Yutha Raja Singam யூத ராஜ சிங்கம்
Yutha Raja Singam
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்
1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே – யூத
2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத
3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத
4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத
5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத
6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத
7. கிறிஸ்தோரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம் – யூத
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.