1.மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள்
கண்களை கவர்ந்திடுதே
வாழ்க்கையின் நடுவே இயேசுவின் அன்பு
அருவியாய் பாய்ந்திடுதே
குரங்குகள் பறவைகள் அருவியின் சத்தம்
செவிகளில் ஒலித்திடுதே
கூக்குரல் நடுவே அன்பரின் குரலும்
உள்ளத்தில் தொனித்திடுதே
நான் கண்ட இன்ப வாழ்வு
யேசுவால் அடைந்த வாழ்வு
கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த
நீடிய சுக வாழ்வு
ஆ ஹா ஹா ஹா ஹா ஹா
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
லா லா லா லா லா லா
ம் ம் ம் ம் ம்
2. அடுக்கடுக்கான மலைகளின் மீது
மேகங்கள் தவழ்ந்திடுதே
மிடுக்கான பாவங்கள் உணர்ந்திட என்னை
தூயவன் தொடுகின்றாரே
கடின பாறைகளில் தோன்றிய மரங்கள்
ஓங்கி வளர்ந்திடுதே
கடின என் உள்ளத்தில் எழுந்திடும் தீர்மானம்
யேசுவால் உயர்ந்திடுதே --- நான் கண்ட
3. கன்மலை கசிந்து சிந்திடும் தண்ணீர்
அருவியாய் பெருகிடுதே
கன்மலை இயேசு சிந்திய ரத்தம்
என் பாவம் கழுவிடுதே
சிகரங்கள் பின்னே மறைந்திடும் சூரியன்
தெளிவாக தெரிகிறதே
நீதியின் சூரியன் இயேசு நடு வானில்
விரைவினில் தோன்றிடுவார் --- நான் கண்ட
4. வானத்தில் மிதந்திடும் விண்ணொளி தீபங்கள்
இரவிற்கு அழகு தரும்
வானவர் இயேசுவின் திருமறை வசனங்கள்
உள்ளத்தில் ஒளியை தரும்
கடலின் அலைகள் சீறி எழுந்து
தாமாக அடங்கி விடும்
கடவுளின் பிள்ளையின் வாழ்வினில் புயல்கள்
எளிதினில் ஒடுங்கி விடும் -- நான் கண்ட
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.