Monday, 22 February 2021
Nangal Pava Parathal நாங்கள் பாவப் பாரத்தால்
Nangal Pava Parathal1. நாங்கள் பாவப் பாரத்தால் கஸ்தியுற்றுச் சோருங்கால் தாழ்மையாக உம்மையே நோக்கி கண்ணீருடனே ஊக்கத்தோடு வாஞ்சையாய் கெஞ்சும்போது தயவாய் சிந்தை வைத்து இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 2. மோட்சத்தை நீர் விட்டதும் மாந்தனாய்ப் பிறந்ததும் ஏழையாய் வளர்ந்ததும் உற்ற பசி தாகமும் சாத்தான் வன்மை வென்றதும் லோகம் மீட்ட நேசமும் சிந்தை வைத்து இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 3. லாசருவின் கல்லறை அண்டை பட்ட துக்கத்தை சீயோன் அழிவுக்காய் நீர் விட்ட சஞ்சலக் கண்ணீர் யூதாஸ் துரோகி எனவும் துக்கத்தோடுரைத்ததும் சிந்தை வைத்து இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 4. காவில் பட்ட கஸ்தியும் ரத்த சோரி வேர்வையும் முள்ளின் கிரீடம் நிந்தனை ஆணி ஈட்டி வேதனை மெய்யில் ஐந்து காயமும் சாவின் நோவும் வாதையும் சிந்தை வைத்து இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 5. பிரேத சேமம் கல்லறை காத்த காவல் முத்திரை சாவை வென்ற சத்துவம் பரமேறும் அற்புதம் நம்பினோர்க்கு ரட்சிப்பை ஈயும் அன்பின் வல்லமை சிந்தை வைத்து இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே.
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.