Monday, 30 December 2019

Deva Sabaiyile Devan Eluntharulinar தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

Deva Sabaiyile Devan Eluntharulinar தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் 1.பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம் வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் --- தேவ 2.ஆபத்து நாளில் அரணாம் கோட்டை நித்திய கன்மலையே யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே --- தேவ 3.இராப்பகலாய் தன் கண்மணிபோல் தூங்காது காப்பவரே தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் --- தேவ 4.உலகின் முடிவு வரைக்கும் நான் உன்னோடிருப்பேன் என்றாரே அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் --- தேவ 5.சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய ஏகமாய் துதித்திடுவோம் சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே --- தேவ 6.ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம் உன்னத தேவனையே ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம் --- தேவ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.