Sathai Nishkalamai 1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச் சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவேன் என் பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 2. எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைமா றுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய் சும்மா ரட்சணைசெய் சொல்சுதந்தரம் யாதுமிலேன் அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத் தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண் மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே ஆண்டா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 4. திரைசேர் வெம்பவமாம் கடல் மூழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்க வென்றே புனையாயினை கண்ணிலியான் பரசேன் பற்றுகிலேன் என்னைப் பற்றிய பற்றுவிடாய் அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 5. தாயே தந்தைதமர் குரு சம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான் கதிவேறிலை நிண்ணயங்காண் ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை ஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 6. துப்பார் சின்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும் தப்ப தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள, இப்பா ருய்யவென்றே மனுக்கோலமே டுத்த எங்கள் அப்பா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 7. மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள் நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென ஐயா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
Wednesday, 10 June 2020
Sathai Nishkalamai சத்தாய் நிஷ்களமாய்

Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.