Wednesday, 11 November 2020
Ooivunaalathanai yaasarithiduveer ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர்
Ooivunaalathanai yaasarithiduveer1. ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர் உலகிலுள்ளோரே நீர் ஓது மெய்த்தேவன்றன் ஆதி விதியிதை உள்ளத்திற் கொள்வீரே 2. ஆறுதினங்களும் லௌகீகவேலையை ஆதரவாய்ப் புரிவீர் ஆன வேழாந்தினம் வைதீகலலுவலை அவசியம் பார்த்திடுவீர் 3. ஆசோதை யாவர்க்கும் அவசியம் வேண்டுமென்றாதியி லெம்பரனார் அடுத்த வேழா நாளைப் பரிசுத்தமாக்கினார் அப்பரிசறியீரோ 4. அருமையாமந்நாளை அவமாக்கித் திருடீர் அதைத் திருநாளாக்கி ஆரியர் போதகங் கேட்டிடவாலயம் அதற்கு நடந்திடுவீர் 5. மக்களுந் தாயரும் வீட்டுடைத் தலைவரும் மற்றுள மித்திரரும் வாருங்களாலாயம் சேருங்கள் தேவனை வாழ்த்தி வணங்குவீரே
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.