Monday, 1 February 2021
Kartharilum Tham Vallamaiyilum கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
Kartharilum Tham Vallamaiyilum1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும் கிருபையால் யாவரும் பலப்படுவோம் தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று திராணியுடன் போர் புரிவோம் சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம் சாத்தானின் சேனையை முறித்திடுவோம் – அவர் சத்துவ வல்லமையால் 2. மாமிசம் இரத்தத்துடனுமல்ல துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின் லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும் போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத 3. சத்தியமாம் கச்சையை கட்டியே நீதியின் மார்க்கவசம் தரித்தே சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் – சர்வாயுத 4. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை வல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம் விசுவாசம் என்னும் கேடகம் மேலே வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத 5. இரட்சண்யமாம் தலைச்சீராவும் எச்சனமும் அணிந்துகொள்வோம் தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம் தேவை அதைப்பிடித்துக்கொள்வோம் – சர்வாயுத 5. எந்தச் சமயத்திலும் சகல வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் பரிசுத்தர்கட்காக ஆவியினால் மனஉறுதியுடன் ஜெபிப்போம் – சர்வாயுத
Location:
Nagercoil, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.