உன்னை அழைக்கும் இயேசுவின்
சத்தத்தை நீ கேளாயோ
உன்னை தேடி வரும் இயேசுவை
உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளாயோ -(2)
1.உன் பாவ பாரமெல்லாம்
தன் தோளில் சுமந்தாரே
அவர் பட்ட காயம் நீ செய்த பாவம்
ஆனாலும் அழைக்கின்றார் வா -(2) --- உன்னை
2.ஐங்காயம் அடைந்தாரே
சிலுவையில் மரித்தாரே
அவர் பட்ட பாடு உனக்காக தானே
உள்ளம் கலங்காதே வா -(2) --- உன்னை
3.உன்னைப் பேர் சொல்லி அழைத்தாரே
இரத்தத்தால் மீட்டுக் கொண்டாரே
கரங்களை நீட்டி அன்போடு உன்னை
அழைக்கிறார் இப்போதே வா (2) --- உன்னை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.