இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்
1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார் --- கொண்டாடுவோம்
2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே (ளே) --- கொண்டாடுவோம்
3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார் --- கொண்டாடுவோம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.