Varum Deva Vana Senaigaludane
வாரும் தேவா வான சேனைகளுடனே
வந்து வரமருள் அளித்திடுமே
1. பாவம் அகற்றினீரே உந்தன்
பாதம் பணிந்திடுவேன் எந்தன்
பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா
தரிசிக்கத் திருமுகமே
2. ஆதி அன்பிழந்தே மிக
வாடித் தவித்திடுதே ஜனம்
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே
3. அற்புத அடையாளங்கள் இப்போ
அணைந்தே குறைந்திடுதே வல்ல
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே
4. கறைகள் நீக்கிடுமே திருச்
சபையும் வளர்ந்திடவே எம்மில்
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே
5. கிருபை பெருகிடுதே உம்
வருகை நெருங்கிடுதே மிக
ஆத்ம மணாளனைச் சந்திக்கவே
ஆயத்தம் அளித்திடுமே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.