Vaanamum Boomiyum வானமும் பூமியும்
Vaanamum Boomiyum
வானமும் பூமியும் மலைப் பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர் வல்லவர்
1. சந்திர சூரியன் சகலமும் வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால் பொங்குதே (2)
உந்தனின் கிருபையை எண்ணவும் முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்
2. பச்சை பசுமைகளும் பரமனை போற்றுதே
பறவை இனங்களும் பாடித் துதிக்குதே (2)
பக்தரின் உள்ளம் பரவசம் அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர் வல்லவர் – வானமும்
3. உடல் நலம் பெற்றதால் உள்ளமும் பொங்குதே
கடல் போல காருண்யம் கண்டதால் துள்ளுதே (2)
கடலலை இயேசுவின் பாதம் தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர் வல்லவர் – வானமும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.