எந்தன் ஆத்ம நேசர் இயேசுவை
பாவ பாரத்தோடு நிற்கின்றோம்
இன்பமானாலும் துன்பமானாலும்
உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே
1. என் அந்தரங்க ஜீவியம்
கறை படிந்த சாவின் ஓவியம்
என் சாவின் பின் முதல்
உம்மைக் காணா நீசன் ஆவேனோ
என் ஆவியும் உம்மை சேராமல்
ஏங்கி அலைந்து திரியுமோ தேவா --- எந்தன்
2. உம் ராஜரீக நாளிலே
பரிசுத்தவான்கள் நடுவில்
உம்மைக்காணும் நான் தூர நிற்பேனோ
என்னை ஏற்றுக்கொள்ளும் என் தேவா
யாதும் அற்றோனாய் எந்தன் பாவத்தை
நினைத்து அழுது நிற்பேனோ தேவா --- எந்தன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.