Monday, 15 June 2020

Thoothar Thoni Ketkum தூதர் தொனி கேட்கும்


Thoothar Thoni Ketkum
1. தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப நாள்
தூயர் சேர்ந்து வானில் தோன்றிடும் அந்நாள் நேசர் இயேசு வானில் வந்திடும் அந்நாள் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம் செல்லுவோம் செல்லுவோம் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம் போற்றுவோம் புகழ்வோம் அன்பர் இயேசு நாமம் நாமும் போற்றுவோம் 2. பாவம் சாபம் யாவும் நீங்கிப் போகும் நாள் பாடும் சாவும் இல்லா நாட்டில் சேரும் நாள் மீட்பர் வாக்கை நம்பி வாழ்ந்தோர் கூடும் நாள் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம் 3. நீதன் இயேசு நியாயம் தீர்த்திடும் அந்நாள் பாரில் நேசர் இயேசு வந்திடும் அந்நாள் மீட்கப்பட்டோர் கூடி பாடிடும் அந்நாள் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம் 4. எந்தன் இயேசு என்னைக் காத்திடும் அந்நாள் சுதன் சுத்தரைப் பிரித்திடும் அந்நாள் நேசர் வலப்பக்கம் போய்ச் சேரும் அந்நாள் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம் 5. அன்பர் மீட்பை பெற்றோர் கூடிப் பாடும் நாள் அண்ணல் இயேசுவைக் கண்டு களிக்கும் நாள் அல்லேலூயா பாட்டில் ஓசை கேட்கும் நாள் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.