Saturday, 27 February 2021
Kartharai Naan Ekkaalamum கர்த்தரை நான் எக்காலமும்
Kartharai Naan Ekkaalamumகர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் 1.கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமாவும் களித்து மேன்மை பாராட்டிடுதே ஒருமித்தே நாம் உயர்த்திடுவோமே கருத்தாய் அவர் நாமமே 2.தூய பரன் முகம் நோக்கிடுவார் சூரிய சோபையாய் மாறிடுவார் ருசிக்க இன்பமே இயேசுவின் அன்பே சுகிக்க நல்லவரே 3.ஜீவனை யீந்தார் தம் சாவினாலே வேதனை நீக்கினார் நோவினாலே அற்புதமாய் எந்தன் ஜீவியமதையே தற்பரன் மாற்றுகிறார் 4. தேற்றி அப்போஸ்தல தூதுகளால் மாற்றிடுவார் அவர் ரூபமதாய் ஊற்றிடுவார் புது ஜீவன் எந்நாளும் ஏற்றுவார் ஜெயக்கொடியே 5.அக்கினி ஊடே நடந்திடினும் விக்கினமின்றியே நான் துலங்க ஆக்குவார்பொன்னிலும் என்விசுவாசம் மிக்கதோர் மகிமையாய் 6.சீயோனே உன் பெலன் தரித்திடுவாய் வீற்றிடுவாய் எழுந் தெருசலேமே உன் துயர் நீக்கிடும் இன்ப மணாளன் வந்திடும் வேளையிதே
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.