மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
வானெக்காளத் தொனி முழங்க.
அனுபல்லவி
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்.
சரணங்கள்
1. தூதர் மின் னாற்றிசை துலங்க,
ஜோதி வான் பறை இடி முழங்க,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
பரிசுத் தோர் திரள் மனதிலங்க.
2. வானம் புவியும் வையகமும்
மட மட வென்று நிலை பெயர,
ஆன பொருளெல்லாம் அகன் றோட,
அவரவர் தம் தம் வரிசையிலே.
3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.