Kuyavane Kuyavane Padaippin
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே – குயவனே
2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம் கிருபையால்
உகந்த தாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே
3. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே – குயவனே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.