Aasirvathiyum Karthare ஆசீர்வதியும் கர்த்தரே
Aasirvathiyum Karthare
ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
1. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே – வீசீரோ
2. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே – வீசீரோ
3. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
உற்றவன் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ
4. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் – வீசீரோ
5. ஞான விவாகம் எப்போதும் ஞாபகமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாக தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.