என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே --- என்னை
2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை --- என்னை
3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே --- என்னை
4. என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே. --- என்னை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.