Friday, 19 February 2021
Karthar Un Veetai Kattaragil கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில்
Karthar Un Veetai Kattaragil1. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டும் உன் பாடு விருதா கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில் உன் கண்விழிப்பும் விருதா ஆதலால் உள்ளமே சதா அவர் சமூகம் நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்கு பயந்து அவர் வழி நடந்தால் நீ பாக்கியம் கண்டடைவாய் 2. உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் 3. இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நீ பயப்படவே மாட்டாய் 4. சிங்கத்தின் மேலும் நடந்து வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் 5. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் 6. கர்த்தருக்குப் பயப்பட்டவன் இவ்வித ஆசீர்வாதம் பெறுவான் கர்த்தர் சீயோனில் இருந்து உன்னை கடைசிமட்டும் ஆசீர்வதிப்பார்
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.