Tuesday, 15 October 2019

Erukintaar Thalladi Thavalnthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

Erukintaar Thalladi Thavalnthu
ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே என்
இயேசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கொதா
மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்

மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை
இரத்தம் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார்

இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே

சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்தக் குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்

பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியை போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்

செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்தத் தாயின் அன்பதுவே
எருசலமே ! எருசலமே
என்றழுதார் கண் கலங்க

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.