Chinnanjiru Suthane சின்னஞ்சிறு சுதனே
Chinnanjiru Suthane
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னதத் திருவே
1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
வீடுண்டோ உந்தனுக்கு
தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
தாரகம் நீரானீரோ
கோரவன் பகைகள் பாரச்சுமைகள்
தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு
2. அன்பின் தாய் தந்தை எல்லாம் எனக்கு
உன்னதர் நீரல்லவோ
துன்பம் துடைக்க பண்பினைக் காக்க
என்னருள் நீரல்லவோ
பாசமாய் வந்தே காசினை மீட்ட
நேசமுள்ள ஏசுவே
நீச சிலுவை தொங்கப் பிறந்த
தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.