மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிழ்ந்து பாடிடுவேன் (2)
1.கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே
கர்த்தர் என் பெலன் கீதமுமானார்
கரம்பிடித்து என் இரட்சிப்புமானார் - மகிமை
2.அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே - மகிமை
3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில் - மகிமை
4.கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத்தக்கவரை
துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன் - மகிமை
5.தம்புரு நடனத்தோடே பாடுவேன்
தீர்க்கத்தரிசி மீரியாம் போல
பெலத்தினால் வழி நடத்தினவரை
பரிகாரி என்று நான் பாடுவேன் - மகிமை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.