Wednesday, 24 February 2021
Para Kurusil Paraloga Rajan பாரக் குருசில் பரலோகராஜன்
Para Kurusil Paraloga Rajan1. பாரக் குருசில் பரலோகராஜன் பாதகனைப் போல் தொங்குகிறாரே பார் அவரின் திரு இரத்தம் பாவங்கள் போக்கிட பாய்ந்திடுதே வந்திடுவாய் இயேசுவண்டை வருந்தியே அழைக்கிறாரே வாஞ்சைகள் தீர்ப்பவரே வாதைகள் நீக்குவாரே 2. இதயத்தின் பாரம் அறிந்து மெய்யான இளைப்பாறுதலை அளித்திடுவாரே இன்னுமென்ன தாமதமோ இன்றே இரட்சிப்படைய வருவாய் 3. சிலுவையின் மீதில் சுமந்தனரே உன் சாபரோகங்கள் தம் சரீரத்தில் சர்வ வல்ல வாக்கை நம்பி சார்ந்து சுகம் பெறவே வருவாய் 4. நித்திய வாழ்வு பெற்றிட நீயும் நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய் நீசனென்று தள்ளாதுன்னை நீதியின் பாதையில் சேர்த்திடுவார் 5. இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலம் இன்பம் அவரின் அதரத்தின் மொழிகள் இல்லையே இந்நேசரைப் போல் இகமதில் வேறோர் அன்பருனக்கே
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.