Tuesday, 21 July 2020

Thoothargal Pan Isaikka தூதர்கள் பண் இசைக்க

Thoothargal Pan Isaikka தூதர்கள் பண் இசைக்க ஆயர்கள் வாழ்த்துப்பாட வானில் வெள்ளி ஜொலித்திட ஞானியர் தேடி மகிழ்ந்திட துங்கவன் இயேசு பாரில் ஜெனித்தாரே. 1.தீர்க்கன் வேதவாக்கு நிறைவேற திருப்பாலன் மண்ணில் மனுவானார் மார்கழி பனியில் மாடிடை குடிலில் மரியின் மடியில் மனுவாக மானிடர் பாவம் போக்கிடவே மனுவாய் மலர்ந்தாரே. 2.இளங்காலை தென்றல் வீசிடவே இம்மானுவேலனாய் பிறந்தாரே பாரின் பாவங்கள் போக்கிடவே சாபங்கள் யாவும் நீக்கிடவே பெத்தலை தன்னில் புல்லணை மீதில் புனிதர் பிறந்தாரே. 3.என்னையும் உன்னையும் இரட்சிக்கவே தன்னையே நமக்காய் தந்திட்டாரே சீரேசு பாலன் ஜெயமனுவேலன் சீயோனின் ராஜா சாரோனின் ரோஜா சமாதான தேவன் சாந்த சொரூபி நித்தியர் பிறந்தாரே.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.