Oppu Nigar illatha Kalvariye ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே
Oppu Nigar illatha Kalvariye
1. ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே
ஒப்புரவை தந்திடும் கல்வாரியே
ஒற்றுமையாய் பூவுலகம்
ஒரு மிக்க பகை தீர்க்க
ஓங்கியே நிற்கின்ற கல்வாரியே
கல்வாரியே கல்வாரியே
ஒப்பு நிகர் இல்லாத கல்வாரியே
2. இறையன்பை பகர்ந்தூட்டும் கல்வாரியே
இறைவனின் தியாகம் பார் கல்வாரியே
இல்லார்க்கும் பொல்லார்க்கும்
இயலாத பாவிக்கும்
இறையருள் தந்திடும் கல்வாரியே
3. எல்லாரையும் ஏற்கும் கல்வாரியே
பொல்லாரை மீட்டிடும் கல்வாரியே
என் சாபம் நீக்கிட
என் பாவம் போக்கிட
நிலை வாழ்வை தந்திடும் கல்வாரியே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.