இன்ப துன்ப நேரத்திலும் உன்
அன்புள்ள இயேசுவைப் பார்
1.இன்பத்தினால் அகமகிழ்ந்து
கிலேசத்தினால் துக்கித்து
சிற்றின்பப் பேருலகில்
சிக்கிக்கொண்டு இருக்கும் போதும் - இன்ப
2. சோதனையால் பிடிபட்டு
இடுக்கண்ணில் இருக்கும் போதும்
சாத்தான் உன்னை மேற்கொள்ளும் போதும்
அக்கினி யாஸ்திரம் எரியும்போதும் - இன்ப
3.தோழரால் பகைக்கப்பட்டு
மனகிலேசம் அடையும் போதும்
உலகம் உன்னை இகழ்ச்சி செய்து
தங்கள் இடத்தை விட்டோடும் போதும் - இன்ப
4.அவர் தாமே சோதிக்கப்பட்டு
பாடு நமக்காய் பட்டதினால்
அவர் சோதிக்கப்படும்
நமக்கு உதவி செய்ய வல்லவராம் - இன்ப
5.வறுமையினால் யாசித்து
பாடு மிகப்படும் போது
சாத்தான் உன்னைப் பகடிப் பண்ணி
உன் விசுவாசத்தைக் குறைக்கும் போதும் – இன்ப
6.கடுநோயால் பெலன் குன்றி
பெவீனத்தால் தள்ளாடி
ஜீவன் உனக்குக் கசப்பாகி
சாவை நீ விரும்பும் போதும் - இன்ப
7.பகைஞரால் கல்லெறியுண்டு
மரண நேரம் கிட்டும்போது
பக்தன் ஸ்தேவானைப் போல
தைரியமாய் உன் இயேசுவைப் பார் - இன்ப
8.நான் என் இயேசுவின் தரிசனத்தை
நிமிஷந் தோறும் காண்கிறதால்
நான் தான் பயப்படாதிருங்கள்
என்றவர் என்னை தேற்றுகிறார் – இன்ப
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.