரின் கரம் என்னை காத்திடுமே என்றென்றும் வாழ்ந்திடுவேன் - அல்லேலூயா 4.கர்த்தர் சதாகாலமும் சீயோனில் அரசாளுவார் தலைமுறை தலைமுறையாம் அவரே இராஜரீகம் பண்ணிடுவார் - அல்லேலூயா

Jathigale Ellorum Kartharai ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

Jathigale Ellorum Kartharai ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள் தேவன் அளித்த நன்மை பெரியதே கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாததே 1. இன்றைத் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட ஈந்தளித்தீர் உந்தன் கிருபை இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம் --- ஜாதிகளே 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார் சேதமின்றி என்னைக் காத்தாரே ஜீவியப் பாதையில் தேவை தந்து ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார் --- ஜாதிகளே 3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி சாவு பயம் யாவும் போக்கினார் சோதனை வேதனை சூழ்கையில் சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார் --- ஜாதிகளே 4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார் சொந்த பிள்ளையாக மாற்றினார் நாடியே வந்தென்னை ஆதரித்து வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட --- ஜாதிகளே 5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள் வானவரின் வாக்கு மாறாதே நீதியின் சூரியன் தோன்றிடும் நாள் சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை --- ஜாதிகளே

Mavinbam Kondu Nam Devanai மாவின்பம் கொண்டு நம் தேவனை

Mavinbam Kondu Nam Devanai மாவின்பம் கொண்டு நம் தேவனை தேடி ஓடி வா கூவி உன்னை அழைக்கிறோம் புதிய ஆண்டினில்
1. பலவித இக்கட்டுகள் சூழ்ந்து வந்த போதும் பரம பாதை இடறிடாமல் கடந்து வந்தோமே
2. வஞ்சகரின் கொடுமை சொல் வாதித்த வேளையிலும் நெஞ்சம் நீட்டி அன்பு கொண்டு நேர்மை வழி கண்டோம்
3. தன்னிருகை நீட்டி நம்மை அணைத்துக் காத்திட்டார் மன்னாவையும் மா தயவாய் தினமும் ஈந்திட்டார்
4. சென்றாண்டெமின் சேதம் போக்கி சிறப்புக் காணச் செய்த இன்னோராண்டும் இன்பங் கொள்ள எம்மை நடத்தினீர்

Megangal Naduve Oli Piraka மேகங்கள் நடுவே ஒளி பிறக்க

Megangal Naduve Oli Piraka 1. மேகங்கள் நடுவே ஒளி பிறக்க மேய்ப்பர்கள் மேதினில் விழித்தெழும்ப தூதனின் வாயினால் நற்செய்தி கேட்டு இயேசுவைக் கண்டிட விரைந்தேகினார் (2) வானத்தில் வானத்தில் நடுவானத்தில் பரம சேனை திரள் கூடி பரமன் இயேசுவை புகழ்ந்து பாடும் காட்சியைக் கண்டிட நாமும் விரைவோம் (2) 2. மேன்மையை வெறுத்து தாழ்மை கொண்டு கன்னியின் வயிற்றில் இயேசுபாலன் பெத்லேகேம் ஊரில் மாட்டுத் தொழுவில் மகிபன் நமக்காய் பிறந்துள்ளார் (2) --- வானத்தில் 3. ஆத்தும ரட்சிப்பை நமக்களிக்க ஆகாயம் விட்டு பூதலம் வந்தார் தோத்திரக் கீதங்கள் தொனிக்க நாமும் பாடிடுவோம் நாம் பாடிடுவோம் (2)--- வானத்தில் 1. மேகங்கள் நடுவே ஒளி பிறக்க மேய்ப்பர்கள் மேதினில் விழித்தெழும்ப தூதனின் வாயினால் நற்செய்தி கேட்டு இயேசுவைக் கண்டிட விரைந்தேகினார் (2) வானத்தில் வானத்தில் நடுவானத்தில் பரம சேனை திரள் கூடி பரமன் இயேசுவை புகழ்ந்து பாடும் காட்சியைக் கண்டிட நாமும் விரைவோம் (2) 2. மேன்மையை வெறுத்து தாழ்மை கொண்டு கன்னியின் வயிற்றில் இயேசுபாலன் பெத்லேகேம் ஊரில் மாட்டுத் தொழுவில் மகிபன் நமக்காய் பிறந்துள்ளார் (2) --- வானத்தில் 3. ஆத்தும ரட்சிப்பை நமக்களிக்க ஆகாயம் விட்டு பூதலம் வந்தார் தோத்திரக் கீதங்கள் தொனிக்க நாமும் பாடிடுவோம் நாம் பாடிடுவோம் (2)--- வானத்தில்

Thursday 20 February 2020

Inthap Paaril Aavin Veetil இந்தப் பாரில் ஆவின் வீட்டில்

இந்தப் பாரில் ஆவின் வீட்டில் இயேசு பாலன் பிறந்தாரே ஆடிப் பாடிடுவோம் அவர் பாதம் தொழுவோம் ஆண்டவர் இயேசுவை நாம் -- அல்லேலுயா 1. காட்டில் இல்லை மெத்தை இல்லை கந்தையதிலே விந்தையாக மண்ணில் மாந்தர் குல விளக்கே --- ஆடிப் 2. வானதூதர் வந்து நின்று வாழ்த்துப் பாடிட ஆயர்களோ ஓடி வந்து சேதி கேட்டிட --- ஆடிப் 3. வானில் வெள்ளி வழி காட்ட வந்த அறிஞர் வந்தனமும் வாழ்த்துக்களும் கூறி நின்றாரே --- ஆடிப் 4. எத்தனையோ மாளிகைகள் பாரிலிருந்தும் மாட்டுக் கொட்டில் தானே அவர் தெரிந்தெடுத்தார் --- ஆடிப்

Wednesday 12 February 2020

Poorana Aaseer Polinthidume பூரண ஆசீர் பொழிந்திடுமே

Poorana Aaseer Polinthidume 1. பூரண ஆசீர் பொழிந்திடுமே பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே வானம் திறந்துமே வல்ல ஆவியே வந்திறங்கி வரமே தந்தருளுமே அன்பின் அருள் மாரியே வாருமே அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே 2. ஆத்தும தாகம் தீர்க்க வாருமே ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே வல்ல அபிஷேகம் அக்கினி பிரகாசம் சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே 3. தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா 4.மா பரிசுத்த ஸ்தலமதிலே மாசில்லாத தூய சந்நிதியிலே வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக வல்லமை விளங்க துதி சாற்றுவோம் 5. குற்றங் குறைகள் மீறுதல்களும் முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும் இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே 6. மேகத்திலே நான் வந்திறங்குவேன் வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன் என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா இயேசுவே இறைவா வேகம் வாருமே

Monday 10 February 2020

Intha Kaalam Pollathathu இந்த காலம் பொல்லாதது

Intha Kaalam Pollathathu இந்த காலம் பொல்லாதது உன்னைக் கர்த்தர் அழைக்கிறார் நீ வாழும் வாழ்க்கை தான் அது வாடகை வீடு தான் 1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன் என்று வாக்கு அளித்தவர் இன்னும் காத்து வருகிறார் --- இந்த 2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா சாத்தான் களத்தினில் போரிட ஜெய வீரனாய் திகழ வா --- இந்த 3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே சத்திய தேவனின் வார்த்தையோ நித்திய ஜீவனை அருளுமே --- இந்த 4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே மனம் திரும்பி நீ வாழவே மன்னன் இயேசுன்னை அழைக்கிறார் --- இந்த

Sunday 9 February 2020

Narkarunai Naathane நற்கருணை நாதனே

Narkarunai Naathane நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை (2) 1. கோதுமை கனிமணி போல் தீ திலோர் குண நலன்கள் யோக்கியமாய் சேர்ந்திடவே தூயனே அருள் மழை பொழிவாய் (2) 2. திராட்சை கனி ரசமே தெய்வீக பானமதாம் பொருளினில் மாறுதல் போல் புவிக்கொரு புது முகம் நல்கிடுவார் (2) 3. சுவை மிகு தீங்கனியே திகட்டாத தேன் சுவையே தித்திக்கும் கிருபையினாலே எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2) 4. தேடி வந்தவரே தினம் உனதன்பாலே தாய் மனம் போல் அருளி தாரணி செழித்தோங்கிடவே (2)

Saturday 8 February 2020

Yesuvai Thuthiungal Entrum இயேசுவை துதியுங்கள் என்றும்

Yesuvai Thuthiungal Entrum இயேசுவை துதியுங்கள் என்றும் இயேசுவை துதியுங்கள் (2) மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை என்றென்றும் துதியுங்கள் (2) --- இயேசு 1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரே அன்பரை துதியுங்கள் (2) சர்வ வல்லமையும் பொருந்திய நமது இயேசுவை துதியுங்கள் (2) --- இயேசு 2. ஆவியின் அருளால் பாவி நமை சேர்த்த தலைவனை துதியுங்கள் (2) நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற நேயனை துதியுங்கள் (2) --- இயேசு 3. பாவியை ரட்சிக்க பூமியில் தோன்றிய பரமனைத் துதியுங்கள் (2) ஆசை கோபம் களவுகள் மறந்த கர்த்தனைத் துதியுங்கள் (2) --- இயேசு

Niyaaya Theerpu Naalana நியாய தீர்ப்பு நாளான

Niyaaya Theerpu Naalana நியாய தீர்ப்பு நாளான அந்த நாள் மகா பெரிய நாள் இந்த பூவிலுள்ளோர் அனைவரும் நடுங்கும் நாள் --- அந்த நாள் 1. நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே அவரவர் ஜீவனும் ஆக்கினையும் அடைந்திடவே 2. சிறியவரும் பெரியவரும் ஏகமாய் நிற்க அங்கு தங்கள் தங்கள் கிரியைகளின் பங்கைப் பெற்றிட 3. வலது புறத்தில் நிற்போரேல்லாம் ஆசி பெற்றிட அன்று இடது புறத்தில் நிற்போரேல்லாம் சபிக்கவேப் பட 4. இம்மையிலே இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் திட்டம் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே

Thursday 6 February 2020

Immanuvelin Ratha Ootratho இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ

Immanuvelin Ratha Ootratho இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ என் பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ அல்லேலூயா பாரதோ கல்வாரியிலே அதோ ஐந்தாறு கூடி ஓடுது அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2) 1. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே 2. பாவியான கள்ளனும் மா ஊற்றில் மூழ்கினான் பாவ மன்னிப் பானந்தமும் கண்டு பூரித்தான் 3. ஆவியில் நிறைத்து தேவ சாயலாக்கினார் தூய ரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் 4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த ரத்தமே பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே

Yesuvin Naamathai Potriduvom இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்

Yesuvin Naamathai Potriduvom இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம் என்றும் அவர் துதி சாற்றிடுவோம் 1. கரடு முரடான பாதையினில் கால் தடுமாறி தியங்குகையில் கருணையாய் பேசி கரமதை நீட்டி காத்திடும் தயவதை பாடிடுவோம் 2. பாவத்தின் பாரத்தை நீக்கினாரே சாபத்தின் கோரத்தை போக்கினாரே சாகாது வாழ சாவதை வென்ற தேவகுமாரனை பாடிடுவோம் 3. யோர்தானை கடந்திடும் நேரமதில் அணைத்திடுவார் அவர் மார்பதனில் அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும் அன்பரின் நாமத்தை பாடிடுவோம்

Potriduvom Thuthithiduvom போற்றிடுவோம் துதித்திடுவோம்

Potriduvom Thuthithiduvom போற்றிடுவோம் துதித்திடுவோம் சேனையின் தேவனை பாடி மகிழ்வோம் பாடிடுவோம் கொண்டாடிடுவோம் அல்லேலூயா துதி அவர்க்கே - அல்லேலூயா 1. கடந்திட்ட நாட்களில் நம்மை காத்தவர் புதிதொரு நாளையும் நமக்கு தந்தார் யுத்தங்கள் வெள்ளங்கள் பூகம்பம் வந்தாலும் தேவன் நம்மைக் காத்துக் கொண்டார் 2. மேய்ப்பராய் நம்மையும் நடத்தி வந்தார் வாழ்வையும் நன்மையால் நிரப்பிடுவார் நமக்காக சிலுவையில் இரத்தமும் சிந்தியே தேவன் நம்மைக் மீட்டுக் கொண்டார் 3. நம்மையும் அவரிடம் ஒப்புக் கொடுப்போம் உலகத்தின் ஆசைகள் விட்டு விடுவோம் அவரோடு பரலோக வாழ்வினில் நாமும் என்றென்றும் வாழ்ந்திடுவோம்

Wednesday 5 February 2020

Vaanathi Vaaname Potru வானாதி வானமே போற்று

Vaanathi Vaaname Potru வானாதி வானமே போற்று உன்னதங்களில் அவரைப் போற்று வானத்தின் சேனையேப் போற்று சூரிய சந்திரனே போற்று வானத்தின் விண்மீனேப் போற்று மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3) 1. ஆழ்கடலின் மச்சமே போற்று ஆழத்தின் ஆழமே போற்று அக்கினியே கல்மழையே போற்று பெரும் காற்றே மழையே போற்று கனிதரும் மரமே போற்று உறைந்த மழையே பனியே போற்று போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3) 2. மிருகங்களின் கூட்டமே போற்று பிராணிகளின் கூட்டமே போற்று பறவைகளின் கூட்டமே போற்று பரிசுத்த ஜனமே போற்று பூமியின் குடியே போற்று இளம் வாலிபனே கன்னிகையே போற்று போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (3)

Saturday 1 February 2020

Ummai Paadaamal Yaarai Naan உம்மைப் பாடாமல் யாரை நான்

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன் உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன் துதியும் உமக்கே அல்லேலூயா கனமும் உமக்கே அல்லேலூயா மகிமை உமக்கே அல்லேலூயா புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா 1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே உன்னத அனுபவம் தந்தீரே (2) --- உம்மைப் 2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர் துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்(2) --- உம்மைப் 3. ஒன்றுக்கும் உதவாத என்னையும் உருவாக்கி உயர்த்தின தெய்வமே (2) --- உம்மைப் 4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் (2) --- உம்மைப்

En Maeipparaai Yesu என் மேய்ப்பராய் இயேசு

En Maeipparaai Yesu என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம் ஆகா என்றென்றும் இன்பமல்லவா 2. என்னோடவர் நடந்திடும் போதினிலே எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி ஆகா எங்கெங்கும் ஒளியல்லவா 3. என்னையவர் அன்பால் நிரப்பியதால் எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால் என் உள்ளமே ஆகா என் தேவனை ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே

Aayiram Naavugal Pothaa ஆயிரம் நாவுகள் போதா

Aayiram Naavugal Pothaa ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனை பாட கணக்கில்லா நன்மைகள் செய்தீர் கர்த்தா உம்மை போற்றிப் பாட 1.காலமெல்லாம் உந்தன் அன்பால் கரம் பிடித்தென்னை நடத்தி காத்த உம் கிருபையை நினைத்தே கர்த்தா உம்மைப் போற்றிப் பாட --- ஆயிரம் 2. அலைமோதி ஆடும் படகாய் அலைந்த என்னை நீர் கண்டீர் ஆணிகள் பாய்ந்த உம் கைகள் ஆண்டு நடத்துமே தேவா --- ஆயிரம் 3. வானமும் பூமி ஆழ்கடலும் வல்லவா நீரே என சொல்ல வல்ல நல் தேவா உம் பாதம் வந்தேன் இயேசையா நான் ஏழை --- ஆயிரம் 4. உன்னதர் உம் வாக்கை நம்பி உம்மோடு என்றும் நான் வாழ ஊற்றும் உம் உன்னத பெலத்தை உம் சித்தம் செய்திடுவேன் நான் --- ஆயிரம்

Vaanamum Boomiyum வானமும் பூமியும்

Vaanamum Boomiyum வானமும் பூமியும் மலைப் பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர் 1. சந்திர சூரியன் சகலமும் வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால் பொங்குதே (2) உந்தனின் கிருபையை எண்ணவும் முடியாதே தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும் 2. பச்சை பசுமைகளும் பரமனை போற்றுதே பறவை இனங்களும் பாடித் துதிக்குதே (2) பக்தரின் உள்ளம் பரவசம் அடையுதே பரிசுத்த ஆண்டவர் நல்லவர் வல்லவர் – வானமும் 3. உடல் நலம் பெற்றதால் உள்ளமும் பொங்குதே கடல் போல காருண்யம் கண்டதால் துள்ளுதே (2) கடலலை இயேசுவின் பாதம் தழுவுதே திடமான ஆண்டவர் நல்லவர் வல்லவர் – வானமும்