Panivilum Ravinil பனிவிழும் ராவினில்
Panivilum Ravinil
பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில்
விண்ணவர் வாழ்த்திட
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே
ராஜன் பிறந்தார் (2)
நேசர் பிறந்தாரே (2)
1.மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே
முன்வழி காட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே
மகிழ்ந்தார் புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை --- பனி
2.மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதித்தவரே
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை --- பனி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.