என் ஆத்தும நேசர் இயேசுவை
நான் அண்டிக்கொள்வேனே (4)
1. நிலையில்லா என்னை கண்டிட் டார்
நித்திய வழிக்குள் நடத்திட்டார்
விலையில்லா இரத்தம் சிந்தினார்
விந்தையாய் என்னைச் சந்தித்தார்
பரகதி வாழ்வைத் தந்தவர் பரமன் இயேசு கர்த்தரே
நித்திய வழிக்குள் நடத்தியவர் நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா --- என்
2. பாவத்தை கழுவி பரிகரித்தார்
சாபத்தை நீக்கி சங்கரித்தார்
லாபம் இன்றேல் ஜீவனே
தாபம் எனக்கினி அவர்தானே --- பரகதி
3. என்னையே மீட்க என் இயேசு
தன்னையே தியாகம் செய்தாரே
அன்னையாய் அப்பனாய் ஆனவர்
உன்னையும் அன்பாய் அழைக்கின்றார் --- பரகதி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.