நாம் நாடுவது ஒரு புது உலகம்
அதை ஆளுவது நம் இயேசு ராஜன்
1. வானில் எக்காளமதின் தொனி முழங்கிடவே
என்னை அழைத்துச் செல்ல அவர் வருவாரே
சிறையுற்றோர் மீட்படைவார்
சிறியோரும் பெரியோரும் பணிந்திடுவார் --- நாம் நாடுவது
2. விதை விதைப்பதில்லை வயல் அறுப்பதில்லை
வீடு கட்டுவோரில்லை அந்த நாட்டினிலே
வாகனங்கள் நீதிமன்றம் கடைத் தெரு யாவுமே
அங்கு இல்லையே --- நாம் நாடுவது
3. மெய் தேவன் அவரே ஒளி வீசிடுவார்
பரிசுத்தர் எனவே தூதர் வாழ்த்திடுவார்
இராஜாதி ராஜாவுடன் என்றென்றும்
வாழ்ந்திடலாம் அல்லேலூயா --- நாம் நாடுவது
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.