Thursday, 11 February 2021
Pareer Arunothayam Pol பாரீர் அருணோதயம் போல்
Pareer Arunothayam Pol1. பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமுமாம் பதினாயிரங்களில் சிறந்தோர் (2) 2. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே 3. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன் என் மேல் பறந்த கொடி நேசமே – இயேசுவே 4. என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே 5. என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.