Wednesday, 4 December 2019

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார் இந்த லோகத்தை மீட்டிடவே இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார் இந்த நற்செய்தி சாற்றிடுவோம் 1.மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள் மந்தையைக் காத்திருக்க தூதர்கள் வானத்திலே தோன்றி தேவனைத் துதித்தனரே--- இயேசு 2.ஆலோசனை கர்த்தரே இவர் அற்புதமானவரே விண் சமாதான பிரபு சர்வ வல்லவர் பிறந்தனரே --- இயேசு 3.மாட்டுத் தொழுவத்திலே பரன் முன்னணையில் பிறந்தார் தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர் ஏழ்மையின் பாதையிலே --- இயேசு 4.பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப் போளமும் காணிக்கையே சாட்சியாய் கொண்டு சென்றே – வான சாஸ்திரிகள் பணிந்தனரே --- இயேசு 5.அன்னாளும் ஆலயத்தில் அன்று ஆண்டவரை அறிந்தே தீர்க்கதரிசனமே கூறி தூயனைப் புகழ்ந்தனரே --- இயேசு 6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர் வாக்கு மாறாதவரே கண்ணிமை நேரத்திலே நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் --- இயேசு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.